சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Sept 2015

என் கணவரை என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள்: அட்டாக் பாண்டி மனைவி கதறல்!

என் கணவரை காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள் என்று அட்டாக் பாண்டி மனைவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பிரமுகர் அட்டாக் பாண்டியை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் தமிழக காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். 

விமானம் மூலம் இன்று பலத்த பாதுகாப்புடன் மதுரை கொண்டு வரப்பட்ட அட்டாக் பாண்டி, அங்குள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலைையில், கணவர் அட்டாக் பாண்டியை பார்க்க அவரது மனைவி  தயாளு, மதுரை காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். ஆனால், கணவரை பார்க்க தயாளுக்கு அனுமதியளிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.


அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தயாளு, எனது கணவரை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே காவல்துறையினர் கைது செய்து விட்டனர். ஆனால், நேற்று கைது செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதனால் எனது கணவரை காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள் என்று அச்சம் தெரிவித்தார்.

முன்னதாக, அட்டாக் பாண்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி அவரது மனைவி தயாளு மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதில், தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில், என் கணவரை மும்பையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நில அபகரிப்பு வழக்கு சம்பந்தமாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் என் கணவரை காவல்துறையினர் தொந்தரவு செய்து வந்தனர். இதன் காரணமாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
2013ஆம் ஆண்டு பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் என் கணவரை குற்றவாளியாக காவல்துறையினர் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் தன்னை என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அவர் வீட்டுக்கு வராமல் தலைமறைவானார். காவல்துறையினர் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் என் வீட்டுக்கு வந்து, என் கணவரை ஒப்படைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும், நாங்களாக (காவல்துறையினர்) பிடித்தால் என்கவுன்ட்டர் செய்து விடுவோம் என்றும் மிரட்டினர். அவரை பிடிக்க முடியாததால் என் மீதும், என் தந்தை மீதும் பொய் வழக்குப்பதிவு செய்து காவல்துறையில் கைது செய்தனர். என் கணவரை கைது செய்தது சம்பந்தமாக காவல்துறையினர் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

என் கணவரை மிரட்டி அவர் சார்ந்துள்ள கட்சியை சேர்ந்தவர்களுக்கு பொட்டுசுரேஷ் கொலையில் தொடர்பு இருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்கவும், கொலை வழக்கில் சேர்க்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதுபோன்று வாக்குமூலம் அளிக்க என் கணவர் மறுக்கும் பட்சத்தில், அவரை என்கவுன்ட்டர் என்ற பெயரில் காவல்துறையினர் சுட்டுக் கொல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, என் கணவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மராட்டிய மாநில டி.ஜி.பி., தமிழக டி.ஜி.பி., மதுரை நகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு அவசர மனு அனுப்பி உள்ளேன். மதுரை நீதிமன்றத்தில் என் கணவரை ஆஜர்படுத்தும்வரை அவரை காவல்துறையினர் எந்தவித தொந்தரவும் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். அவரை, சட்டவிரோத காவலில் காவல்துறையினர் வைத்துள்ளதால் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.


இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment