சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Sept 2015

'பி.ஆர்.பி அலுவலக பாதாள அறைக்குள் சென்ற மனநோயாளிகள் திரும்பியது இல்லை!'

பி.ஆர்.பி. அலுவலகத்தின் பாதாள அறைக்கு கொண்டு செல்லப்பட்ட மனநோயாளிகள் பலரை நான் திரும்ப பார்த்தது இல்லையென்று நரபலி புகாரளித்த டிரைவர் சேவற்கொடியோன் கூறியுள்ளார்.
மனநோயாளிகள் கொன்று புதைக்கப்பட்ட இடம் உள்படம் :சேவற்கொடியோன்

இது குறித்து சேவற்கொடியோன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பி.ஆர்.பி நிறுவனத்தில் டிரைவராக இருந்த போது, அங்கு பெரிய பொறுப்புகளில் இருந்த சிலர் ரோட்டில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை எனது வாகனத்தில் கொண்டு வந்து ஏற்றுவார்கள். போகிற பாதையில் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க சொல்வார்கள் பின்னர் அவர்களை மேலவளைவு கிராமத்தில் வீரகாளியம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள பி.ஆர்.பி. முதலாளி பழனிச்சாமி அலுவலகத்துக்கு கொண்டு வருவேன். 

அந்த அலுவலகத்தில் ஒரு பாதாள அறை உள்ளது. அங்குதான் மனநலம் பாதித்தவர்களை அடைத்து வைப்பார்கள். அந்த அறைக்கு செல்பவர்கள் பலரை நான் திரும்ப பார்த்தது இல்லை. இவர்களையெல்லாம் ஏன் இங்கு கொண்டு வருகிறீர்கள்? என்று ஒரு முறை நான் கேட்டேன். அதற்கு  நம் முதலாளி இந்த நோயாளிகளை குணப்படுத்தி அனுப்புவதாக பதில் வந்தது.

கடந்த 2005ஆம் ஆண்டில் ஒரு முறை மலம்பட்டி ஆற்று குவாரியில் நிரம்பியிருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக ஆயில் மோட்டாரை ஜீப்பில் கொண்டு சென்றேன். பி.ஆர்.பி அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அய்யப்பன் என்னுடன் இருந்தார். அப்போது எதிரே ஒரு ஜீப் வந்தது. அந்த ஜீப்பில் இரு மனநோயாளிகள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்ததை நான் பார்த்தேன். அந்த ஜீப்பை நான் பார்ப்பதை கண்ட  அய்யப்பன் என்னை கன்னத்தில் அறைந்தார். 

பின்னர் மலம்பட்டி சுடுகாட்டில் உள்ள பனைமரம் அருகே ஜே.சி.பி. எந்திரத்தால் குழி தோண்டினர். கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த உடல்களை அங்கு புதைத்தனர். தற்போது அந்த இடத்தைதான் நான் அடையாளம் காட்டினேன். 

தோண்டப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்களின் துணிகளை பார்க்கும் போது நான் கூட்டி வந்தவர்களாகவே தோன்றுகிறது. இந்த உடல்கள் அவசரம் அவசரமாக புதைக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது நான் அப்படிதான் நினைக்கிறேன். நான் ஓட்டிய ஜீப்பில் 12 மனநோயாளிகளை அழைத்து வந்தேன். அதில் இருவர் புதைக்கப்பட்ட இடம் தான் எனக்கு தெரியும்" என்றார்.



No comments:

Post a Comment