சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Sept 2015

துணை வேந்தர் பதவி கொடுத்து சுப்பிரமணியன் சுவாமி வாயை அடைக்க பா.ஜ.க முயற்சி!

சர்ச்சையான கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தும் சுப்ரமணியன் சுவாமிக்கு துணை வேந்தர் பதவி கொடுத்து அவரது வாயை அடைக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி இறங்கியுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு அவரை துணைவேந்தராக நியமிக்க மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி ராணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஸ்ம்ரிதி ராணி, சுப்ரமணியன் சுவாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  தற்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு  சுதிர்குமார் சுபுரி என்பவர் துணை வேந்தராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்த துணை வேந்தரை நியமிக்க மனிதவளத்துறை அமைச்சகம் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக சுப்ரமணியன் சுவாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்த பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பின், அதிகாரப்பூர்வமாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவிக்கும்.

இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களுல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்லைகலைக்கழகமும் ஒன்று.ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட வளாகம் கொண்ட இந்த பல்கலைக்கழகம் மிகச்சிறந்த பொருளாதார மேதைகள், அறிஞர்களை உருவாக்கியுள்ளது. 

சென்னையை சேர்ந்த சுப்ரமணியன்சுவாமி அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர்.அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 

No comments:

Post a Comment