சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Sep 2015

வெளிநாட்டு சுற்றுப்பயணம் : நேருவுக்கும் மோடிக்கும் இப்படி ஒரு ஒற்றுமை!

பிரதமர் நரேந்திர மோடி பதவிக் காலம் முடிவதற்குள் ஒரு நாடு பாக்கி வைக்காமல் சுற்றி பார்த்து விட வேண்டுமென்று அலைகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் அசரப் போவதில்லை போலும்.

தற்போது பிரதமரின் மற்றொரு வெளிநாட்டு பயணம் தொடங்கியுள்ளது. இந்த முறை அமெரிக்காவுக்கு செல்லும் வழியில், ஸ்காட்லாந்து நாட்டுக்கு பிரதமர் விசிட் அடித்துள்ளார். இதில் என்ன பெருமை என்கிறீர்களா?  1956ஆம் ஆண்டுக்கு பிறகு அயர்லாந்து நாட்டுக்கு,   இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது  இதுவே முதல் முறை. அதாவது ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு,  60 ஆண்டுகளுக்கு பின் அயர்லாந்து சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். இதனால்தான் பிரதமர் மோடியின் வருகையை 'வரலாற்று நிகழ்வு' என்று அயர்லாந்து அரசு குறிப்பிட்டுள்ளது. 

டப்ளின் சிட்டி சென்டர் பகுதியில் உள்ள அயர்லாந்து பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற பிரதமர் மோடிக்கு,  அந்நாட்டு பிரதமர் என்ட கென்னி சிறப்பான வரவேற்பளித்தார். மோடி என்று பெயர் பொறிக்கப்பட்ட அயர்லாந்து கிரிக்கெட் அணியின் ஜெர்சியை நினைவுப்பரிசாக அவருக்கு வழங்கினார். அயர்லாந்து தேசிய விளையாட்டான ஹர்லிங்கில்  பயன்படுத்தப்படும் மட்டை, பந்து பற்றியும் பிரதமர் மோடிக்கு என்ட கென்னி விளக்கமளித்தார். பின்னர் மோடிக்கு அங்கேயே மதிய விருந்து அளிக்கப்பட்டது. 
அயர்லாந்து நாட்டில் 26 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் 17 ஆயிரம் பேர் அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள். பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையிலும், மருத்துவத்துறையிலும் பணி புரிகின்றனர். மருத்துவத்துறையில் உயர்படிப்பு படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், அயர்லாந்து பல்கலைக்கழகங்களை தேர்வு செய்வது அண்மைக்காலங்களில் அதிகரித்து  வருகிறதுகி. இந்நிலையில் டப்ளினில் உள்ள ஹோட்டல் ஒன்றில், இந்திய சமூகத்தின் சார்பிலும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அயர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் பாகங்கள், சாப்ட்வேர் பொருட்கள், மருந்து பொருட்கள் அதிகளவில் இறக்குமதியாகின்றன. இந்தியாவில் இருந்து முக்கியமாக துணிகள், இலகு ரக எந்திரங்கள், கெமிக்கல் பொருட்கள் அதிகளவில் அயர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அயர்லாந்துக்கு சென்ற  பிரதமருடன் சன் பார்மா, ஹெச்.சி.எல்., விப்ரோ, டி.சி.எஸ் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உடன் சென்றிருந்தனர். அந்நாட்டு தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 


அயர்லாந்து சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா சென்றடைந்தார். நியூயார்க் நகரில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அருண். கே. சிங் வரவேற்றார். நாளை ஐ.நாவில் நடைபெறவுள்ள நிலையான பொருளதார வளர்ச்சி  மாநாட்டில், சர்வதேச தலைவர்களுக்கிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.
பின்னர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வேலி பகுதிக்கு செல்கிறார். அங்கு தகவல் தொழில் நுட்பத்தில் கொடி கட்டி பறக்கும்  இந்திய வம்சாவளி மக்களிடையே உரையாற்றுகிறார். அதோடு ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு சென்று, அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸகார்பர்க்கையும் பிரதமர் மோடி சந்திக்கிறார். 

No comments:

Post a Comment