இன்னும் இரண்டு மாதத்தில் நல்ல செய்தி சொல்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி.
தி.மு.க.வில் தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்து வந்த மு.க.அழகிரி, கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முயன்றதாக கூறி அவரை கட்சியில் இருந்து நீக்கியது திமுக தலைமை.
இதைத் தொடர்ந்து, தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்ததோடு, தனது சகோதரரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
அண்மையில் லயோலா கல்லூரியின் மக்கள் ஆதரவு மையம் நடத்திய கருத்துக்கணிப்பில், அடுத்த முதல்வராகும் வாய்ப்பு மு.க.ஸ்டாலினுக்கு 28 சதவீதமும், கருணாநிதிக்கு 21.33 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக கூறியது. அப்போதும், ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார் அழகிரி.
இந்நிலையில், இன்னும் இரண்டு மாதத்தில் நல்ல செய்தி சொல்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அழகிரி.
சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அழகிரி, தி.மு.க என்றால் கருணாநிதிதான் என்று தான் கூறியதற்கு இதுவரை பதில் வரவில்லை. இன்னும் 2 மாதத்தில் நல்ல செய்தி கூறப்போவதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment