சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Sep 2015

ரஜினியின் கபாலி படப்பிடிப்பு தொடங்கியது! (படங்கள்)

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகும் 'கபாலி' என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதையடுத்து, ரஜினியின் கெட்டப் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பல்வேறு கோணங்களில் ரஜினி படத்தை வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

இந்நிலையில், ஆயுதபூஜையை முன்னிட்டு கபாலி படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரை இந்த வார ஆனந்த விகடன் வார இதழ் அட்டையில் வெளியிடடு ரஜினி ரசிகர்களுக்காக முதலாவதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்நிலையில், ரஜினியின் கபாலி படத்தின் படப்பிடிப்பு இன்று காலை 9 மணியளவில் சென்னையிலுள்ள ரஷ்யன் கல்சர் சென்டரில் தொடங்கியது. முதல் காட்சியாக ரஜினிகாந்த் கோட்-சூட் அணிந்து கம்பீரமாக நடந்து வரும் காட்சி படமாக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னையிலுள்ள மோகன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடக்கிறது. அதையடுத்து, இவிபி-யில் மலேசியாவில் உள்ள வீடுகள், கடைகளைப் போன்று அமைத்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் மலேசியாவில் நடத்த கபாலி திரைப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கபாலி படத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக படக்குழுவினருக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

காபலி படத்தில் ரஜினியுடன், நடிகைகள் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, நடிகர் கலையரசன் உள்பட பலர் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தாணு தயாரிக்கிறார்.


No comments:

Post a Comment