சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Sep 2015

என் படத்துக்குப் பொம்பளைங்க வரவேண்டாம்- மிஷ்கின் அதிரடி

ஆர்.பி.ரவி இயக்கத்தில் இயக்குநர் பி.வாசு மகன் சக்தி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் தற்காப்பு. இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது.
விழாவில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், படத்தையும் படக்குழுவினரையும் வாழ்த்திவிட்டு தணிக்கைத்துறையால் கலைஞர்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள் என்று பேசினார். அவருடைய பேச்சில், இந்தப்படத்துக்கு யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். யுஏ மற்றும் ஏ சான்றிதழ் பெற்ற படங்கள் முப்பது சதவீத வரி கட்டவேண்டியிருக்கிறது. 

இன்றைய திரைப்படத்துறை இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அது பெரியஅடி. தணிக்கைத்துறையின் செயல்பாடுகளால் நாங்கள் சுதந்திரம் இழந்திருக்கிறோம். கெட்டவார்த்தைகள், வன்முறை இருந்தால் அதற்கு ஏ சான்றிதழ் என்று சொல்லிவிடுகிறார்கள்.

கெட்டவார்த்தை, வன்முறை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நான் ஒருவரைக் கோபம்கொண்டு பேசும் போது போடாசெல்லமே என்றா திட்டமுடியும்? நான் பிசாசு என்றொரு படமெடுத்தேன்.
எங்கம்மா, பிசாசு என்றால் பயங்கரமானது என்று பொய்க்கதைகளைச் சொல்லிவிட்டார். ஆனால் திரைப்படத்துறையில்தான் நிறைய பிசாசுகளை நான் பார்த்தேன். பிசாசு மிகவும் மென்மையானது அன்பானது அதைப்பார்த்து நீங்கள் பயப்படத்தேவையில்லை என்று படமெடுத்தேன். 

படத்தைப் பார்த்த தணிக்கைத்துறையினர், படம் நன்றாக இருக்கிறது ஆனால் படத்தில் பிசாசு இருப்பதால் படத்துக்கு ஏ என்று சொல்லிவிட்டார்கள். இதனால் ஏண்டா இப்படி எடுத்தே என்று பாலா என்னைத் திட்டினார். நாங்கள் படப்பிடிப்பு நடத்தும்போதே ஒரு காட்சி வைத்தால், இதை வெட்டிவிடுவார்கள் என்று கேமிராமேன் சொல்லுகிறார், அந்தஇடத்திலேயே எங்களுக்குச் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறது. 

ஒருவிசயத்தை எழுதும்போதே இப்படி வைத்தால் திட்டுவார்களே என்று அடித்துவிட்டு எழுதவேண்டியிருக்கிறது. எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அதற்கு, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஆவணசெய்யவேண்டும். 

இன்றைக்கு எல்லோரும் குழந்தைகளோடு படத்தைப் பார்க்கமுடியவில்லை என்று சொல்கிறார்கள். இந்த சினிமாமீடியம் என்பது குழந்தைகளுக்கானது அல்ல. எனவே திரையரங்குக்குக் குழந்தைகளோடு வராதீர்கள். இது வயதுவந்தவர்களுக்கான மீடியம். குழந்தைகளோடு கார்ட்டூன் படங்கள் பாருங்கள், அல்லது மைடியர்குட்டிச்சாத்தான் மாதிரியான படங்களுக்குப் போங்கள். 

நான் அடுத்து திகில் கலந்த ஏ படம்தான் எடுக்கப்போகிறேன், என் படத்துக்குப் பொம்ளைங்க வரவேண்டாம். தயவுசெய்துவரவேண்டாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நம் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள், அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்தத்துறையைப் பாதுகாக்கவேண்டியது அனைவருடைய கடமை என்று பேசினார்.No comments:

Post a Comment