சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Sept 2015

'இன்று நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ... அப்படியே நாளை உங்களுக்கு நடக்கும்!'

''மக்களுக்கு பஞ்சமில்லாம நாலு மகனுவொள பெத்தேன். நாலு பிள்ளைய பெத்தா நடுச்சந்தியிலதான் சோறுன்னு ஊருல ஜனங்க சொல்லும். அது பொய்யாகாம, எம்பிள்ளைங்களும் என்ன இப்படி ஏலம் போட விட்டுபுட்டானுவ'' - இதுதான் இன்றைய முதியோரின் நிலை.

கூட்டுக்குடும்பம் என்பது புத்தகங்களில் மட்டுமே பார்க்கப்படும் ஒரு விசயமாக மாறப்போகிறது. கூட்டுக்குடும்ப முறையில் சில மனத்தாங்கல்கள் இருந்தாலும் பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் வாழப் பிரச்சனையில்லாமல் இருந்தார்கள்.

தற்போது தனிக் குடும்பம் ஆனதால் இறுதிக் காலத்தில் யாரிடம் இருப்பது? என்ற பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. கூட்டுக்குடும்ப முறை அழிந்ததால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வயதானவர்களும், வருமானம் இல்லாத பெற்றோர்களும் தான். இவர்களின் நிலை தான் கேள்விக் குறியாகியுள்ளது.
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பிழைப்புத் தேடி தங்களை விட்டு பிரியும் போது மிகவும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
தனியாக இருப்பது என்பது 45 வயதிற்கு மேல் சவாலான விஷயம். குறிப்பாக ஆண்களுக்கு தனியாக இருந்தால், கண்டதையும் நினைக்கத் தோன்றும்.

வேறு வழிகளில் தங்கள் மனதை திருப்பிக் கொள்கிறவர்களுக்குப் பிரச்னையில்லை ஆனால், நினைத்துப் புலம்பிக்கொண்டு இருந்தால், மன உளைச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படும்.

பார்த்துக் கொள்ள யாரும் இல்லை, வருமானம் இல்லை என்ற நெருக்கடியான நிலை வரும் போது மன அழுத்தம் அதிகரிக்கும். ஒவ்வொரு செலவிற்கும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இளைஞர்களே, நம்மை வளர்த்த பெற்றோர்களையும், பாசம் காட்டிய தாத்தா பாட்டிகளையும் புறக்கணிக்காதீர்கள், குறிப்பாக, மரியாதைக் குறைவாக நடத்தாதீர்கள். அதே போலப் பெரியவர்களும் பிள்ளைகளின் நிலை உணர்ந்து அனுசரித்துச் செல்லுங்கள்.

நீங்கள் தற்போது எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதே தான், நாளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளால் நடக்கும்.



No comments:

Post a Comment