தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் ஆல் ரவுண்டர் குர்கீரத் சிங், ஒரு நாள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 போட்டிக்கான அணியில் கர்நாடகத்தைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் எஸ்.அரவிந்த்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி விரைவில் இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறது. முதலில் 20 ஓவர் தொடர் அரங்கேறுகிறது. இதன்படி இந்தியா– தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி தர்மசாலாவில் நடக்கிறது.
20 ஓவர் தொடர் மற்றும் முதல் 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் பெங்களூருவில் அறிவித்தனர்.
20 ஓவர் தொடர் மற்றும் முதல் 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை டெஸ்டின் போது விரலில் காயமடைந்த ஷிகர் தவான் அணியில் இடம் பிடித்துள்ளார். பஞ்சாப் ஆல் ரவுண்டர் குர்கீத், ஒரு நாள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல், டி20 போட்டிக்கான அணியில் கர்நாடகத்தைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் எஸ்.அரவிந்த்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப் பந்துவீச்சாளர் தவல் குல்கர்னி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் போட்டி அணி வீரர்கள்: தோனி (கேப்டன்), அஸ்வின், ஸ்டுவர்டு பின்னி, ஷிகர் தவான், விராட் கோலி, புவனேஸ்வர் குமார், அக்சர் படேல், ரஹானே, சுரேஷ் ரெய்னா, ராயுடு, மோஹித் சர்மா, ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ், குர்கீரத் சிங், அமித் மிஸ்ரா
டி20 அணி வீரர்கள்: தோனி (கேப்டன்), அஸ்வின், ஸுடுவர்டு பின்னி, ஷிகர் தவான், விராட் கோலி, புவனேஸ்வர் குமார், அக்சர் படேல், ரஹானே, சுரேஷ் ரெய்னா, ராயுடு, மோஹித் சர்மா, ரோஹித் சர்மா, எஸ்.அரவிந்த், ஹர்பஜன் சிங் மற்றும் அமித் மிஸ்ரா
சமீபத்தில் நடந்த போட்டிகளில் இந்திய ஏ அணியில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் மூலம் 25 வயது குர்கீரத் சிங் கவனத்தை ஈர்த்தார். முத்தரப்பு தொடரின் ஆஸ்திரேலியா ஏ-வுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 87 ரன்கள் குவித்தார். மேலும், தொடர்ச்சியாக பல்வேறு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
அணிக்கு ஆல்ரவுண்டர்களின் தேவை அதிகமாக இருக்கிறது என்றும், அந்த எதிர்பார்ப்பை குர்கீரத் சிங் பூர்த்தி செய்வார் என்றும் தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் படேல் நம்பிக்கை தெரிவித்தார்.
ஒருநாள் அணிக்கு தோனியே கேப்டனாக நீடிக்கிறார். இது குறித்து சந்தீப் படேல் கூறுகையில், "ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பு குறித்து எதையும் விவாதிக்கவில்லை. தோனி தலைமை வகிப்பதில் முழு திருப்தி உள்ளது. இந்தத் தொடரை அவரே வழிநடத்துவதற்கு முழுமையாக ஆதரிக்கிறோம்" என்றார்.
காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதால், அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஷமியை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படவில்லை.

No comments:
Post a Comment