என் கல்லூரி நாட்களில் வகுப்புக்களுக்கு கட்டடித்துவிட்டு எம்.ஜி.ஆர்.
படங்களுக்கு போனது உண்டு என்று மனம் திறந்தது மாணவர்களிடையே தி.மு.க.
பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இளைஞர்களின்
யோசனைகளையும் பங்கேற்பையும் பெற புதுயுகச் சிற்பிகள் என்ற மாணவர் மன்றமும்
'ideas4tn.in' என்ற புதிய இணையப்பக்கம் உருவாக்கப்பட்டு தமிழகத்தின்
பல்வேறு கல்லூரி மாணவர்களும் சிறந்த யோசனைகள் தெரிவித்ததாகவும், அதன் இறுதி
நிகழ்ச்சியாக ஆறு மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தி.மு.க. பொருளாளர்
ஸ்டாலினுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை அருணை பொறியியல்
கல்லூரியில் நடைபெற்றது.
மாணவர்களிடம் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கலந்துக் கொண்டு
‘மாணவர்கள் சமூகத்துக்கு என்ன செய்யலாம் என்ற தலைப்பில் பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் சோம.வள்ளியப்பன், ''வையம் தலைமை கொள்’
என்றார் பாரதி இன்று சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளை தமிழர்கள்
அலங்கரிக்கிறார்கள். அதனால் அவர்களும் அவர்கள் நிறுவனமும் பலனடைகிறது.
சுனிதா நரைன் என்ற தனி ஒரு பெண் கோலா கம்பெனிகள் கோலாவில்
பூச்சுமருந்துகளை கலக்கின்றன என்று நிரூபித்தவர். சாந்தி ரங்கநாதன் இளம்
விதவையாக வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம் என யோசித்தார். குடி நோயாளிகளை
மீட்டெடுக்கும் டி.டி.கே. மருத்துவமனையை திருவான்மியூரில் தொடங்கி பல பேர்
வாழ்க்கைக்கு புத்துயிர் அளித்துள்ளார்.
சமூகத்துக்கு மகத்தான பணி செய்த மற்றொரு நபர் தசரத் மாஞ்சி. பீகார்
மாநிலம் கயா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். கடும் தண்ணீர் பஞ்சம்
உள்ள கிராமம். அவரின் மனைவி தண்ணீர் எடுக்க சென்று பாறைகளில் விழுந்து
இறந்துவிடுகிறார். இனி இந்த நிலை யாருக்கும் வர கூடாது என தண்ணீருக்கு
இடைஞ்சலாக இருந்த மலையை தனி ஒருவராக உடைத்து வழி அமைக்கிறார். அதற்காக அவர்
வாழ்நாளையே கொடுத்தார். எனக்கு ஒரு ப்ளேஸ்மெண்ட் ஆர்டர், கை நிறைய சம்பளம்
என்று இருந்திடாமல் சமூகத்திற்காக வாழ்வோம்" என்றார்.
இறுதியாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ''பல ஊர்களில்
இருந்து மாணவர்கள் வந்திருக்கிறீர்கள். உங்களை பார்த்து பொறாமைப்பட்டதால்
நான் வேட்டி சட்டையை விடுத்து பேண்ட் சட்டையில் வந்துவிட்டேன். என்னுடைய
கல்லூரி வாழ்க்கையில் நான் வகுப்புகளை, கட்டடித்துவிட்டு எம்.ஜி.ஆர்.
படங்களுக்கு போனதுண்டு. கல்லூரி காலங்களில் நான் பல நிகழ்ச்சிகளை
நடத்தியதுண்டு. அப்போது பல அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதித்ததுண்டு.
பேராசிரியர்களிடம் வம்பு பண்ணிய நாட்கள், எனக்கு நினைவுக்கு வருகிறது.
பேராசிரியர்களை போல வறுத்தெடுக்க விரும்பவில்லை. பெரும்பாலான இளைஞர்கள்
அரசியலை விட்டு தள்ளியே இருக்கிறீர்கள். உங்களுக்கும் அரசியலுக்குமான
இடைவெளியை குறைக்க வேண்டும். புதுயுகச் சிற்பிகளான நீங்களும், அரசியலில்
பங்கெடுக்க வேண்டும். அதற்கான வாய்ப்பாக உங்கள் யோசனைகளை கேட்டேன்.
விவசாயம், சுகாதாரம், தண்ணீர் பற்றாக்குறை, தொழில் முனைவோர்களை
உருவாக்குதல் என்று இங்கே மாணவர்கள் பல விஷயங்களை பேசினார்கள்.
வேலைவாய்ப்பை உருவாக்கும் மாநிலமாக தமிழகம் இல்லாமல் வேலை தேடிப்போகும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. இந்த நிலை தமிழகத்தில் நிலவக் கூடாது. இவைகளை நிறைவேற்ற துடிப்பு மிக்க இளைஞர்களான உங்கள் கையில் தான் உள்ளது. வேலை வாய்ப்பு பதிவை 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றது போல் மாற்றி அமைக்க வேண்டும்.
மின்வெட்டு போன்ற பல பிரச்னையால் தமிழ்நாட்டில் பல தொழில்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொழில்களுக்கு புத்துயிரூட்டி உலக அளவில் போட்டியிடக் கூடியவையாக மாற்ற வேண்டும். சுயதொழில் தொடங்க ஊக்கம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். தொழில் முனைவோருக்கு முதலீடு எளிதாக கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
ஆராய்சிக்கு என்று இந்தியாவில் செலவிடும் தொகை மிகமிகக் குறைவாக உள்ளது. பேஸ்புக், கூகுள், விப்ரோ, இன்போசிஸ் போன்றவை தமிழகத்தில் இருந்து உருவாக்கபட வேண்டும். வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றலை பெறுங்கள். சவாலை சந்தியுங்கள் புதுயுகமாக சிந்தியுங்கள்" என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறி உற்சாகமூட்டினார்.

No comments:
Post a Comment