சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Sept 2015

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3000 செவிலியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கருணாநிதி தகவல்

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 3 ஆயிரம் செவிலியர்களை தமிழக அரசு டிஸ்மிஸ் செய்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை: 


தமிழக அரசில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்றாயிரம் செவிலியர் ‘‘டிஸ்மிஸ்’’ செய்யப்பட்டிருக்கிறார்களாமே?.


தமிழக அரசு மருத்துவமனைகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் வட்டார சுகாதார அரசு மருத்துவமனைகளில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 3 ஆயிரம் செவிலியர் திடீரென ‘‘டிஸ்மிஸ்’’ செய்யப்பட்டிருக்கிறார்கள். 

கடந்த 7ஆம் தேதிதான் முதலமைச்சர் ஜெயலலிதா, மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு நியமன ஆணை வழங்கினார். வழங்கிய ஒருசில நாட்களுக்குள்ளாகவே ஏற்கனவே பணிபுரிந்து வந்த 3 ஆயிரம் செவிலியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அவர்களது குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி நிர்கதிக்கு ஆளாகி நடுத்தெருவில் நிற்கக்கூடிய பரிதாபமான நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே செவிலியர்களையும், மக்கள் நலப்பணியாளர்களை போல நடத்தாமல், தமிழகத்தின் பெண் முதலமைச்சர், பெண் செவிலியர்கள் மீது கருணையும் அக்கறையும் காட்டி, ஒரு கையால் கொடுப்பதும், மறு கையால் பிடுங்கிக் கொள்வதும் என்ற நிலையை மாற்றி, அவர்களைப் பணியில் இருந்து ‘‘டிஸ்மிஸ்’’ செய்யும் நடவடிக்கையைத் திரும்ப பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மீண்டும் அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கிட நடவடிக்கை எடுத்து, மூன்றாயிரம் குடும்பங்களின் வாழ்க்கை நிலையைக் காப்பாற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.



No comments:

Post a Comment