சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Sept 2015

மனிதர்கள் கவனத்துக்கு...

சிங்கங்களுக்கும் மனிதர்களுக்கும் கென்யாவில் எல்லைப் போராட்டம் நடந்துகொண்டு இருக்கிறது.

உலகம் முழுக்க உள்ள அதே பிரச்னைதான் இங்கேயும். கென்யாவின் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், நகர்ப்புறங்கள் காடுகளைச் சுருக்கிக்கொண்டே வருகின்றன. இந்தச் சுருக்கம் கென்யாவின் புகழ்பெற்ற நவுரோபி தேசியப் பூங்காவை ஒட்டி இருக்கும் இடங்களையும் விட்டுவைக்கவில்லை. முன்பு எல்லாம் இங்கே இரவில் சிங்கங்களின் கர்ஜனைகள் கேட்டுகொண்டே இருக்கும். வீட்டுக் கதவைத் திறந்தால் வாசலில் ஒரு சிங்கம் கம்பீரமாக நின்றுகொண்டு இருக்கும். மக்களும் ஒரு 'ஹாய்’ சொல்லிவிட்டு சர்வசாதரணமாகத் தங்கள் வேலைகளைப் பார்ப்பார்கள்.

இது 40 வருடங்களுக்கு முன் நடந்தது. ஒரு முறை உள்நாட்டு கிரிக்கெட் மேட்சை ஓர் ஆரம்பப் பள்ளியின் மைதானத்தில் நடத்த முடிவு செய்தார்கள். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க அங்கே சென்ற குழுவினர், பதறியபடி இடத்தைக் காலி செய்தார்கள். காரணம், அவர்கள் விளையாடத் தேர்ந்தெடுத்த பள்ளிக்கூடத்தின் அருகே சர்வ சாதாரணமாக இரண்டு சிங்கங்கள் வலம் வந்ததுதான். அதற்குப் பிறகும் அங்கே விளையாடுவார்களா என்ன?
இப்படி எப்போதும் நடமாடிக்கொண்டு இருந்த சிங்கக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. அங்கே நடமாடிய சிங்கங்கள் மேய்ச்சலுக்காக வரும் ஆடு, மாடுகளை வேட்டையாடின. சும்மா இருப்பார்களா மனிதர்கள்? பதிலுக்கு சிங்கங்களை வேட்டையாடத் தொடங்கினர். ஒரு முறை 10 நிமிடங்களில் ஆறு சிங்கங்கள் கொல்லப்பட்டதும் பிரச்னை தொடங்கியது.
வனவிலங்கு ஆர்வலர்கள் உரத்துக் குரல் கொடுக்க, ''நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டாமா?'' என்று உள்ளூர் மக்கள் சண்டைக்கு வர, சிங்கங்களா? மனிதர்களா? என்ற எல்லைப் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
''ஒரு சிங்கம் இரவில் கர்ஜிப்பதற்குக் காரணம், தான் நிற்கும் நிலப் பகுதி தன்னுடையது என்பதை உறுதிப்படுத்துவதாக அர்த்தம்'' என்கிறார்கள் விலங்கியல் நிபுணர்கள். ஆனால், இப்போது அது சிங்கங்களின் நிலம் இல்லை என்பதே பதறவைக்கும் உண்மை.
நிலத்தில் இப்படி என்றால் கடலில் வேறு கதை. சுறாக்கள் மனிதர்களைத் தேடிவந்து தாக்குவது இல்லை என்பது விலங்கியல் நிபுணர்களின் கருத்து. இது குறித்து நடைபெற்ற பல சோதனைகளும் அதையே நிரூபித்தன.
ஆனால், சமீபத்தில் ஐக்கிய அமெரிக்க நாட்டுகளில் ஒன்றான ஓர்லியன்ஸ் நகரில் உள்ள நாசட் கடற்கரையில் நடந்த சம்பவம் இதற்கு நேர்மாறானது. அங்கே வால்ட் சல்க் என்பவர் படகில் கடலுக்குள் சில மீட்டர்  தொலைவில் பயணித்தபோது அவரது படகை ஒரு வெள்ளை சுறா பின் தொடர்ந்து இருக்கிறது. இதைப் பார்த்ததும் பயத்தின் எல்லைக்கே போய்விட்ட வால்ட், படகை வேகமாகச் செலுத்தி உயிர் தப்பி இருக்கிறார். இதைப் பற்றி மற்றவர்களிடம் கூறிய வால்ட் சல்க் ''அந்தச் சுறா 14 அடி உயரம் இருக்கும். மிக நெருக்கத்தில் அதைப் பார்த்ததும் ஒரு கணம் இதயமே உறைந்தது. அந்தச் சுறா என்னை வேட்டையாடுவது போன்ற காட்சிகளும் கண் முன் தோன்ற ஆரம்பித்துவிட்டன'' என்கிறார்.
இந்தச் சம்பவத்தைப் பற்றி அறியும்போது கென்யாவின் சிங்கங்களும் நினைவுக்கு வருகின்றன. சுற்றுச்சூழல் மாற்றம், பரிணாம வளர்ச்சி என விலங்குகள் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டதன் விளைவுதான் இது. ''பலத்தை உபயோகித்த விலங்குகள் பலவும் இப்போது மூளையை உபயோகிக்கத் தொடங்கிவிட்டன. இப்படி மூளையை உபயோகித்து சைலன்ட் கில்லராக செயல்படவே வெள்ளை சுறா துரத்தி இருக்கிறது'' என்று சிலர் விளக்கம் சொல்கிறர்கள்.

இப்படியே போனால் விரைவிலேயே விலங்குகளும் மனிதர்களுக்கு இணையாக மூளையை உபயோகித்து போட்டியில் இறங்கலாம்.


No comments:

Post a Comment