சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Sept 2015

ஹோட்டல் ஊழியரை அடித்து உதைத்த நடிகை பூஜா மிஸ்ரா (வீடியோ)

நடிகை பூஜா மிஸ்ரா ஹோட்டல் ஊழியரை அடித்து அவரின் மொபலை பறித்து உடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

  


நடிகை  பூஜா மிஸ்ரா அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது  வாடிக்கையாக உள்ளது. நேற்று மும்பையில் ஹோட்டல் ஊழியர் ஒருவரைத் தாக்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார். மும்பையில் உள்ள துவாரஹா ஹோட்டலில் தங்கி விட்டு, கட்டணத்தை செலுத்தாமல் பூஜா மிஸ்ரா வெளியேறியுள்ளார். ஹோட்டல் ஊழியர்கள் அவரை வெளியேற அனுமதிக்க மறுத்துள்ளனர். 

இதையடுத்து ஹோட்டல் ஊழியர்களுக்கும் பூஜாவுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் பூஜாவின் நடவடிக்கைகளை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பூஜா மிஷ்ரா அந்த ஊழியரின் செல்போனை பிடுங்கி தரையில் எறிந்து உடைத்தார். அதோடு அவரை சராமரியாக தாக்கவும் செய்தார். இதனை தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரிகளையும் பூஜா கடுமையாக தாக்கினார்.
ஹோட்டல் ஊழியரை பூஜா மிஷ்ரா தாக்கும் வீடியோ இணையதளங்களில் பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதையடுத்து பூஜா மிஷ்ரா மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், " நான் மன்னிப்புக்  கேட்டுக்  கொள்கிறேன். ஆனால் ஹோட்டல்   நிர்வாகம்  தனது விருந்தினர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று ஊழியர்களுக்குக்  கற்றுக்  கொடுக்க வேண்டும்"என்றார்.



No comments:

Post a Comment