சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Sept 2015

"பாலா படத்துல நானா ?” செம ஷாக் சிவா

ஸ்லிம் அண்ட் ட்ரிம் சிவகார்த்திகேயன். விகடன் மாணவப் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு, மிமிக்ரி கலாட்டாக்களுடன் செம ஷோ கொடுத்தார் சிவா!   
''மீசை எல்லாம் ட்ரிம் பண்ணி செம ஸ்மார்ட்டா இருக்கீங்களே... உங்களை 'தென்இந்திய ஷாருக் கான்’னு சொல்லலாமா?''
''ஓ... மீசை எடுத்துட்டாலே பாலிவுட்டா? நல்லா இருக்குங்க உங்க லாஜிக். ஷாருக் கானுக்குத்தெரியாத வரைக்கும் எப்படி வேணா வெச்சுக்கங்க. காசா... பணமா!''
''தமிழ் சினிமா ஹீரோக்களில் ரஜினி, கமலைத் தவிர, உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?''
''உங்க சூது புரிஞ்சுருச்சு பிரதர். அஜித் சார் பிடிக்குமா... விஜய் சார் பிடிக்குமானுதானே கேட்க வர்றீங்க. நீங்கல்லாம் நல்லா வருவீங்க தம்பி. எனக்கு ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும். இதை சும்மா ஃபார்மாலிட்டிக்கு சொல்லலை. விஜய் சார் தனக்கு வந்த வாய்ப்பை எல்லாம் அழகா, அட்டகாசமா, அதிரடியா எப்படிப் பயன்படுத்திக்கிட்டார்னு கத்துக்கிறது அவசியம். சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாம சாதிச்சு, அதைத் தக்கவெச்சுக்கிட்ட அஜித் சார்கிட்ட கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. இதனாலேயே எனக்கு ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும்!''
''ஒரு கூல் ட்ரிங்க் விளம்பரத்துல நடிக்க மறுத்துட்டீங்களாமே... உண்மையா?''
''நான் கூல் ட்ரிங்ஸ் குடிச்சு ஏழு வருஷங்கள் இருக்கும். நான் குடிக்காத ஒரு விஷயத்தை, 'நீங்க குடிங்க’னு எப்படிச் சொல்ல முடியும்? அப்படி நடிச்சு சம்பாதிச்ச பணத்தை வாங்கி, சந்தோஷமா செலவு பண்ண முடியாது. நிறைய டாக்டர்களே கூல் ட்ரிங்ஸ் ஆரோக்கியம் இல்லைனு சொல்றாங்க. அப்படி இருக்கும்போது, நான் சொல்லி ஒரு குழந்தை அந்த கூல் ட்ரிங்ஸ் குடிச்சுட்டாலும் தப்பாயிடுமே... அதான்!''

''திருச்சியில் சுத்திட்டு இருந்த சிவாவுக்கும்... இப்ப இருக்கிற சிவாவுக்கும் என்ன வித்தியாசம்?''
''குடியிருக்கிற வீடும்... போற காரும்தான் மாறியிருக்கு. மத்தபடி அதே சிவாதான். இப்பவும் பெரிய படங்களின் முதல் நாள் முதல் ஷோவுக்கு சத்யம் தியேட்டர் போயிருவேன். நல்ல சாப்பாடு கிடைக்கும்னு சொன்னா, எந்த ஹோட்டலுக்கும் போயிருவேன். என் கல்லூரி நண்பர்கள்தான் இப்பவும் என் நண்பர்கள். சினிமாவுல சதீஷ§ம், அனிருத்தும்தான் என் நண்பர்கள். முன்னாடி எப்பவும் ஜாலியா இருப்பேன். இப்போ கொஞ்சம் சீரியஸ் ஆகியிருக்கேன். அது மட்டும்தான் சின்ன வித்தியாசம்!''
''அனிருத்துக்கும் உங்களுக்குமான நட்பு பத்தி சொல்லுங்க?''
'' '3’ படத்துல இருந்து அனிருத் எனக்கு நல்ல பழக்கம். அவருக்கும் அப்பதான் சினிமாவுல கேரியர் ஆரம்பம். எனக்கும் அப்பதான் சினிமா பிக்கப் ஆச்சு. அதனால எந்த சினிமா நிகழ்ச்சிக்குப் போனாலும் ரெண்டு பேரும் பயந்து, பயந்தே நிப்போம். தனுஷ் சார்தான், 'ஏன் ரெண்டு பேரும் பின்னாடியே நிக்கிறீங்க. முன்னாடி வந்து நில்லுங்க’னு உற்சாகப்படுத்தி இழுத்துட்டுவருவார்.''
''தனுஷ்கூட உங்களுக்கு ஏதோ பிரச்னைனு பரபர தகவல்கள். சம்மந்தப்பட்ட ரெண்டு பேருமே அது சம்பந்தமா பேச மாட்டேங்கிறீங்க. உண்மை என்ன?''  
''தனுஷ் சாரை நான் எப்பவும் 'ஃப்ரெண்ட்’னு சொல்ல மாட்டேன். சினிமாவில் அவர் எனக்கு சீனியர். அந்த ரெஸ்பெக்ட் எப்பவும் மனசுல இருக்கும். அந்த மரியாதையோடுதான் அவர்கூடப் பழகுவேன். அவர் என் தோள்ல கை போட்டு அணைச்சுக்கிட்டா, அது அவர் பெருந்தன்மை. அதுக்காக நானும் அப்படி அவர் தோள் மேல கை போட முடியுமா என்ன? '3’ படத்துல நடிக்கிறப்போ தனுஷ் சாரை எப்படி ஆச்சர்யமாவும் மரியாதையாவும் பார்த்தேனோ, இப்பவும் அப்படித்தான் பார்க்கிறேன்... பழகுறேன்!''
''எந்த இயக்குநர் படத்தில் நடிக்க ஆசை?''
(பட்டென வருகிறது பதில்) ''ஷங்கர் சார்!''
''ஏன்?''
''அவர் கமர்ஷியல் படங்களை அவ்வளவு ஃபேன்டசியாத் தருவார். ஷங்கர் சார் படத்துல நடிக்கிறதுக்காக நடிப்பு, ஆக்ஷன், ஃபெர்பார்மென்ஸ், டான்ஸ்னு எல்லாத்தையும் ட்யூன் பண்ணிட்டே இருக்கேன். எதிர்காலத்தில் ஷங்கர் சார் படத்தில் எப்படியும் நடிப்பேன்கிற நம்பிக்கையில் ஓடிட்டிருக்கேன்!''
''விஜய்க்கு 'இளைய தளபதி’னு பட்டம் கொடுக்கிற மாதிரி உங்களுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்?''
''ஏங்க... நல்லாத்தானே போயிட்டிருக்கு! 'சூப்பர் ஸ்டார்’ங்கிறது ரஜினி சார் கேட்டு வாங்கின பட்டமா என்ன? அதது எப்பப்போ நடக்கணுமோ, அப்பப்போ தன்னால நடக்கும். அந்த மாதிரி பட்டம் வாங்கணும்னு எல்லாம் எனக்கு எந்த ஆசையும் கிடையாது. 'சிவகார்த்திகேயன்’கிற பேரே ஸ்கிரீன் முழுக்க பெருசா இருக்கு. அதுக்கு மேல பட்டம் வேணுமா என்ன? நீங்கள்லாம் அண்ணன்னு கூப்பிடுங்க. அது போதும் எனக்கு!''
''மணிரத்னம் 'ஒ காதல் கண்மணி’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்ல உங்களை நடிக்கக் கூப்பிடுறார். அதே சமயம் பாலா 'பரதேசி’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்ல உங்களை நடிக்கக் கூப்பிடுறார். யார் படத்துல நடிப்பீங்க?''
''மணிரத்னம் சார் படத்துலதான்!''
''ஏன்?''
'' 'ஓ காதல் கண்மணி’ மாதிரி ஒரு படத்துல நடிக்க ரொம்ப ஆசை. அது போக, 'பரதேசி’ மாதிரியான படத்துல எனக்கு நடிக்கவே தெரியாது. அதைவிட முக்கியம் அந்த 'அரை மண்டை’ மேக்கப் எனக்கு நல்லா இருக்குமானு நீங்களே யோசிச்சுப்பாருங்க. ஏற்கெனவே நாம ரொம்ப அழகு... அதுல பாலா சார் எப்படியும்  முடியை வெட்டியோ, ஜடா முடி மாதிரி வளர்க்கவெச்சோ, அழுக்குச் சட்டை மாட்டி விட்ருவாரு. நமக்கு எதுக்குங்க அதெல்லாம்?!''
''சினிமாவில் நீங்க தீவிரமாக் கடைப்பிடிக்கும் கொள்கை என்ன?''
''நிஜ வாழ்க்கையில் தம், தண்ணினு எனக்கு எந்தப் பழக்கமும் இல்லை. அதே மாதிரி சினிமாவிலும் புகைபிடிக்கிற மாதிரி நடிக்க மாட்டேன்னு தீவிரமா இருக்கேன். ட்ரிங்ஸ் பண்ற காட்சிகள்ல நடிக்க எனக்கு உடன்பாடு இல்லைதான். 'படத்தில் ஹீரோவுக்கு வேலை இல்லை... அப்பா-அம்மா சொல்ற பேச்சைக் கேட்க மாட்டானாம். ஆனா, ட்ரிங்ஸ் பண்ணாம மட்டும் இருப்பானாம்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்கும். இது என்ன லாஜிக்?’னு இயக்குநர்கள் கேட்கிறாங்க. அதனால முடிந்தவரை ட்ரிங்ஸ் காட்சிகளைக் குறைச்சு நடிச்சுட்டிருக்கேன். அதுக்கு மேல இயக்குநர்களை அழுத்தினா, 'சிவகார்த்திகேயன் இயக்குநர்களை டாமினேட் செய்கிறாராமே?’னு நீங்களே கேட்பீங்க... அதான்!''
''உங்க வாட்ஸ்அப் டி.பி, ஸ்டேட்ட்ஸ் என்ன?''  
''அப்பப்போ தலைவர் ரஜினி படம் வைப்பேன். மீதி நேரம் என் போட்டோதான். என் ஸ்டேட்டஸ்... 'உங்கள் பெற்றோர்களைச் சந்தோஷமா வெச்சுக்கங்க... உங்க வாழ்க்கையே சந்தோஷமா இருக்கும்’!''  
''ரஜினி-கமல், அஜித்-விஜய் மாதிரி, சிவகார்த்திகேயன்- விஜய் சேதுபதினு சொல்லலாமா?''
''ரெண்டு பேரும் இன்னும் நிறைய டிராவல் பண்ண வேண்டியிருக்கு. அதுக்குள்ள என்ன அவசரம்? ரஜினி - கமல் சார் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ். அதேபோலத்தான் அஜித்-விஜய் படங்களும். தியேட்டர் டிக்கெட்ல ஆரம்பிச்சு, கேன்டீன், சைக்கிள் டோக்கன் வரைக்கும் இண்டஸ்ட்ரிக்கு பெரிய மைலேஜ் கொடுக்கும். அந்த இடத்துக்கு வந்த பிறகுதான் நீங்க சொல்ற மாதிரி  யோசிக்கவே செய்யலாம். விஜய் சேதுபதி 'ஆரஞ்சு மிட்டாய்’ மாதிரியான வித்தியாசமான படங்களில் கவனம் செலுத்துறார். நான் 'ரஜினி முருகன்’னு என்டர்டெயின்மென்ட்ல தீவிரமா இருக்கேன். அதனால இந்த ஒப்பீடு இப்போ வேண்டாம்!''
'' 'ஜோதா அக்பர்’, 'பிகே’, 'திருஷ்யம்’... இந்த மூணு படங்கள்ல எந்தப் படத்துல நீங்க நடிப்பீங்க?''
'' 'பிகே’-தான்! எனக்கு மூட நம்பிக்கைகள் கிடையாது. அதனால அந்தப் படத்துல நடிக்க ஆசை. என்ன... அந்தப் படத்துல நடிக்கலாம்; ஆனா, இங்கே ரிலீஸ் பண்ண விட மாட்டாங்க!''
''உங்க முதல் சம்பளம் எவ்வளவு... இப்ப எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க?''
''ரொம்பக் கஷ்டமான கேள்விங்க. 'மெரினா’ படத்துல நடிக்க பாண்டிராஜ் சார் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். 'ரஜினி முருகன்’ ரிலீஸுக்கு வெயிட் பண்றேன். அடுத்த படத்துக்கு இன்னும் சம்பளம் முடிவு பண்ணலை. சரி... நீங்களே என் சம்பளம் எவ்வளவு இருக்கும்னு கணிச்சுச் சொல்லுங்களேன்..!'' என சிவா கேட்க, ''ஏழு கோடி!'' என்றார் ஒரு மாணவர். உடன் உற்சாகமான சிவா, ''ஏழு கோடியா..! ஹேஹேய்... அடுத்த கால்ஷீட் உங்களுக்குத்தான்!'' என வெடிச் சிரிப்பைப் பற்றவைத்தார்.  ''இப்போதைக்கு ரெண்டு, மூணு கோடி தாண்டிட்டேன். இதுக்கு அப்புறம் நான் கன்னாபின்னானு சம்பளம் வாங்குறேன்னு சொல்வாங்க. தயவுசெஞ்சு அதையெல்லாம் நம்புங்க. ஏன்னா, இதுவரை அவங்க கொடுத்ததை வாங்கிட்டிருந்தேன். இனிமே கேட்டு வாங்குவோமே!''
''சமூக வலைதளங்களில் நீங்க 'லக்’கில் ஜெயிச்சுட்டதா கிண்டல், கேலி செய்றாங்களே... கவனிக்கிறீர்களா?''
''நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன்னு எனக்குத் தெரியும். அதனால இந்தக் கிண்டல் பத்தி நான் கவலைப்படுறது இல்லை.  இன்னொரு விஷயம் என்னன்னா, நான் பல ஸ்டார்களை மிமிக்ரி பண்ணி சினிமாவுக்கு வந்தவன். இப்ப என்னைக் கிண்டல் பண்ற அளவுக்கு நான் வளர்ந்திருக்கேன். இது பெருமைதானே! என்னைப் பத்தின மீம்ஸ், காமெடி எல்லாத்தையும் பார்த்துருவேன். நிறைய மீம்ஸுக்குச் சிரிப்பேன். விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், 'இதையெல்லாம் பார்க்க அப்பா இல்லையே’னு நான் அழுததைக் கிண்டல் பண்ணப்ப வருத்தமா இருந்தது. அப்பா இல்லாம நான் எவ்வளவு சிரமப்பட்டு, பல பேர் உதவியோடு படிச்சு வந்திருக்கேன்னு எனக்குத்தான் தெரியும். இப்ப நான் பத்து குழந்தைகளுக்கு உதவி பண்ற அளவுக்கு வளர்ந்திருக்கேன்கிறதுதான் என் வெற்றி.  இப்ப என்னைக் கிண்டல் பண்றவங்க என்னைவிட அதிகமாக வளர்ந்து இன்னும் 100 பேருக்கு உதவி பண்ணட்டுமே!''
''உங்க வெற்றிக்கு உதவிய கல்லூரி நண்பர்கள் பற்றி?''
''அவங்க இல்லைன்னா நான் இல்லைங்க!  முதல்ல என்னை மேடை ஏத்திவிட்டது என் கல்லூரி நண்பர்கள்தான். 'உங்களுக்கு டைம்பாஸ் ஆகலைனு என்னை வெச்சு காமெடி பண்றீங்களா?’னு கேட்டேன். 'இந்த ஒரு மேடை ஏறு. இங்கே யாரும் கைதட்டலைனா,  அப்புறம் நாங்க எப்பவும் உன்னை மேடை ஏறச் சொல்ல மாட்டோம்’னு சொன்னாங்க. அப்படி நான் முதல் மேடை ஏறினப்போ, கை, கால் உதறி, மைக்கை ரெண்டு கையாலயும் பிடிச்சுட்டு, பயந்து பயந்து பேசினேன். ஆனா, ஒவ்வொரு வாய்ஸ்ல நான் மிமிக்ரி பண்ணும்போதும் கைதட்டல் அதிகமாகிட்டே இருந்தது.
அந்த மேடையில் என் நண்பர்கள் ஆரம்பிச்சு வெச்ச பயணம்தான் இப்போ இங்கே என்னைக் கொண்டுவந்திருக்கு. இப்பக்கூட என் படத்தின் கதைகளை என் நண்பர்கள்கிட்டதான் முதல்ல சொல்வேன். அவங்க கமென்ட்ஸ் வெச்சுத்தான் அதுல நடிக்கலாமா வேண்டாமானு முடிவெடுப்பேன். ஒருமுறை நான் மருத்துவமனையில் இருந்தப்ப, என் நண்பர்கள்தான் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து என்னைப் பார்த்துக்கிட்டாங்க. என் அம்மா எனக்கு என்னவெல்லாம் பண்ணுவாங்களோ, அதையெல்லாம் என் நண்பர்களும் பண்ணியிருக்காங்க. 'காக்கி சட்டை’ படத்துல 'ஐ’ம் ஸோ கூல்’ பாட்டை எழுதின அருண் ராஜா காமராஜ் என் நண்பன்தான். இன்னும் ரெண்டு பேர் ஐ.டி கம்பெனியில் இருக்காங்க. இன்னும் ரெண்டு பேர் தயாரிப்பாளர் ஆகப்போறாங்க. நான் இப்போ பெரிசா செட்டில் ஆன மாதிரி, என் நண்பர்களும் செட்டில் ஆகணும்னு எனக்கு ஆசை!''  

''அம்மா, அக்கா, மனைவி, பாப்பா... பத்தி சொல்லுங்க?''
''என் அம்மா நான் எது சொன்னாலும் நம்புவாங்க. 'அம்மா... எனக்கு ஆஸ்கர் விருது கொடுத்திருக்காங்க’னு சொன்னாக்கூட,  'ஆங்... கொடுப்பாங்க.... கொடுப்பாங்க. நீ நல்லாதானய்யா நடிச்சிருந்த’னு சொல்ற பாசப் பூந்தோட்டம்.  அக்கா டாக்டர். என் முதல் ரசிகை... முதல் விமர்சகர். வீட்டுக்காரம்மா என் தாய்மாமா பொண்ணுதான். அன்பு, பாசம், நேசம்னு விதவிதமா என்னைக் கொண்டாடுவாங்க. காலையில வீட்டை விட்டுக் கிளம்புறப்போ, 'எப்போ வருவீங்க?’னு கேட்பாங்க. 'சாயங்காலம் வந்துருவேம்மா’னு சொன்னா, 'சாயங்கா££லம் ஆகிருமா...’னு தேம்பித் தேம்பி அழுதுருவாங்க. அம்புட்டுப் பாசம். பொண்ணு ஆராதனா. ரெண்டு வயசு ஆகுது. செம வாலு. அவங்களுக்கு நான்தான் தமிழ் சொல்லிக் கொடுப்பேன்.  'ஆத்திச்சூடி’னு சொல்லச் சொன்னா, 'ஆஷிகி’னு சொல்வாங்க. எத்தனை தடவை சொன்னாலும் 'ஆஷிகி’தான். அந்த அளவுக்கு அந்த இந்திப் பாட்டு அவங்க மனசுல பதிஞ்சிருச்சு. மத்தபடி என்ன... எல்லா வீடுகள் மாதிரி சின்னச் சின்னச் சண்டை, பாச மழைனு எல்லாமே இருக்கும். அன்பான குடும்பம். அந்த விதத்தில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்!''


No comments:

Post a Comment