சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Sept 2015

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கிறார் ராமதாஸ்!

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் சென்னை முழுவதும் கட்டணமில்லாத பேருந்து பயண வசதி செய்துத்தரப்படும் என்று ராமதாஸ்  பா.ம.க. வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பயிற்சி முகாமில் தெரிவித்து உள்ளார்.

பா.ம.க.வின் 2016 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு தேர்தல் அறிக்கையை கடந்த 16 ஆம் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். இதனை மக்களிடம் கொண்டு செல்வதற்கான வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. முதல்வர் வேட்பாளரும், இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட பல கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


இந்த பயிற்சி முகாமில் ராமதாஸ் பேசும்போது, ''தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஆனால், இதனை ஒரு சம்பிரதாயமாகத்தான் வெளியிட்டு வருகிறது. ஆனால், தற்போது பா.ம.க. சார்பில் வெளியிட்டு இருப்பது வரைவு தேர்தல் அறிக்கை தான். இறுதி தேர்தல் அறிக்கையின் முன்னோட்டம் தான். இதனை தமிழக மக்கள் முன் கொண்டு சென்று, ஆராய்ந்து நிறைவு தேர்தல் அறிக்கை வெளியிடுவதால், அதனை ‘மக்கள் சாசனம்’ என்று பெயரிட்டுள்ளோம்.


வரைவு தேர்தல் அறிக்கையில், கருவில் இருந்து கல்லறை வரை ஒரு மனிதனுக்கு என்ன என்ன தேவையோ அவை அனைத்தும் இருக்கிறது. நமது கட்சியினர் ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் சிறு சிறு நோட்டீசுகள் மூலமாக மக்களிடம் இதனை கொண்டு செல்ல வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இலவச பொருட்களை தவிர்த்து கல்வியை இலவசமாக்குவோம்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் சென்னை முழுவதும் கட்டணமில்லாத பேருந்து பயண வசதி செய்துத்தரப்படும். கட்டணமில்லா பேருந்து போக்குவரத்து மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும். இருசக்கர வாகனம், கார்களில் செல்வோரும் பேருந்துகளில் பயணம் செய்வார்கள். மேலும், சென்னை மாநகரில் காற்று முற்றிலும் மாசு அடைந்துள்ளது.


தற்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதாக கேள்விப்படுகிறேன். எனவே வாக்காளர் பட்டியலில் நமது கட்சியினரின் பெயர் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்வதுடன், நமது கட்சியினரின் புதிய வாக்காளர்களின் பெயர்களையும் சேர்க்க வேண்டும்" என்றார்.


No comments:

Post a Comment