சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Sep 2015

தோல்வியை சந்திக்காத வீரர் மேவெதர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு!

பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பிளாயிட் மேவெதர் குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். குத்துச்சண்டை வாழ்க்கையில் தோல்வியையே சந்திக்காத மேவெதர் இதுவரை வென்ற பரிசுத் தொகை மட்டும் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஆகும்.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த வெல்டர் வெயிட் குத்துச்சண்டை போட்டியில் மேவெதருடன் மற்றொரு அமெரிக்க வீரர் ஆந்த்ரே பெர்ட்டோ மோதினார். இந்த போட்டியில் 118-110, 117-111, 120-108 என்ற புள்ளி அடிப்படையில் மேவெதர் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் முடிந்தவுடன் அதே மேடையில் மண்டியிட்ட மேவெதர் தனது குத்துச்சண்டை வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்தார்.

தற்போது 38 வயதான மேவெதர் கடந்த 19 ஆண்டுகளாக தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 49 போட்டிகளில் களம் கண்டுள்ள அவர் ஒரு போட்டியில் கூட தோல்வி கண்டது இல்லை. இதில் 26 முறை எதிராளியை நாக்அவுட் செய்திருக்கிறார்.
ஓய்வு முடிவு குறித்து மேதெர் கூறுகையில், '' குத்துச்சண்டையில் எல்லா சாதனையும் நிகழ்த்தியாகி விட்டது. கடந்த 18 ஆண்டுகளாக உலகச சாம்பியனாக இருக்கிறேன். எனது ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது'' என்றார்.

குத்துச்சண்டை போட்டிகளின் மூலம் இதுவரை 5 ஆயிரத்து 300 கோடி ரூபாயை மேவெதர் சம்பாதிக்கிறார். இதில் கடந்த மே மாதத்தில் நடந்த மானி பாக்கியோவுடனான மோதலில் வென்றதால் மட்டும் 1200 கோடி ரூபாய் சம்பாதித்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment