சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Sept 2015

பிசினஸில் ஜெயிக்க வைக்கும் யுத்தகள யுக்திகள்!

புத்தகத்தின் பெயர்: விக்டரி (VICTORY)
ஆசிரியர்: ப்ரையன் ட்ரைசி (Brian Tracy)
பதிப்பாளர்: Amacom
ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம், ப்ரையன் ட்ரைசி எழுதிய ‘விக்டரி’ எனும் மிலிட்டரியின் ஸ்ட்ராட்டஜிகளை உபயோகித்து பிசினஸ் மற்றும் பெர்சனல் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகமாகும்.
மிலிட்டரி கமாண்டர்கள் நாட்டில் இருந்துகொண்டே யுத்த களத்தில் எந்த விதமான யுக்திகளை பயன்படுத்தி  வெற்றி பெறமுடியும் என்பதை எப்படி முழுமை யாக உணர்ந்து செயல்படுகிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

பல்வேறு நிறுவனங்களின் எக்ஸிக்யூட்டிவ்களுடன் பழகியபோது இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ப்ரையன் ட்ரைசி கண்டறிந்த உண்மை என்ன வெனில், பெரிய அளவில் வெற்றி பெற்ற கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ்கள் பலரிடம் மிலிட்டரி கமாண்டர்களின் குணம் முழுமையாக இருந்ததைக் கண்டதே.
நியூயார்க்கில் ஒரு மேன்ஷனில் தங்கி சாதாரண வேலையில் இருந்த பள்ளிப் படிப்பை மட்டும் முடித்திருந்த ஒரு மனிதன் குறித்த கற்பனை கதையில் இருந்து ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சாதாரண வேலைக்குச் சென்றுகொண்டு, நாமெல்லாம் பெருசா ஒன்றும் சாதிக்க முடியாது என்ற எண்ணத்துடன் ஒரு மேன்ஷனில் தங்கியிருந்தான் அவன். அந்த மனிதனின் வாழ்க்கையில் அங்கு புதியதாக வந்த வயதான மனிதரால் பெரியதொரு மாற்றம் வந்தது. புதியதாக வந்த அந்த பெரியவர் அவனிடம் கொஞ்சம் பழகிய பின்னர், 'நீ முற்பிறவியில் யார் தெரியுமா? பல போர்க்களங்களை வென்ற நெப்போலியன் போனபார்ட் என்று சொல்கிறார்.
முதலில் அவன் அதை நம்ப வில்லை. தினமும் நெப்போலியன் போர் புரியும் தன்மை மற்றும் அவருடைய போர்த்திறமை குறித்த ஒரு தகவலைச் சொல்லி அவனுடைய குணத்தையும் இவனுடைய குணத்தையும் ஒப்பிட்டு சொல்ல ஆரம்பித்தபின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இளைஞன் நம்ப ஆரம்பிக்கிறான். அதன்பின் அவனுள் நிறைய மாறுதல்கள் உண்டாகிறது.
வேலை பார்க்கும் இடத்தில் நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறான். அதனால் நிறைய முடிவுகளை எடுக்கிறான். படிக்க ஆரம்பிக் கிறான். அவனது பயம் தெளிகிறது. அவனுடைய பாஸ்கள் அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பிக் கின்றனர். புதிய வேலைகளைத் தருகின்றனர். ஒவ்வொரு புதிய வேலையையும் ஒரு புதிய வாய்ப்பாகவே பார்க்கிறான் அவன். படிப்படியாக பதவியில் உயர்ந்து நிர்வாகத்தின் உச்சத்துக்கே வந்துவிடுகிறான் என்கிறது அந்தக் கதை. இது கதையோ, நிஜமோ, அது நமக்கு சொல்வதென்ன? நீங்கள் ஒரு தலைவனைப்போல் நினைத்துக் கொள்ளவும் நடந்து கொள்ளவும் ஆரம்பித்தால் உங்களைத் தலைமைக் குணம் வந்தடைகிறது என்பதேயாகும்.
போரில் பல்வேறு குழப்பங் களுக்கு நடுவே யாரோ ஒருவர் எடுக்கும் துணிச்சலான மற்றும் சரியான முடிவுதான் வெற்றியை பெற்றுத் தருகிறது இல்லையா? அந்த நபருக்கு எப்படி அந்த முடிவெடுக்கும் குணம் வருகிறது? போரின் குழப்பமான சூழ்நிலையே அந்த அளவுக்கு அவரைப் புடம் போடுகிறது என்கிறார் ஆசிரியர்.
இந்தப் புத்தகத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும்  போர்க்கள யுக்திகளில் 12 யுக்திகளைத் தொகுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
முதலாவதாக, சரியான நோக்கத்தை அறிந்து வைத்துக் கொண்டு செயல்படுதல் என்பதை. ராணுவம் நடத்தும் போரானாலும் சரி, சராசரி மனிதனுடைய வாழ்க்கையானாலும் சரி, நமக்கு என்ன தேவை, நாம் சென்றடைய வேண்டிய எல்லை எது எனச் சரியாக வகுத்துக் கொண்டால் மட்டுமே அதனை அடைய முடியும் என்கிறார் ஆசிரியர்.
எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டால் மட்டும் போதுமா? செயல்பாடு (ஆக்‌ஷன்) வேண்டுமே? அதுதான் இரண்டாவது யுக்தி. வாய்ப்பு கிடைக்கவேண்டுமே என்கிறீர் களா?  வாய்ப்புகளை நானே அல்லவா உருவாக்கிக் கொள்கிறேன் என்றார் நெப்போலியன்.
போரை துவங்கி விட்டால் வெற்றி பெறாமல் நிறுத்தமுடியாது இல்லையா? போரில் வாய்ப்பு களை உருவாக்கிக் கொள்ளத்தான் வேண்டும். போர் நடக்கும்போது தெளிவாக எதுவும் தெரியாது. சந்தேக மேகங்களே சூழ்ந்து கொண்டிருக்கும்.
சந்தேகம் அதிகமாக இருக்கும் போதுதான் துணிந்து இறங்கி தாக்க வேண்டியிருக்கும். கிடைத்த வாய்ப்பை விட்டுவிடா மல், இல்லாத வாய்ப்பை உருவாக்கி வெற்றி பெறுவதே வாழ்க்கை என்கிறார் ஆசிரியர்.
மூன்றாவதாக, தலைமை!   போர் என்று வந்துவிட்டால்,  அத்தனை படைகளையும் திரட்டிப் போராட வேண்டியி ருக்கும். ஏனென்றால் சிலசமயம் ஒரே ஒரு பட்டாலியனே வெற்றி/தோல்வியை நிர்ணயிப்பதாய் அமைந்துவிடக்கூடும். வாழ்க்கையோ, தொழிலோ, போரோ கையிலிருக்கும் எல்லாப் பலத்தையும் திரட்டிப் போராடுவதே நல்லது என்கிறார் ஆசிரியர்.
நான்காவதாக, போருக்கு என முன்கூட்டியே என்னதான் நன்றாகத் திட்டமிட்டாலும் கடைசியில் மிகவும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால், பல போர்களில் கடைசியில் கைதருவது முழு ஈடுபாட்டுடன் கிடைக்கும் சுதந்திரமான செயல்பாடே என்கிறார்.
சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும், அப்படி மாறினால் வரும் முடிவுகள் குறித்துக்  கவலைப்  படாதீர்கள் என்றும் தைரியம் சொல்லும் நிலையுமே வாழ்விலும், தொழிலிலும், போரிலும் வெற்றியைக் கொடுக்கும் என்கிறார் ஆசிரியர்.
ஐந்தாவதாக ஆசிரியர் சொல்வது... எதிரியைப் பற்றியும் உங்களைப் பற்றியும் முழுமை யான புரிதலுடன் இருங்கள் என்பதைத்தான். என்ன செய்கிறோம், எதிராளியின் நடவடிக்கைகள் என்ன என்று தெரிந்துவைத்துக் கொள்வதே சிறந்த வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிறார்.
எதிராளியின் எண்ணம் மற்றும் திட்டத்தை அறியவும்/யூகிக்கவும் முடிந்தால் வெற்றி சுலபம்  என்று சொல்கிறார் ஆசிரியர். அதையும் தாண்டி போர் நடக்கும் களம் (வியாபாரத் தில் உங்கள் பொருளுக்கான சந்தைக் களம்) குறித்தும் நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
ஆறாவதாக ஆசிரியர் சொல்வது, உங்களுடைய டீம் அனைத்துமே ஒரே நோக்கத்தில் செயலாற்றும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதைத் தான். ஏழாவதாக, ஒரே தலைவனின் கீழே மொத்த படையும் செயலாற்றவேண்டும் என்பதன் அவசியத்தை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
எட்டாவதாக ஆசிரியர் சொல்வது, நேரடியானதொரு அணுகுமுறையைக் கொண்டு செயல்படுவதை. போரில் வெற்றி பெற வேகம், இலகுவான முறை மற்றும் தைரியம் என்ற மூன்றுமே பெருமளவில் உதவும்.
அதனால் குழப்பமில்லாதத் திட்டங்களையும் அனைவரும் புரிந்துகொள்ளும் படியிலான ஆர்டர்களையும் மட்டுமே தாருங்கள் என்கிறார்.
ஒன்பதாவதாக ஆசிரியர் சொல்வது, தொழிலோ, போரோ ஒரு எல்லையைத் தொட்ட பின்னர் அந்த எல்லையைத் தக்கவைத்துக்கொள்ள தேவை யான நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்கவேண்டும் என்பதைத்தான்.
பத்தாவதாக, போர்க் களத்தில் முடிந்தளவுக்கு  படைகளைச் செலவிடாது இருப்பது நல்லது என்பார்கள். அதேபோல, பிசினஸிலும் குறைவான செலவிலேயே காரியங்களை நிகழ்த்துவது நல்லது என்கிறார் ஆசிரியர்.

பதினோராவதாக ஆசிரியர் சொல்வது, போர்க்களத்தில் எதிரி எதிர்பாராதபோது தாக்குங்கள் என்பார்கள். அதே போல்தான் தொழிலிலும். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விஷயங்களைச் செய்யுங்கள் என்கிறார். இப்படி செய்வதன் மூலம் போட்டி யாளர்கள் சுதாரித்துச் செயல்பட முடியாமல் போகும். அதனாலேயே வெற்றி என்பது உறுதியாகிவிடும் என்கிறார்.
பெரும்பாலான போர்களில் வெற்றி பெற்றபின்னர் அதை தொடர்ந்து கண்காணிக்காமல் இருந்துவிடுவார்கள். இதனாலேயே எதிரிகள் மீண்டும் இணைந்து தாக்குதல் தொடுத்து நிலைகுலைய வைப்பார்கள்.
வெற்றி கிடைத்துவிட்டதே என இறுமாப்புக் கொள்ளாமல் அந்த வெற்றியை வாய்ப்பாகப் பயன்படுத்தி எதிரியை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டி வெற்றியை நிரந்தரமானதாக நிலை நிறுத்திக்கொள்ளுங்கள் எனச் சொல்கிறார் ஆசிரியர்.
வேலை மற்றும் தொழிலில் சாதிக்க நினைப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது.


No comments:

Post a Comment