சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Sep 2015

முதலீட்டாளர்கள் மாநாடு ஒப்பந்தங்கள்... உண்மை நிலை என்ன?

சென்னையில் நடந்து முடிந்த முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி என்று தமிழக அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் நிலையில், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரதமர் மோடி திரட்டிக்கொண்டு வந்த முதலீட்டைக்காட்டிலும், ஜெயலலிதா இருந்த இடத்திலேயே 2 நாட்களில் அதிக அளவு முதலீட்டை திரட்டிவிட்டதாக அம்மா புகழ் பாடிக்கொண்டிருக்கின்றனர் அதிமுகவினர்.
இதில் ஜெயலலிதாவும் தன் பங்கிற்கு மாநாட்டில் பேசியபோது, "குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டுவது மாநாட்டின் இலக்கு. ஆனால், 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வந்துவிட்டன. இதில் சரிபாதி தென் மாவட்டங்களுக்குப் போய்ச் சேரும்"  என அறிவித்தார். மேலும் 30 நாட்களுக்குள் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் கவனம் ஈர்த்தது. 

ஆனால் "கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டார்கள். ஆனால், அவற்றில் வந்தது சொற்ப சதவிகிதம்தான். 2016-ம் ஆண்டு தேர்தல் விளம்பரத்துக்காக ஆட்சியின் கடைசித் தருணத்தில், 'சாதிக்கப்போகிறேன்’ எனச் சவடால் பேசுவது நல்விளைவுகளை ஏற்படுத்துமா?" எனக் கேட்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி


கருணாநிதி குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில் காகித அளவில் இருக்கும் ஒப்பந்தம், முதலீடாக மாறுமா...தென்மாவட்டங்களின் கனவு நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்புடன் கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசு செய்து கொண்ட தொழில் ஒப்பந்தங்களையும், உண்மையில் எவ்வளவு தொகை முதலீடாக வந்தது என்பது குறித்தும் புள்ளி விவரங்களை பார்த்தால் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவதுபோன்று ஒப்பந்தம் வெறும் ஏட்டளவிலேயே இருந்துவிடுமோ என்ற கவலைதான் மேலோங்குகிறது. 

அந்த புள்ளிவிவர பட்டியல் கீழே...
கடந்த காலங்களில் இதேப்போன்று தொழில் முதலீடு செய்வதாக கூறி வந்த நோக்கியா நிறுவனம், குறைந்த விலையில் நிலம், மின்சாரம் என தமிழகத்தின் வளங்களை நன்கு அனுபவித்துவிட்டு, மாநில அரசுக்கு 2,430 கோடி ரூபாயும், மத்திய அரசுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாயும் வரி ஏய்ப்பு செய்துவிட்டு கம்பி நீட்டிவிட்டது. எனவே தற்போது தொழில் முதலீடு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்களில் ஏதேனும்  தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்தாலும், கடந்த கால நோக்கியா அனுபவங்களை மனதில்கொண்டு தமிழக அரசு செயல்படுவது உசிதம்! 

''முதலீட்டாளர்கள் தங்களுக்கு நேரடியாகப் பலன் வரும் என எதிர்பார்ப்பது அவர்கள் கடமை. அது பொருள் வாய்ந்ததாகவும், செய்யும் பணிகளில் நிறைவு தருவதாகவும் இருக்க வேண்டும். அந்த முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்பும் வருவாயும் தரமான வாழ்க்கைச் சூழலும் ஏற்பட வேண்டும்!'' என இம்மாநாட்டின் நிறைவில் ஜெயலலிதா கூறியதை,  செயலில் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும். 
 


No comments:

Post a Comment