சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Sept 2015

'விளம்பரத்துக்காக செயல்படுகிறார் சகாயம்'- முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகன் குற்றச்சாட்டு!

அதிகாரி சகாயம் விளம்பரம் தேடும் வேலையில்  ஈடுபடுவதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் கூறியுள்ளார்.

மதுரை அருகே நரபலி நடந்துள்ளதாக கூறப்படும் சுடுகாட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் கூறுகையில்,'' ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு என்று கடமை, பொறுப்பு இருக்கிறது. தனது பணியை நேர்மையுடன் செய்வது மட்டுமல்ல... வீண் விளம்பரம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
தரையில் அமர்வது,  இட்லி சாப்பிடுவது, ஊடகங்களை வரவைத்து போஸ் கொடுப்பது போன்ற செயல்களில் சகாயம் ஈடுபடுகிறார். நீதிமன்றம் அவருக்கு இந்த வேலையையா கொடுத்தது? ஒரு நல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரி இவ்வாறு செயல்படமாட்டார்.  கிரானைட் குவாரி தொடர்பான விசாரணை செய்வதுதான் சகாயத்தின் பணி. இதனிடையே ஒருவர் வந்து அங்கே நரபலி நடந்துள்ளது என்றால், புகார் வாங்கி  சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வேண்டும்.
இதுதான் நடைமுறை. இப்படிதான் செயல்பட வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசியல்வாதி மாதிரி ஆர்ப்பாட்டமான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது. அங்கேயே உட்கார்ந்துகொள்வது, பேண்ட் சர்ட்டோடு படுத்துக்கொண்டு போஸ் கொடுப்பது... இதையெல்லாம் எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் செய்ய மாட்டார். செய்யவும் கூடாது '' என்றார். 


No comments:

Post a Comment