சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Sept 2015

அட்டாக் கைதானது எப்படி?

மதுரையில் பரபரப்பு ஏற்படுத்திய பொட்டுசுரேஷ் கொலையில் தொடர்புடைய அட்டாக் பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக காவல்துறையை பற்றி தொடர்ந்து கடந்த சில நாட்களாக எதிர்மறையான செய்திகள் வந்து கொண்டிருந்த சூழலில், ஆச்சரியமான தகவலாக வந்துள்ளது அட்டாக் பாண்டி கைது விவகாரம்.


தமிழகத்தையே அதிர வைத்த அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டுசுரேஷ் கொலை வழக்கில், சுமார் 3 வருடங்களாக  தேடப்பட்டு வந்தவர் திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி. அவர் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றிய முறையான தகவலை காவல்துறை மீடியாக்களுக்கு தெரிவிக்கவில்லை. அதே சமயம் கைது தகவலை மறுக்கவுமில்லை. 


காவல்துறையினரால் கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்த அட்டாக் பாண்டியின் ஆதரவு பிரமுகரின் செல்லுக்கு வந்த புதிய  நம்பரை டிரேஸ் செய்ததில்தான் கைது சம்பவம் அரங்கேறியதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்பிட்ட அந்த எண் மும்பையிலிருந்து வந்ததை கன்பார்ம் செய்த போலீசார், உடனே அதிலுள்ள லொகேஷனை வைத்து மதுரை  டெபுடி கமிஷனர் சமந்த்ரோகன் தலைமையில் கடந்த 20 ஆம்தேதி மும்பைக்கு அனுப்பி,  அட்டாக்கை கைது செய்த வைத்ததாக சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி, உடனே மதுரைக்கு கொண்டு வரப்படுகிறாரா, அல்லது அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா என்ற தகவலை காவல்துறை பகிரங்கமாக இன்னும் தெரிவிக்கவில்லை. 

அட்டாக் கைது விவகாரம் வேறு வகையிலும் பேசப்படுகிறது. வரும் 25 ஆம் தேதி நமக்கு நாமே திட்டம் எனும் பேரில் மு.க.ஸ்டாலின் மதுரை நகரை சுற்றி வர இருக்கிறார். இதற்கு கவுன்டர் கொடுக்கும் வகையில் அட்டாக் பாண்டி கைதை காட்டி அவர்களை வாயடைக்க வைக்கவே, அரசு கைது சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறது என்கிறார்கள். காரணம் கடைசி நேரத்தில் அட்டாக் பாண்டி, ஸ்டாலின் அணிக்கு தாவியிருந்தார். 

தற்போது அவர் கைதாகியுள்ள நிலையில், பொட்டு சுரேஷ் கொலையிலுள்ள மர்மங்களுக்கு விடை கிடைக்குமா என்று எல்லோரும் எதிர்பார்க்கும் அதே வேளையில், அட்டாக் கைது செய்தியால் சில திமுக புள்ளிகள் அதிர்ந்து போயுள்ளதும் உண்மை. 




No comments:

Post a Comment