இது போன வாரம்
"என் மக்களை கரண்ட் பாக்ஸ்க்குள் கையவிட்டு மின்சாரம் இருக்கான்னு பார்க்க சொல்றதுக்கு நீ ஒரு அமைச்சரா? " என்று மதுரையில் நடைபெற்ற விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழக மின்சாரத்துறை அமைச்சரை விளாசி தள்ளினார்.
மதுரை அருகே உள்ள பாசிங்காபுரத்தில் நேற்று இரவு தே.மு.தி.க. சார்பில், 'மக்களுக்காக மக்கள் பணி' என்ற பெயரில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
ஏழை மக்களுக்கு உதவிகளை வழங்கி விஜயகாந்த் பேசும்போது, ''மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு தமிழக அரசு தேவையற்ற இடையூறுகளை தருகிறது. மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராத மதுரை மாநகராட்சிக்கு, தமிழக அரசு விருது வழங்கி உள்ளது.
தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நேரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தேவையா?
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை, தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கரண்ட் பாக்ஸ்க்குள் கையைவிட்டு பாருங்கள் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சொல்கிறார். என்ன லந்தா... யாரை பாத்து கரண்ட் பாக்ஸ்குள்ள கைய விடுன்னு சொல்ற... என் மக்களை பார்த்து நீ என்னையா கரண்ட் பாக்ஸ்க்குள்ள கைய விட சொல்றது. இதை சொல்றதுக்கு நீ ஒரு அமைச்சரா?" என்று விளாசி தள்ளினார்.
No comments:
Post a Comment