சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Sep 2015

கலாம் எண்ணம்போல் எடை குறைவான செயற்கை கால்கள் வழங்க மாற்றுதிறனாளிகள் கோரிக்கை!

கலாம் எண்ணம்போல் எடை குறைவான செயற்கை கால்களை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான யாத்திரைவாசிகள், சுற்றுலா பயணிகள் அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மாற்று திறனாளிகள் அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று ராமேஸ்வரம் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் பேய்கரும்பில் உள்ள அப்துல்கலாமின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த மரக் கன்றுகளை, கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருந்த பொது மக்களுக்கு வழங்கினர்.
மாற்று திறனாளிகள் அமைப்பின் தலைவர் தீபக் இது குறித்து கூறுகையில, ''போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்த கலாம், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை கால்களின் எடை அதிகமாக இருப்பதை அறிந்து வருந்தினார். அதன் விளைவாக எடை குறைந்த செயற்கை கால்களை உருவாக்கி தந்தார்.

மாற்று திறனாளிகளின் வேதனையை உணர்ந்து மாற்று செயற்கை கால் உருவாக்கி தந்த அந்த மகத்தான மனிதரின் குறிக்கோள்களில் மரம் வளர்ப்பதும் ஒன்று. அதனை நிறைவேற்றும் வகையில் எங்களால் இயன்ற அளவு மரக் கன்றுகளை நட்டு வருகிறோம். அவரின் நினைவிடத்திற்கு வந்ததன் நினைவாக இங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கும் மரக் கன்றுகளை வழங்கியிருக்கிறோம்.

அய்யா கலாமின் எண்ணத்தினை நிறைவேற்றும் வகையில் மாற்று திறனாளிகள் அனைவருக்கும் எடை குறைவான செயற்கை கால்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.


No comments:

Post a Comment