சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 May 2014

என் தலைவன்


சமீபத்தில் முகநூலில் நண்பர் ஒருவர் " நீங்கள் யாருடைய போட்டோவை உங்கள் பர்சில் வைத்திருக்கிறீர்கள்? என்று பதிவு போட்டு இருந்தார். நானும் பர்சை எடுத்து பார்த்தேன். அதில் என் தாத்தா ( அப்பிச்சி ) திரு .வெள்ளியங்கிரித்தேவர் அவர்களின் போட்டோ இருந்தது. பின்னர் அந்த நண்பரின் பதிவுக்கு" என் அப்பிச்சியின் போட்டோவை நான் வைத்திருக்கிறேன். அவர் தான் என்னுடைய ஹீரோ, என்னுடைய ரோல் மாடல் " என்று பின்னுட்டம் போட்டேன். பின் வந்த இரண்டு நாட்களாக அவருடைய நினைவுகளாகவே இருந்தேன். என் அப்பாவுடைய அம்மா, அப்பா இருவரும் அவருடைய சிறு வயதிலேயே இறந்துவிட்டார்கள். அதனால் அவர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.

என் அம்மாவுடைய அப்பா என் அப்பிச்சி வெள்ளியங்கிரித்தேவர் வளர்ப்பிலேயே நான் அதிகம் வளர்ந்தேன். அவரை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இதை கருதுகிறேன். என் அப்பிச்சி வெள்ளியங்கிரித்தேவர் அவரது சிறுவயதிலேயே விவசாய வேலை செய்திருக்கிறார். அவருடைய அப்பாவுக்கு விவசாயத்தில் அக்கறை இல்லாததால் அந்த வேலையை தன் பத்து வயதில் செய்திருக்கிறார். அதன் பின்பு அப்பா செய்த கடனால் தோட்டத்தை கடன் கொடுத்தவர் எடுத்து கொள்ள வேறு வழியில்லாமல் திருப்பூரில் சலவைபட்டறைக்கு ( இன்று அது டையிங் ) வேலைக்கு சென்று சம்பாதித்துள்ளார்.

அடமானத்தில் உள்ள வீட்டை தன் கடுமையான உழைப்பால் மீட்டு தன் தங்கைக்கும் திருமணம் செய்து அவரையும் தன் சொத்தில் கொஞ்சம் இடம் கொடுத்து தன்னருகிலேயே வைத்து கொண்டார். தனது 34 வது வயதில் என் பாட்டி ( அம்மையா ) மயிலாத்தாளை திருமணம் செய்தார். பின் என் அம்மா பிறந்தவுடன் சில வருடங்களில் என் அம்மையா காசநோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அன்றைய நாட்களில் காசநோய் என்பது மிகவும் கொடிய நோயாம்.

அப்போது மருத்துவ வசதியும் நோயை பற்றிய விழிப்புணர்வும் இல்லாததால் அம்மையாவை காப்பாற்ற முடியவில்லை. அதன்பின் தனியாளாக என் அம்மாவை வளர்த்துள்ளார். தன் சுக துக்கங்களை மதிக்காமல் தன் மகளின் நழ்வாழ்க்கைகாக கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். பின் என் அம்மாவுக்கும் என் அப்பாவுக்கும் திருமணம் ஆனது. மகளை பிரிய மனம் இல்லாமல் தன் வீட்டிலேயே என் அப்பாவையும் இருக்க வைத்து திருப்பூரில் வேலையும் வாங்கி கொடுத்து இருக்கிறார். இதெல்லாம் அவரை பற்றி நான் என் அம்மா அப்பா மூலமாக கேட்டு தெரிந்து கொண்டவைதான்.
நான் பிறந்த பிறகு தான் அவருக்கு சந்தோசம் அதிகமாம். தனக்கு மகன் இல்லாததால் தன்னுடைய அண்ணன், தம்பிகளின் மகன்களையே கொஞ்சி வந்தவருக்கு பேரனாக நான் வந்ததும் அப்படியொரு சந்தோசமாம். நான் குழந்தையாக இருக்கும் போது கீழே படுக்க வைக்க விடமாட்டாராம். கீழே படுத்தால் உடம்பு வலிக்கும் என்று என் அம்மாவை திட்டுவாராம். என்னை தோளிலேயே தூக்கி சுமந்து சுற்றுவாராம்.


நான் விளையாட ஆட்டுக்குட்டிகளை வாங்கி கொடுத்திருக்கிறார். அதனுடன் தான் சிறு வயதில் விளையாட்டு. மாட்டு வண்டியில் விளையாடுவது,வண்டியை ஓட்டுவது எங்கள் ஊர் குளத்தில் நீச்சல் அடிக்க கற்று கொடுத்தது என அவரின் நினைவுகள் பல. என் தங்கை பிறந்தும் என் மீதான பாசம் துளியும் குறையவில்லை.

இரவு நேரத்தில் எங்கள் வீட்டு வாசலில் அவருடைய கட்டிலில் நானும் என் தங்கையும் படுத்து கொண்டு கதை கேட்போம். நாங்கள் தூங்கும் வரை அவருடனே வைத்து விட்டு தூங்கிய பின் வீட்டுக்குள் எடுத்து சென்று படுக்க வைப்பார். நான் பள்ளி சென்றால் என் அம்மாவுக்கு தெரியாமல் காசுகள் கொடுப்பார். இது நான் பன்னிரெண்டாம் வகுப்பு செல்லும் வரை தொடர்ந்தது. அதிகாலையில் எழுந்து சென்று விடுவார். நான் பள்ளிக்கு செல்லும் நேரம் சரியாக வீட்டுக்கு வந்து விடுவார். அல்லது பஸ் ஸ்டாப்பிற்கு வந்து பார்த்து விட்டு காசு கொடுத்து செல்வார்.
ஒரு சமயம் விபத்தில் அடிபட்டு அரசு மருத்துவ மனையில் இருந்தார். குணமாகி வீட்டுக்கு வந்தவுடன் மாட்டு வண்டியை வாங்கி வேலைக்கு சென்று விட்டார். 60 வயதில் வாழைத்தார்களை தோளில் தூக்கி செல்வதை பார்த்திருக்கிறேன். இன்று நாம் அதை செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

என்றும் அவரிடம் எனக்கு பிடித்தது அவருடைய தைரியம் தான். ஆனாலும் அளவுக்கு மிஞ்சின தைரியம். மாட்டு வண்டி ஓட்ட முடியாது என்ற பொழுது தென்னை கீற்றுகளை வாங்கி வந்து அதை தடுக்காக பின்னி விற்று சம்பாத்தித்து வந்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாள் வரை தன் சொந்த உழைப்பை மட்டுமே நம்பி இருந்தவர். தன் சொந்த காசினால் தான் சாப்பிட்டு வந்தார்.


அவரின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அது என்னவென்றால் உள்ளூரில் தனக்கு தெரிந்தவர்களிடம் " என் பேரன் ஸ்டேட் பேங்குக்கு மேனஜரா வேலைக்கு போவான்" என்று அடிக்கடி சொல்வார். அப்போது எனக்கு அது வெறும் வார்த்தையாக தான் தெரிந்தது. ஆனால் இப்போது அவரின் ஆசையாக, ஏக்கமாக தெரிகிறது. என்னால் அதை செய்ய முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் நான் இப்போது சிஸ்டம், லேப்டாப் என இருப்பதை பார்த்திருந்தாலும் அவர் மனம் சந்தோஷ பட்டிருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
என் அம்மா என்னிடம் செல்லமாக " எங்கப்பன் இல்லேன்னா நீ இப்படி சொகுசா வளர்ந்திருப்பியா என்று திட்டுவார்கள். நானும் அதற்க்கு " ஆமா கிழவன் இல்லேன்னா நான் அப்பிடியே இருந்திருப்போம் என்று விளையாட்டாக பதில் சொல்வேன். உண்மையில் என் அப்பிச்சி தான் எனக்கு பிடித்த தலைவன், ஹீரோ, ரோல்மாடல், எல்லாமுமாக இருப்பவர். அவரை பார்த்து அவரின் வளர்ப்பில் வளர்ந்ததாலோ என்னவோ அவரின் குணங்கள் எனக்கும் இருக்கிறது. இது நானே சொல்வது அல்ல. என் சில நடவடிக்கைகளை பார்த்து என் சொந்தங்கள் சொன்னது தான். அவரின் நினைவுகள் என்றும் என்னை சுற்றியே இருக்கும்.

27 May 2014

ஃபின் மோதிரக்கருவி


கேரளாவை சார்ந்த Robatic human Logic என்ற நிறுவனம் ஒரு வித்தியாசமான மோதிரத்தை கண்டுபிடித்து உள்ளது. அதை பற்றி கூறும் முன் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் எதிரிகளிடம் மாட்டிக் கொள்வார். அது ஒரு கண்ணாடி மாளிகை. அங்கே துப்பாக்கி முனையில் எதிரிகளிடம் மாட்டியிருக்கும் ஜேம்ஸ்பாண்ட் கையில் இருக்கும் ஒரு சின்ன மோதிரத்தை பயன்படுத்தி அந்த கண்ணாடியை உடைத்து தப்பிப்பார். நீங்களும் அதை பார்த்து இருப்பீர்கள். அது போல ஒரு மோதிரத்தை தான் கேரளாவில் ரோஹில்தேவ் என்ற இளைஞர் கண்டுபிடித்து இருக்கிறார்.
2012 ஆம் ஆண்டு கோவையிலுள்ள கதிர் இன்ஜினியரிங் காலேஜில் படித்த இவர் தன் நண்பர்களுடன் இணைந்து துவக்கிய நிறுவனம் தான் Robatic human Logic. கேரளாவில் கொச்சின் அருகே உள்ள இவர் அமெரிக்காவிலும், யூரோப்பிலும் நடைபெற்ற டெக்னாலஜி ஃபேர்களில் கலந்து கொண்டு தன்னுடைய நிறுவனத்துக்கு புதிய ஐடியாக்களை உடைய நிறுவனம் என்று பெயர் வாங்கி தந்திருக்கிறார். சிறந்த ஐடியாக்களை உடைய நிறுவனம் என்ற அந்தஸ்தை உலக அளவில் பெற்றதும் அதனை செயல்படுத்த அவர்களிடம் பணவசதி இல்லை. இந்த நிலையில் தான் ஜிகோ நிறுவனம் வழிகாட்டியாக இருந்தது. அதைப்போல மக்களிடம் தங்களிண் கண்டுபிடிப்பை பற்றி எடுத்து சொல்லி நிதி உதவி கேட்டு அதன் மூலம் வரும் நிதியினை கொண்டு தங்கள் லட்சியத்தை எட்ட நினைத்தனர். இக்கருவிக்கான முன்பதிவாக 120 டாலர்களை நிர்ணயித்து நிதி உதவி கேட்டு இணையத்தில் வெளியிட்டனர். இவர்கள் எதிர்பார்த்தது 1 லட்சம் டாலர் மட்டுமே. ஆனால் இன்ப அதிர்ச்சியாக இரண்டு லட்சம் டாலர்கள் நிதி உதவியாக குவிந்தது.
இதனால் நினைத்ததை விட வேகமாக அந்த மோதிரத்தை உருவாக்கி வருகிறார்கள் நண்பர்கள். அந்த மோதிரத்திற்க்கு பின் என பெயரிட்டு இருக்கிறார்கள். இது செய்யும் வேலை சாதாரணமானது இல்லை. உங்களது ஸ்மார்ட் போன், டிவி, பிளே ஸ்டேஷன், கார், கேமரா, என அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களையும் ஃபின் கட்டுபடுத்தும். உங்கள் பெருவிரலில் மாட்டப்பட்டிருக்கும் ஃபின் மோதிரம் புளுடூத் மூலமாக எந்த பொருளுடனும் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.


அதன் பின் உங்களது உள்ளங்கையை அந்த கருவி போல இயக்கலாம். உங்களது டிவி வால்யூமை கூட்ட, குறைக்க உங்கள் சுண்டுவிரலை அமுக்கினால் போதும். சேனலை மாற்ற மோதிர விரல். உங்கள் போனில் பாடலை மாற்ற உங்களது பெருவிரலை ஆள்காட்டி விரலில் இருந்து சுண்டு விரலில் நகர்த்தினால் போதும். எந்தெந்த பொருளுக்கு எப்படி கைகளை பயன்படுத்த வேண்டும் என தெரிந்து கொள்ள ஒரு கையேடு வழங்கப்படும்.


அதுமட்டுமில்லாமல் ஃபின் மோதிரத்தை பற்றி தெரிந்து கொள்ள www.wearfin.com என்ற இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஃபின் மோதிரக்கருவி பிடித்து இருந்தால் அதை அங்கேயே ஆர்டர் செய்து வைத்து கொள்ளலாம்.You Tube, Facebook ல் வரும் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?You Tube, Facebook மற்றும் இதர சோஷியல் நெட்வொர்க்குகளில் நீங்கள் பார்க்கும் வீடியோக்களை தேவைப்பட்டால் டவுன்லோட் செய்வது எப்படி என தெரியுமா? அதற்கென்று ஒரு சாப்ட்வேர் இருக்கிறது. கூகுளில் You Tube Downloader என்று தேடினால் DVD Videosoft என்ற இணையத்தளத்தில் You Tube Downloader சாப்ட்வேர் கிடைக்கும். அதனை டவுன்லோட் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அதன் பின் You Tubeல் உங்களுக்கு பிடித்த வீடியோவினை ஒபன் செய்து கொண்டு அதன் மேல் உள்ள URL லிங்கினை படத்தில் காட்டியுள்ளபடி காப்பி செய்து நீங்கள் டவுன் லோட் செய்து வைத்திருக்கும் You Tube Downloaderல் பேஸ்ட் செய்யவும். அந்த லிங்க் சில நொடிகளில் டவுன்லோட் செய்யத் தயாராகிவிடும். கீழ் நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்தால் உங்கள் வீடியோ டவுன்லோட் ஆகும். உங்கள் வீடியோவின் அளவை பொறுத்து அது டவுன்லோட் ஆகும் நேரம் மாறுபடும். இந்த சாப்ட்வேர் You Tube வீடியோக்களை மட்டுமே டவுன்லோட் செய்ய பயன்படும்.

 அடுத்து Facebook மற்றும் இதர சோஷியல் நெட்வொர்க்குகளின் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என பார்ப்போம். இதற்கு உங்களுக்கு கண்டிப்பாக இண்டர்நெட் இணைப்பு தேவைப்படும். இதில் KEEPVID.COM எனும் இணையத்தளம் இந்த வசதியை இலவசமாக வழங்குகிறது.


மேலே சொன்னது போல Facebook ல் வரும் வீடியோவின் URL லிங்கினை படத்தில் காட்டியுள்ளபடி காப்பி செய்து அதனை KEEPVID.COM இணையத்தளத்தில் பேஸ்ட் செய்யவும். இதற்க்கு அந்த இணையத்தளத்தை சப்போர்ட் செய்யும் ஜாவா ஸ்கிரிப்ட் தேவைப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் அது இருந்தால் நேரடியாக டவுன்லோட் ஆகிவிடும். அப்படி இல்லையெனில் அந்த இணையத்தளமே அதனை தரவிறக்கம் செய்து கொண்டு உங்கள் வீடியோ டவுன்லோட் செய்ய தயாராகும்.
அடுத்து KEEPVID.COMல் இன்னொரு வசதி என்னவெனில் உங்கள் வீடியோ பல வகையான FORMAT ( 3GP, MP4, MPG4, MP2 ) களில் டவுன்லோட் செய்யும் வசதியினை கொடுக்கிறது.இதன் மூலம் உங்களுக்கும் நல்ல குவாலிட்டியான வீடியோவினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில் காப்பிரைட் செய்யப்பட்ட எந்தவொரு வீடியோவினையும் நீங்கள் தரவிறக்கம் செய்ய முடியாது.


அதே போல You Tube வீடியோவில் சில வீடியோக்களின் லிங்குக்கள்  https://www.youtube.com/watch?v=ycWvQgpFH7E&feature=related    என்று காணப்படும். அதனை டவுன்லோட் செய்ய & என்பதற்க்கு முன்னால் உள்ள லிங்கினை மட்டும் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே. இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டம் இட்டால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.

மேடி டிப்பெட் - ஆஸ்திரேலிய தேவதை


சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்.இந்த வார்த்தை நம் வாழ்க்கையில் அடிக்கடி யாராவது சொல்ல நாம் கேட்டிருக்கலாம். ஆனால் வெறும் இரண்டே நிமிடங்களில் கோடிக்கணக்கான மக்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறாள் ஆஸ்திரேலியாவை சார்ந்த மிக் மற்றும் கெரின் டிப்பெட் என்ற தம்பதியின் குழந்தை மேடி டிப்பெட்.


2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யூ டுயூப்பில் அப்லோட் செய்யப்பட்ட மேடி டிப்பெட்டும், அவளது தந்தையும் பேசிக்கொள்ளும் வீடியோவில் " உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? என்று கேட்கிறார். கேள்வியை முடிக்கும் முன்பே மேடி அம்மாதான் என்று சொல்ல " நான் உனக்கு பொம்மை வாங்கி தருகிறேன்.திரும்ப சொல்லு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? என்று கேட்கிறார். அப்பா தான் பிடிக்கும் என்று மேடியை சொல்ல வைக்க அவள் தந்தை கேட்க்கும் கேள்விகளை மேடி எப்படி சமாளிக்கிறாள் என்பதை காட்டுகிறது இந்த வீடியோ.

 மேடியின் மழை பேச்சும், எக்ஸ்பிரஸ்ண்களும் பார்ப்பவர்களின் மனதை ஈர்க்கின்றன. மொழி தெரியாதவர்கள் கூட அவளின் முக அசைவில் நடப்பதை புரிந்து கொள்ளலாம். தந்தையின் அன்புத்தொல்லை தாங்காமல் கோபப்படும் போது கூட அவளின் கோபம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இறுதியில் "அப்பாதான் பிடிக்கும்" என்று சொல்லிவிட்டு அடுத்த நொடியே "சும்மாதான் சொன்னேன், அம்மாதான் பிடிக்கும் என்று அப்பாவை கலாய்க்கும் போது நம் மனதை கொள்ளை கொல்கிறாள். அவளுடைய தாத்தாவிற்க்கும், பாட்டிக்கும் குழந்தையை காட்டுவதற்காக ஒரு வயதாகும் போது ஜஸ்ட் ஒரு போட்டோ எடுக்க முயற்சி செய்யும் போது எடுத்த எதார்த்தமான பதிவு. 2012 ஆம் ஆண்டில் அப்லோட் செய்யப்பட்ட இந்த வீடியோவை இதுவரை சுமார் 1.5 கோடி பார்வையாளர்கள் எண்ணிக்கையை தாண்டியிருக்கிறது.

ஆனால் இப்போது இந்த புத்திசாலி குழந்தை மேடி டிப்பெட் கடவுளின் குழந்தை ஆகிவிட்டாள். ஆம். இப்போது அவள் நம்மிடையே இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி காலம் அடைந்துவிட்டாள் மூன்று வயது மேடி டிப்பெட்.17 ஆம் தேதி ஜலதோஷம் இருப்பதற்காக வீட்டிற்க்கு அருகில் இருந்த ஒரு டாக்டரை பார்க்க அவர் பார்த்து விட்டு சாதாரண ஜலதோஷம் தான், பிரச்சனையில்லை என்று சொல்லிவிட வீட்டுக்கே வந்துவிட்டனர். ஆனால் நேரம் அதிகம் ஆக ஆக ஜலதோஷம் தீவிரம் ஆக வேறு ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்கு கூட்டி சென்றிருக்கின்றனர். அங்கு சோதனை செய்தபோது இரண்டு விதமான வைரஸ்கள் குழந்தையை பாதித்திருப்பதாகவும், அதில் ஒன்று மேடியின் இதயத்தை தாக்கி கொண்டு இருப்பதையும் டாக்டர்கள் கண்டுபித்து இருக்கிறார்கள். இனி எதுவும் செய்ய முடியாது எனும் சூழ்நிலை. சற்று நேரத்தில் தனக்கு மிகவும் பிடித்த தந்தையின் மடியிலேயே இயற்கையை தழுவினாள் மேடி டிப்பெட்.

விஷயம் தெரிந்த பின்னர் இதுவரை வீடியோவில் மட்டுமே பார்த்தவர்கள் எத்தனையோ பேர் அவளது பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள் இன்னமும். மேடியின் அம்மா கெரின் டிப்பெட் சொல்லும் போது " மேடி இந்த உலகில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்திருக்க கூடியவள். ஆனால் அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை போலும். ஆனாலும் இன்னும் பத்து வருடம் கழித்தும் மன உளைச்சலில் இருக்கும் ஏராளமானோர் மேடியின் வீடியோவை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அதுதான் மேடியின் வாழ்க்கையின் அர்த்தம்" என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார் கெரின் டிப்பெட்.

 மேடி டிப்பெட்டுக்காக ஆஸ்திரேலியாவின் நியூகேஸ் பூங்காவில் நடந்த நினைவு தின கூட்டத்தில்கூட பெற்றோரின் விருப்பப்படி புன்னகைகளும், பலூன்களும் நிரம்பிய மகிழ்ச்சியான நாளாகத்தான் கடந்திருக்கிறது. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவதில் தான் நம் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது என்று உலகுக்கு உணர்த்திய மேடி டிப்பெட் இன்றும் மற்றவர்களை சந்தோஷப்படுத்த காத்திருக்கிறாள் நாம் நம் வாழ்வில் யாரை சந்தோஷபடுத்துகிறோம் என்று பார்க்கவும்!!! மேடி டிப்பெட் என்ற தேவதை நம்முடன் வாழ நாம்தான் கொடுத்துவைக்கவில்லை போலும்.

22 May 2014

இன்னொரு அர்த்தம்நாராயணசாமி ஒரு கட்சியின் எம்.எல்.ஏ.

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற அவர், சட்டைவாங்க துணிக் கடைக்கு சென்றார். அங்கே அழகான இளம்பெண் ஒருவள் சேல்ஸ் கேர்ளாக இருந்தாள்.

சின்ன கட்டம் போட்ட வெள்ளை கலர் சட்டைதான் நாராயணசாமிக்கு தேவை.
எனவே, அவர் விற்பனைப் பெண்ணிடம், "கொச்சு கள்ளி... வயற்றில் உண்டோ?"

உடனே அந்தப் பெண் பளார் என்று அவரை அறைந்து விட்டாள். 

நாராயணசாமிக்கு தமிழே தகறாரு ... இதில் மலையாளம் வேறு....

 அது வேறொன்றும் இல்லை....

 கொச்சு என்றால் சின்ன. கள்ளி என்றால் கட்டம்.

 வொயிட் என்பதை கேரளத்தில் வயற் என்பார்கள்.

 அவர் கேட்டது சின்ன கட்டம் போட்ட வொயிட் கலர் சட்டை இருக்கிறதா என்றுதான்.

 அதன் இன்னொரு அர்த்தம்,

 "அடி கள்ளி உண்டாயிருக்கியா"


19 May 2014

அவுட் பேஷண்ட் பாலிசி - அறிமுகம்


தற்போது இன்சுரன்ஸ் உலகில் புதிய அறிமுகம் அவுட் பேஷண்ட் பாலிசி. மெடிக்கிளைம் பாலிசியில் ஹாஸ்பிடலில் 24 மணி நேரம் அட்மிட் ஆகியிருந்தால் மட்டுமே இழப்பீடு தரும் பாலிசிகள் இருந்தன. இப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் வெளிநோயாளியாக இருப்பவர்களும் இழப்பீடு பெறும் பாலிசி அறிமுகமாகியுள்ளது. இந்த பாலிசி எடுத்தவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் மருத்துவர் பரிந்துரைப்படி மருத்துவம் செய்து கொண்டு இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் தந்து இழப்பீடை பெறமுடியும்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.

 இந்த வகை அவுட் பேஷண்ட் பாலிசிகள் தனியாக கிடைக்காது. ஹெல்த் இன்சுரன்ஸ் பாலிசிகளோடு துணை பாலிசியாக கிடைக்கும். இந்த துணை பாலிசி பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளது. மெடிக்கிளைம் பாலிசி எடுப்பவர்கள் இந்த துணை பாலிசியில் ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். இந்த பாலிசிகள் பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை தினசரி நம் வாழ்வில் ஏற்படும் மருத்துவ செலவுகளை குறைக்க உதவும். பொதுவாக ஹெல்த் இன்சுரன்ஸ் பாலிசி எடுக்கும் போது வயது, பழக்க வழக்கம் ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு ஏற்றாற்போல பாலிசி பிரீமியம் இருக்கும். இந்த பாலிசி மூலம் மருத்துவமனைக்கு வெளியே செய்யும் மருத்துவ செலவுகளை இந்த பாலிசி மூலம் செய்யலாம்.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். WordLinx - Get Paid To Click

 இந்த அவுட் பேஷண்ட் பாலிசி மூலம் நோய் கண்டறியும் சோதனைகள், ஸ்கேன், மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவம் செய்து கொண்டு வாங்கும் மருந்துகள் வாங்குவதை கிளைம் செய்ய முடியும். மேலும் பல் பரிசோதனைகள், சுத்தம் செய்தல், பல் மாற்றுவது போன்றவற்றுக்கும் இந்த பாலிசி மூலம் கிளைம் செய்யலாம். கண்ணுக்கு கண்ணாடி அணிபவர்கள் கண்ணாடியை மாற்ற வேண்டுமெனில் இந்த பாலிசியில் கிளைம் பெற முடியும்.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.

 மருத்துவரின் பரிந்துரைப்படி, ஒருவர் ஜிம்முக்கு போக வேண்டும், யோகா கற்றுக்கொள்ள வேண்டுமெனில், அதற்கு தேவையான ஆவணங்களை மருத்துவர் தந்தால், அந்த செலவுகளையும் இந்த அவுட் பேஷண்ட் பாலிசியில் க்ளைம் பெறமுடியும். தற்போது சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவத்துகூட சரியான ஆவணங்களை இன்சுரன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்தால் க்ளைம் பெறமுடியும். கண் கண்ணாடியில் லென்ஸ்க்கு மட்டும் க்ளைம் கிடைக்கும்.

ஆனால் பிரேம்களுக்கு க்ளைம் பெறமுடியாது. மேலும் மருத்துவர் பரிந்துரைத்தாலும் ஊட்டச்சத்து டானிக்குகளுக்கான செலவை க்ளைம் பெறமுடியாது. 26-35 வயது உள்ள ஒருவர் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால் 4500 ரூபாய் பிரிமீயம் செலுத்துகிறார் என்றால் 5 லட்சம் கவரேஜ் கிடைக்கும்.

இதுவே அவுட் பேஷண்ட் பாலிசியுடன் எடுத்தால் சுமார் 8500 ரூபாய் வரை பிரீமியம் கட்டவேண்டி இருக்கும். இந்த வயதினர் அவுட்பேஷண்ட் பாலிசி மூலம் சுமார் ரூபாய் 5000 க்ளைம் செய்து கொள்ளமுடியும். பிற வயதுள்ளவர்கள் 2500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை க்ளைம் பெறமுடியும். அதே போல இந்த பாலிசியை எடுப்பதன் மூலம் 80Dன் படி ரூபாய் 15000 வரை வரிச்சலுகை பெறமுடியும்.இதுவே வயதானவர்களுக்கு ரூபாய் 20000 வரை வரிச்சலுகை பெறமுடியும். இந்த அவுட் பேஷண்ட் பாலிசி ICICI Lombard ஜெனரல் இன்சூரன்ஸ் இந்த அவுட் பேஷண்ட் துணைப்பாலிசியை தருகிறது. Appolo Munich நிறுவனம் மேக்ஸிமா கம்ப்ளீட் ஹெல்த் பிளான் பாலிசியில் மருத்துவமனை செலவுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெளியே ஆகும் செலவுகளுக்கும் க்ளைம் தருகிறது.இதேபோல் Bajaj Alliance டாக்ஸ் கெயின் பிளானிலும் இந்த அவுட் பேஷண்ட் பாலிசியில் க்ளைம் தருகிறது.


லெனோவா எஸ்860.


நம் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் என்றாலே நினைவுக்கு வருவது சாம்சங் தான். ஆனால் அதை தவிர இன்னும் மற்ற பிராண்டுகளின் ஸ்மார்ட் போன்களூம் மார்க்கெட்டுக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போதைய லேட்டஸ்ட் வெளியீடு லெனோவா எஸ்860.


ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.

 இதன் வடிவமைப்பு கவர்ச்சிகரமாக இருந்தாலும் விலைதான் கொஞ்சம் பயப்பட வைக்கிறது. ஆனாலும் மற்ற ஸ்மார்ட் போன்களுடன் ஒப்பிடும் போது குறைவுதான். லெனோவா எஸ்860 யின் விலை 21,500 ரூபாய். லெனோவா எஸ்860 யின் தொடு திரையின் அளவு 5.3 இன்ச்சுகள். ஆனால் 24,000 ரூபாய் விலையுடைய எல்ஜி ஆப்டிமஸ் 4.7 தொடுதிரையையும், 23,600 ரூபாய் விலையுடைய சாம்சங் கேலக்ஸி எஸ்3 நியோ 4.8 இன்ச்சுகள் தொடுதிரையையும் கொண்டுள்ளன.

 அதே போல, எல்.ஜி ஆப்டிமஸ் (1.5 GHZ quad core ) ஸ்மார்ட் போனைவிட லெனோவா எஸ்860 1.3GHz quad core குறைவான பிராஸசர் கொண்டிருந்தாலும் அதற்கு இணையாக லெனோவா எஸ்860 யின் செயல்பாடு இருக்கிறது. லெனோவா எஸ்860 யின் இண்டர்னல் மெமரி 16ஜிபி ஆகும். எஸ்டி கார்டு மூலம் 64ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.பேட்டரி வசதியை பார்க்கும் போதும் லெனோவா எஸ்860 4000mApi சக்தி வாய்ந்த பேட்டரியை கொண்டுள்ளது.

  ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். ஆனால் எல்.ஜி ஆப்டிமஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்3 நியோ மிகக் குறைவான பேட்டரி திறனைக் கொண்டுள்ளன. லெனோவா எஸ்860 யின் பின்புற கேமராவை மற்ற இரண்டு ஸ்மார்ட் போன்களுடன் ஒப்பிடும் போது குறைவுதான். லெனோவா எஸ்860 யின் பின்புற கேமரா 8 மெகா பிக்ஸல்கள். ஆனால் முன்புற கேமரா 1.6 மெகா பிக்ஸல். இது எல்ஜி ஆப்டிமஸ் போனைவிட அதிகமாகவே இருக்கிறது.

 லெனோவா எஸ்860 யில் இருக்கு டூயல் சிம் வசதி எல்ஜி ஆப்டிமஸில் கிடையாது. லெனோவா எஸ்860 யின் ஆண்ராய்டு அமைப்பும் மற்ற இரண்டு ஸ்மார்ட் போன்களை ஒப்பிடும் போது அதிக தன்மையுடன் இருக்குறது. அதேபோல பேட்டரியை பொறுத்தவரை டாக்டை 43 மணி நேரமும், Stand-by (3G) 960 மணி நேரமும் பேசக்கூடிய அளவுக்கு உள்ளது. லெனோவா எஸ்860 மற்ற இரண்டு ஸ்மார்ட் போன்களை விட குறைவான விலையில் கிடைப்பது நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


12 May 2014

கோச்சடையான் ரிலீஸ் தள்ளி போகிறது!!!
கோச்சடையான் முடிந்தது அடுத்து தலைவர் படம் வர குறைந்தது ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்று நினைத்த ரசிகர்களுக்கு "லிங்கா" படத்தின் பூஜை போட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ரஜினி. 

ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள் ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காமல் கோச்சடையானின் வெளியீடு தள்ளி போயிருக்கிறது. ரஜினி உட்பட அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். தலைவரின் திரையுலக வரலாற்றிலேயே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிn ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட முதல் படம் " கோச்சடையான் " தான்.இதுவரை தலைவரின் படங்கள் வசூலை அள்ளியது தான் வழக்கம். சில படங்களின் தோல்விக்கு தானே பொறுப்பேற்று நஷ்டமடைந்தவர்களுக்கு பணத்தை வழங்கி கஷ்டத்தை போக்கிய ரஜினிக்கே இப்போது படம் தள்ளி போகிறது. 

அன்பு மகளின் வேண்டுகோளுக்கிணங்க ரஜினி நடிக்க சம்மதித்த படம் தான் கோச்சடையான். ஈராஸ் நிறுவனத்தின் பிரதிநிதியான டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் முழுக்க முழுக்க அனிமேஷன் டெக்னாலஜியில் தயாரிப்பது என்று முடிவானது. ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள் "எனக்கு மோஷன் கேப்சர் பத்தி எதுவும் தெரியாது. முரளியும், கே.எஸ்.ரவிக்குமாரும் தான் இதை பற்றி பேசினார்கள். அதுக்கப்புறம் தான் நான் நடிக்கவே ஒத்துக்கிட்டேன் " என்று சொன்னார் ரஜினிகாந்த். அதன் பின்னர் சரத்குமார், நாசர், தீபிகா படுகோன், ஆதி என நிறைய பேரை சேர்த்து கொண்டார்கள்.


தயாரிப்பாளர் முரளி மனோகர் எடுத்த முந்தய படங்களின் கடன்களும், கோச்சடையானுக்கு முன்னமே வாங்கின அட்வான்ச்களும் சேர்ந்து தற்போது கோச்சடையானுக்கு வில்லனாக மாறிவிட்டது. மொத்த கடன் 38 கோடி. அதில் 20 கோடியை சரிகட்டிய முரளிமனோகர் மீதி 18 கோடியை கோச்சடையான் ரிலீசான பின் பார்த்து கொள்ளலாம் என்றதும் விநியோகஸ்தர்களும் ஒப்புக்கொள்ள பரபரவென ரிலீஸ் பணியில் இறங்கினர். இப்படி எல்லாம் நல்லபடியாக நடக்கும் நேரத்தில் தான் " இந்த படத்துக்காக ஒரு வங்கியில் முரளி மனோகர் வாங்கிய 21 கோடிக்கு வட்டியையும் சேர்த்து கட்டிவிட்டு கோச்சடையானை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என அந்த குறிப்பிட்ட வங்கி மும்பையில் உள்ள லேப் நிறுவனத்துக்கு கடிதம் அளித்தது வங்கி.
 இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி பெங்களூர் போனார். அங்கு ராக்லைன் வெங்கடேஷுடன் "லிங்கா" படத்துக்கு பூஜை போட்டு தன்னுடைய அடுத்த படத்தை துவக்கி விட்டார் ரஜினி. இப்போது மே 23 ஆம் தேதி ரிலீஸ் என்று சொல்லப் பட்டாலும் அதற்குள் பிரச்சனை தீருமா என்று தெரியவில்லை.
10 May 2014

ஹூண்டாய் எக்ஸெண்ட்.... அனைத்திலும் எக்ஸலண்ட்.


செப்டம்பர் 23,1998 ஆம் வருடம் ஹூண்டாய் நிறுவனம் சாண்ட்ரோ காரை அறிமுகப்படுத்தி இந்தியாவில் கால் பதித்தது. அப்போது இந்தியாவில் சாண்ட்ரோ காருக்கு இந்தளவு வரவேற்பு இருக்கும் ஹீண்டாய் நினைத்து கூட பார்த்திருக்காது. அதே போல அடுத்த வருடத்தில் அதாவது அக்டோபர் 14,1999 ஆக்ஸெண்டை ரிலிஸ் செய்தபோதும் அதை கொண்டாடி இந்தியர்கள் தங்களின் ஏகோபித்த ஆதரவை ஹூண்டாய்க்கு தெரிவித்தார்கள்.பின்பு ஹீண்டாயின் வெற்றி படிகளில் ஐ10,ஐ20, கிராண்ட் ஐ10, என வரிசையாக களம் இறங்கி ஹீண்டாய் தொட்டதெல்லாம் துலங்கிடும் என நிருபிக்கவும் செய்தன. தற்போது ஹீண்டாய் லேட்டஸ்ட் அறிமுகம் எக்ஸெண்ட் தான். 4 மீட்டருக்குட்பட்ட "எக்ஸெண்ட்" எண்ட்ரி லெவல் செடான் மார்க்கெட்டுக்கு வர தயராக இருக்கிறது. மாருதி ஸ்விப்ட் டிசையர், ஹோண்டா அமேஸ், டாடாவின் அடுத்த தயாரிப்பான ஜெஸ்ட் கார்களுக்கு போட்டியாக ஹீண்டாய் எக்ஸெண்ட்டை களமிறக்குகிறது. இப்போது எக்ஸெண்ட்டின் வசதிகள் என்னென்ன என்று பார்க்கலாம். பெட்ரோல், டீசல் இரண்டு எஞ்சினிலும் வருகிறது எக்ஸெண்ட்.

ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள் சென்னை ஆன் ரோடு மதிப்பில் விலை விவரம்: பேஸிக் பெட்ரோல் = 5.43 லட்சம் எஸ் எக்ஸ் ஆப்சனல் பெட்ரோல் = 7.52 லட்சம் பேஸிக் டீசல் = 6.51 லட்சம் எஸ் எக்ஸ் ஆப்சனல் டீசல் = 8.60 லட்சம். முந்தைய மாடலான கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் தயாரிக்கபட்டிருப்பதால் எக்ஸெண்ட் அச்சு அசலாக கிராண்ட் ஐ10 அண்ணனை போலவே இருக்கிறது.நீங்கள் கார்களை பற்றி அதிகம் தெரிந்தவர் எனில் முன்பக்கம் கிரில்களை சுற்றியுள்ள சில்வர் க்ரோம் ரிங் எடுப்பாக தெரிவதை கண்டுபிடித்து விடுவீர்கள்.ஷார்ப்பான ஹெட்லைட்ஸ்,பார்க்கிங் செய்யும் போது கீறல்கள் விழாமல் இருக்க காரின் இருபுறமும் பக்கவாட்டில் ரப்பர் பீடிங் கொடுத்திருப்பது ஸ்போர்ட்ஸ் காரை போன்ற அமைப்பை தருகிறது.காரின் ரூப் பகுதி, அருவி போல பின்பக்க பூட் வழியாக முடிவடைவது புதிய டிசையரை நினைவுபடுத்துகிறது. டெயில் லைட்டுகள் சிம்பிலாகவும் , இரவு நேரங்களில் அதை போடும்போது நல்ல வெளிச்சத்தை கொடுக்கும். ரியர்வியூ மிரர்களில் இண்டிகேட்டர் அமைத்திருப்பது பிர்மீயம் செடானில் இருக்கும் வசதி. எக்ஸெண்ட்டின் முக்கியமான சிறப்பம்சம் வீல்கள் தான்.15 இஞ் அலாய் வீல்கள், செம ஸ்போர்ட்டியாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறது.இதை "டைமண்ட் கட் அலாய் வீல்கள்" என சொல்கிறது ஹீண்டாய்.எடையும் ஒரளவு இருக்கிறது என்பதால் பீல்டு குவாலிட்டியில் கிராண்ட் ஐ10 விட நன்றாகவே இருக்கும்.பெட்ரோலுக்கு விடிவிடி பேட்ஜ் இருந்தால் பெட்ரோல் எனவும் க்ற்டீ என்ற பேட்ஜ் இருந்தால் டீசல் எனவும் அடையாளப்படுத்துகிறது ஹீண்டாய்.மொத்தத்தில் ஹீண்டாய் டிசைனர்கள், கிராண்ட் ஐ10 வடிவமைக்கும்போதே அடுத்த செடானுக்கும் சேர்த்து டிசைன் செய்துவிட்டார்கள் போல.

ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

 கிராண்ட் ஐ10 இண்டிரியர் போலவே இருக்கிறது எக்ஸெண்ட்டின் உள்பக்கமும்.காரின் உள்ளே நீங்கள் அமர்ந்தால் கிராண்ட் ஐ10 காருக்குள் இருப்பதை போலவே நீங்கள் உணர்வீர்கள்.கீ-லெஸ் ஆப்சனோடு, பட்டன் ஸ்டார்ட் வசதியும் எக்ஸெண்டில் உண்டு.ஒரு ஹேட்ஸ்பேக் காரின் வீல்பேஸ்தான் என்பதால், பேனட் முன்புறம் நீளாமல், சாலை நன்றாக தெரிகிறது.உயரம் குறைவானவர்கள் ஓட்டும் வகையில் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.ஏ.சியை ஆன் செய்ததும் சில்லென்று ஆகிவிடுகிறது கேபின்.ரியர் ஏ.சி வசதியும் உண்டு என்பதால் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் குலுகுலு பயணத்தை அனுபவிக்கலாம். ஆனால் ஏ.சி டனல் நீண்டு இருப்பதால் பின்சீட்டில் மூன்று நபர்கள் அமர்ந்தால் அசவுகரியமாக இருக்கும். 5 ஸ்பிடு மேனுவல் கியர் பாக்ஸ் லக்ஸரி லுக்கில் இருக்கிறது.பெட்ரோல் வேரியண்டில் 4 ஸ்பிடு ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதியும் உண்டு.டீசல் வேரியண்ட் என்றால், ரிவர்ஸ் மேல் நோக்கியும் பெட்ரோல் என்றால் சாதாரண கார்களில் இருப்பது போலவும் இருக்கிறது. கதவுகள் பெரியதாக இருப்பதால் குண்டாக இருப்பவர்களும் எளிதில் உள்ளே செல்லலாம். எக்ஸெண்டில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அதன் வசதிகள் தான். இதில் மிக முக்கிய மாடலான எஸ்.எக்ஸ் ல் ஆட்டோ கிளைட்மேட் கண்ட்ரோல் , ரியர் பார்க்கிங்க் சென்சார், ரியர் ஏ.சி, ரியர்வியூ கேமரா, கீ-லெஸ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் , சென்ட்ரல் லாக்கிங், எலெக்ட்ரிக் போல்டிங் மெட்டிரியல்ஸ், காரை சுற்றிலும் பாட்டில் ஹோல்டர்கள், கப் ஹோலடர்கள், ஸ்டியர்ங் மவுண்டட் கண்ட்ரோல் என்று வசதிகளை அள்ளி இறைத்திருக்கிறார்கள். மேலும் இதன் ஆடியோ ஸிஸ்டம் துள்ளலான இசையை கொடுக்கிறது. ஆடியோ ஸிஸ்டத்தில் புளுடூத் வசதியும் உண்டு. பூட்-ஸ்பேஸ் 407 லிட்டர் இடவசதி இருக்கிறது. 1.1 லிட்டர் 3 சிலிண்டர்கொண்ட CRDi டீசல் இன்ஜின், 12. கப்பா கொண்ட VTVT பெட்ரோல் இன்ஜின் என இரண்டு ஆப்ஷன்களில் வருகிறது எக்ஸென்ட்.

ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

 'நான் அப்படித்தான் வைப்ரேஷன் ஆவேன்’ என்று ஆரம்பத்தில் அடம்பிடிக்கிறது CRDi டீசல். ஆனால், கொஞ்சூண்டு ஆர்பிஎம் தாண்டிய பிறகு அதிர்வுகள் அரவமற்றுப் போகின்றன. அமேஸின் 1.5 லிட்டரைவிடவும், டிசையரின் 1.3 லிட்டரைவிடவும் சிசி குறைவாக இருந்தாலும், லோ ரேஞ்சில் எக்ஸென்ட்டின் திராட்டில் ரெஸ்பான்ஸ் இரண்டு கார்களுக்கும் இணையானதாகவே இருக்கிறது. காரணம் - எக்ஸ்ட்ரா டார்க். 18.4 kgm கொண்ட டார்க், சிட்டி டிராஃபிக்கில் புதுந்து விளையாட உதவுகிறது. கிராண்ட் ஐ10-ல் இருக்கும் அதே இன்ஜினை செடான் காருக்காக கொஞ்சம் ரிஃபைன் செய்திருக்கிறது ஹூண்டாய். அதாவது, 70 bhp-யும் 16.3 kgm டார்க்கும்கொண்ட கிராண்டைவிட 1 bhp அதிகமாகவும், 2.1 kgmடார்க்கும் எக்ஸ்ட்ராவாக வெளிப்படுவதால், பிக்-அப் பிரமாதம். ஆனால், மிட் ரேஞ்சில் பெரிதாக 'வ்வ்ர்ர்ரூம்’ பெர்ஃபாமென்ஸை எதிர்பார்க்க முடியவில்லை. இதுவே நான்கு சிலிண்டர்கள்கொண்ட 1.2 கப்பா பெட்ரோல் இன்ஜினில், ஒரு மென்மைத் தன்மை தெரிந்தது. நெடுஞ்சாலையில் 83 bhp, பரபரவென்று தன் வேலையைக் காட்டுகிறது. 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்கும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸும் இதற்கு ஏற்றவாறு இருக்கின்றன. நெடுஞ்சாலையில் இதன் டாப் ஸ்பீடைச் சோதனை செய்தபோது, அதிர்வுகளற்று 175 கி.மீ-யைக் கடந்து சென்றது எக்ஸென்ட். பொதுவாக ஃபோர்டு, ஃபியட், மாருதி அளவுக்கு ஹூண்டாயில் ஓட்டுதல் தரம் இருக்காது என்ற குற்றச்சாட்டை ஓரளவு பொய்யாக்கி இருக்கிறது எக்ஸென்ட். டாப் ஸ்பீடில் நம்பிக்கையுடன் பயணிக்க முடிகிறது. திராட்டில் ரெஸ்பான்ஸ் லேசாகவும் வேகமாகவும் இருப்பதால், நம் சொல்படி நகர்கிறது எக்ஸென்ட். கிராண்ட் ஐ10 போலவே ஓட்டுதவற்கு பெப்பியாகவும், ஓவர்டேக் செய்யும்போது கையாளுவதற்கு எளிமையாகவும் உள்ளது. நான்காவது கியரில்கூட 100 கி.மீ வேகம் வரை செல்ல முடியும்படி கியர்பாக்ஸ் வடிவமைக்கப்பட்டிருப்பதால், சிட்டி டிராஃபிக்கில் அடிக்கடி கியரை மாற்றச் சொல்லி தொந்தரவு கொடுக்கவில்லை எக்ஸென்ட். கிராண்ட் ஐ10-ல் இருக்கும் அதே சஸ்பென்ஷன் இங்கேயும் ஷிஃப்ட் ஆகியிருக்கிறது.

ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

<a target="_blank" href="http://www.goldenclix.com/?ref=Onlinejobs8447"><img src="http://www.goldenclix.com/images/banner1.gif" border="0" width="468" height="60" /></a>

 முன் பக்கம் இண்டிபென்டன்ட் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட், பின் பக்கம் டார்ஷன் பீம் ஆக்ஸில், ஸ்பீடு பிரேக்கர்களில் அசால்ட்டாக எகிறிக் குதிக்க உதவுகிறது. ஏபிஎஸ் பிரேக்குகள் ஓகே ரகம். ஒரு செடான் காருக்கே உரிய டயர்கள், ஓரளவு கிரிப்பைத் தருகின்றன. கியர்பாக்ஸ் முதல் கிளட்ச் வரை கிட்டத்தட்ட எல்லாமே கிராண்ட் ஐ10-ன் காப்பிகேட் என்பதால், நிச்சயம் ஒரு ஹேட்ச்பேக் காரின் மைலேஜ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ARAI விதிமுறையின்படி எக்ஸென்ட் டீசல், மைலேஜ் 24.4 kmpl தரும் என்கிறது ஹூண்டாய். முழுமையான டெஸ்ட் டிரைவ் செய்யாததால், ஆட்டோமேட்டிக், பெட்ரோல் எக்ஸென்ட்டின் மைலேஜ் விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.மூத்த குடிமக்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசிகள்


ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளோட்டர் பாலிசிகளில் அதிகபட்சம் கணவன், மனைவி இரு குழந்தைகள் என்ற கவரேஜ் கிடைக்கும் வகையில் பாலிசிகள் உள்ளன.இந்த பாலிசிகளில் 60 வயதுக்கு மேற்ப்பட்ட மூத்த குடிமக்களுக்கு இடம் இருக்காது. ஆனால் நிறுவனங்கள் வழங்கும் குருப் இன்சூரன்ஸ் பாலிசிகளில் மூத்த குடிமக்களுக்கு கவரேஜ் கிடைக்கும்.மூத்த குடிமக்களுக்கான மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திலேயே பலரும் உள்ளனர். மூத்த குடிமக்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிற மாதிரி பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த பாலிசிகள் உண்மையிலேயே அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறதா, அவற்றில் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என பார்ப்போம்.

                       

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 மூத்த குடிமக்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுக்கும்போது கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.ஏற்கனவே உள்ள வியாதிகளுக்கு இந்த பாலிசியில் கவரேஜ் இல்லை.தவிர இவர்களுக்கு காத்திருப்பு காலம் உண்டு. இந்த பாலிசியில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது செலவாகும் தொகையில் குறிப்பிட்ட தொகையை பாலிசிதாரரே செலுத்த வேண்டும். இது செலவு தொகையில் 15-50 சதவிகிதம் என இன்சூரன்ஸ் நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். மேலும் கணவன், மனைவி இருவரும் மூத்த குடிமக்கள் என்றாலும் ஒரே ப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியாது. இருவருக்கும் தனித்தனியாகவே எடுக்க வேண்டும். 5 லட்சம் வரைதான் கவரேஜ் கிடைக்கும். ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் கட்டி புதுபித்து கொள்ள வேண்டும். என்றாலும் அதிக கிளைம் செய்திருந்தால் நிறுவனங்கள் அவர்களின் பாலிசியை புதுப்பிக்காமல் ரத்து செய்து விடுகின்றன.மூத்த குடிமக்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி தருவது அதிக ரிஸ்க் கொண்டது.இதில் கணவன், மனைவி இருவருக்கும் ப்ளோட்டர் பாலிசி வழங்கினால் அதிக கிளைம் வர வாய்ப்பு உள்ளதால் ப்ளோட்டர் பாலிசி தருவதில்லை.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

  AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys

மூத்த குடிமக்கள் பாலிசி எடுத்த பிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் முதலில் உங்களின் டி.பி.ஏ யார்? அவரின் இலவச தொலைபேசி எண் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். டி.பி.ஏ நிறுவனத்துக்கு போன் செய்து உங்களின் இன்சூரன்ஸ் தொகை எவ்வளவு, எந்தெந்த வியாதிகளுக்கு கவரேஜ் உண்டு, கேஸ்லெஸ் வசதி எந்தெந்த மருத்துவமனையில் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் எந்தெந்த மருத்துவமனைகள் உள்ளன,அதில் நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டால், பாலிசியில் கிளைம் பெற முடியுமா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.சிகிச்சை எடுக்கும் முன் செலவு தொகையில் எத்தனை சதவிகிதம் பாலிசிதாரர் தரவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 


 மேலும் பாலிசிதாரர்கள் செய்யும் தவறுகள் என்னவென்றால் மூத்த குடிமக்களுக்கான பாலிசியை பெரும்பாலும் அவர்களின் பிள்ளைகள் தான் எடுத்து தருகிறார்கள். இதில் அவர்கள் பாலிசி புதுபிக்கும் தேதியை மறந்து விடுகிறார்கள். இதனால் மீண்டும் புதிதாக பாலிசி எடுக்க வேண்டிய நிலை வருகிறது. இதனால் ஏற்கனவே உள்ள வியாதிகளுக்கு கவரேஜ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.அதோடு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் போது அறை வாடகையை கவனிப்பது அவசியம்.ஏனெனில் கவரேஜ் தொகையில் 1 சதவிகிதம் தான் அறை வாடகையாக இருக்கும்.இது அதிகமாகும் போது கிளைம் தொகை குறைவதற்கான வாய்ப்பு உண்டு. கட்டணம் குறைவாக உள்ள தரமான மருத்துவமனைகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.பொதுவாக 60 வயதுக்குமேல் மருத்துவ தேவைகள் அதிகமாக இருக்கும்.எனவே குறைவான தொகைக்கு கிளைம் செய்யாமல் இருப்பதே நல்லது.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

 பெற்றோர்களுக்கு மூத்த குடிமக்களுக்கான பாலிசி எடுத்துவிட்டோம் என்று இல்லாமல் மருத்துவ தேவைகளுக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து வைப்பது முக்கியம்.அதே போல எந்தெந்த வியாதிகளுக்கு எல்லாம் கவரேஜ் இல்லை என்பதையும் நினைவு வைத்து கொள்ள வேண்டும்.


2 May 2014

மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் - அறிமுகம்


ஸ்மார்ட் வாட்சுகளின் ஆதிக்கம் தொடங்கியுள்ள நிலையில் எல்.ஜி, சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்த படியாக மோட்டோரோலாவும் தனது ஸ்மார்ட் வாட்ச்சான மோட்டோ 360 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.. இது இன்னும் வர்த்தகத்துக்கு வரவில்லை என்றாலும், அதன் மீது எதிர்பார்ப்பு ஏராளம்.

                    

 கவர்ச்சிகரமான தோற்றத்தோடு முழுக்க முழுக்க உயர்ந்த ரக உலோகத்தினால் தயார் செய்யப்பட்டுள்ளது இந்த மோட்டோ 360. மோட்டோ 360 டயல் அதிநவீன ஓஏல்டி தொடுதிரையை ( டச்ஸ்க்ரீன் ) கொண்டுள்ளது.இதில் ஒரு மைக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மோட்டோ 360 க்கு வாய்மொழி உத்தரவு அளிக்கலாம்.இந்த வாய்மொழி உத்தரவுகளை கொண்டு ரிமைண்டர், அலாரம், பேஸ்புக், டிவீட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் மெசெஜ்கள், கூகுள் மேப், வானிலை அறிக்கைகள் போன்ற அத்தனை சேவைகளையும் பெறலாம். லேப்டாப், ஸ்மார்ட்போன்,டேப்லேட், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் என அனைத்திலும் மோட்டோ 360 யை இணைத்து பயன்படுத்த முடியும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

 கீழே விழுந்தால் உடைவதிலிருந்து தப்பிக்கவும், கீறல்கள் விழாமல் இருக்கவும் மோட்டோ 360 சாப்பியர் கிளாஸ் என்ற உயர் ரக கண்ணாடி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வாட்டர் ரெசிஸ்டென்ஸ் வசதியையும் கொண்டிருக்கிறது மோட்டோ 360. இந்த வாட்சு வரும் வாரங்களில் சந்தைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைவாக தான் இருக்கும் என மோட்டோரோலா அறிவித்துள்ளது.


இ-பே யின் அபார வளர்ச்சி - ஒரு பார்வை.
தற்போது இணையத்தில் பொருட்களை விற்பனை செய்ய பல இணையத்தளங்கள் உள்ளன. ஆனால் முதன்முதலில் பொருட்களை ஆன்லைனில் விற்கலாம் என அறிமுகப்படுத்திய இ-பே நிறுவனம் தான் என்றும் முன்ணணியில் உள்ளது.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

 ஒரு பொருளை விற்பது மற்றும் சந்தைபடுத்துதலை அடுத்த கட்ட வளர்ச்சியாக இ-காமர்ஸ் அடைந்துள்ளது. இணையத்தை பயன்படுத்தி வர்த்தகம் செய்வதில் அமெரிக்காவின் இ-பே நிறுவனத்துக்கு முக்கிய பங்கு உண்டு.1995 ஆம் ஆண்டு இ-பே தொடங்கப்பட்டது.அப்போது இணையத்தை பயன்படுத்துவோர் குறைவான விகிதத்தில் இருந்ததால் இ-பே முக்கியத்துவம் பெறாமல் இருந்தது. ஆனால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இ-பே கண்ட வெற்றிதான் இன்று பிற ஆன்லைன் நிறுவனங்கள் வர தூண்டுகோலாக உள்ளது. இ-பே நிறுவனத்தை தொடங்கியவர் பியர் மொராட் ஒமிடியர்.இவர் ஒரு ஈரானியர். வளர்ந்தது பிரான்ஸிலும் அமெரிக்காவிலும். கணினி அறிவியல் பட்டபடிப்பு படித்ததுடன் சில நிறுவனகளில் பணியாற்றி வந்த இவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வரவே இ-பே நிறுவனத்தை தொடங்கினார்.இ-பே நிறுவனத்தை பொறுத்தவரை சொந்த பொருட்களையோ, அல்லது வெளியிலிருந்து பொருட்களை வாங்கி இருப்பு வைத்து கொண்டு விற்கும் நிறுவனம் கிடையாது.வாங்குபவருக்கும் , விற்பவருக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தும் ஒரு சந்தைபடுத்துதல் இடம் மட்டுமே.அதாவது இது ஒரு பிளாட்பாரம் மட்டுமே.இ-பேயின் முதல் விற்பனை பொருள் ஒரு உடைந்த லேசர் சுட்டி.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள்  புதுபொருட்களை மட்டுமில்லாமல்,பழைய பொருட்கள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள், இவை யாவற்றையும் இணைய உலகில் விற்பனை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை கொடுத்தது இந்த விற்பனைதான்.வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தைப்படுத்துவது என்பது அந்த காலகட்டத்தில் முக்கியமான உத்தி என்று சொல்லலாம்.இதை முழுக்க முழுக்க ஒரு தொழில் வாய்ப்பாக பார்த்தார் ஒமிடியர். ஆனால் வாடிக்கையாளர்களை கவர சில வசதிகளை செய்து கொடுக்கவும் நினைத்தார் ஒமிடியர்.ஒரு பொருளை சந்தைபடுத்தும் போது அது தொடர்பான விவரங்கள்,பயன்பாடுகள் மற்றும் விலைகள் குறிப்பிடுவதுதான் ஆன்லைன் வர்த்தகத்தில் இதர நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நடைமுறையை மாற்றி விலையை இறுதி செய்யும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தார்.அதாவது பேரம் பேசும் வாய்ப்பை கொடுத்தார் ஒமிடியர்.இந்த பேரம் பேசும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஷோரூம் விற்பனைக்கும், ஆன்லைன் விற்பனைக்குமான இடைவெளியை குறைக்க முடிந்தது.அதனால் வாடிக்கையாளர்கள் ஷோரூம் விற்பனையில் பேரம்பேசி வாங்கும் உணர்வை இ-பேயில் வாங்கும்போது அனுபவித்தனர்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

  AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys

 இ-பே அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும் உலகம் முழுவது, தனக்கான சந்தை வாய்ப்பை உருவாக்கி வைத்துள்ளது. இ-பே தனக்கென்று உருவாக்கி வைத்துள்ள இன்னொரு விஷயம் நம்பகத்தன்மை. ஆன்லைன் வர்த்தகத்தில் வெற்றி பெற அடிப்படை தகுதி பொருட்களின் மீதான நம்பகத்தன்மை தான். இந்த விஷயத்தில் சந்தேகத்துக்கு அப்பாற்ப்பட்ட நிறுவனமாக இ-பே தன்னை உருவாக்கியிருக்கிறது. ஒரு பொருளை சந்தைப்படுத்துகிறது என்றால் உள்ளதை உள்ளபடிதான் காட்சிப்படுத்துவார்கள். தவிர ஒரே மாடலில் பல பொருட்கள் இருக்கிறது என்றால், எல்லாவற்றையும் குறிப்பிடுவார்கள்.

இப்படியான வெளிப்படைத்தன்மை வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுப்பு சுதந்திரத்தை தருகிறது. இ-பே போட்டுக்கொடுத்த பாதையில் தான் இன்றைக்கு உள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வந்தன. இன்று சீனாவில் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமாக இருக்கும் அலிபாபா இ-பே யின் இன்னொரு அவதாரம் தான்.ஆனால் மக்கள் தொகை அதிகம் உள்ள சீனாவில் அலிபாபா வேறு சில உத்திகளை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இப்போதும் ஆயிரம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இருந்தாலும் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் மக்கள் அன்னிச்சையாக தேடும் இணையதளம் இ-பே தான்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

 ஒரே பொருளை ஷோரூமில் வாங்குவதைவிட,ஆன்லைன் மூலம் வாங்குவது விலை குறைவாக இருப்பதால், பலரும் விலை குறைவாக இருப்பதால், பலரும் அதிலேயே வாங்குகின்றனர்.இதனால் ஷோரூம் வைத்திருக்கும் நிறுவனங்கள் பாதிப்பை உணர்ந்து வருவதால், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்திருக்கின்றன சில நிறுவனங்கள்.இதன்படி ஷோரூமுக்கு பொருட்களை தருவதாக இருந்தாலும் சரி, ஆன்லை வர்த்தகத்துக்கு தருவதாக இருந்தாலும் ஒரே விலையில் தர முடிவு செய்துள்ளன. ஷோரூமில் அதிக விலைக்கு வாங்கிவிட்டோமே என்ற எண்ணம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாமல் இருக்கவே இந்த முடிவை எடுத்திருக்கிறதாம் அந்த நிறுவனங்கள்.இந்த பிரச்சனையை இ-பே எப்படி சமாளிக்க போகிறது என்பதை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது.


இயற்கை உணவு பழக்கம்இன்று இளம் வயதில் வரும் பல நோய்களுக்கு காரணம் நம்மிடையே மாறி வரும் உணவு பழக்கவழக்கங்கள் தான். அந்த காலத்தில் காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு வெறும் நீராகரம் மட்டும் அருந்திவிட்டு வயலுக்கு சென்றார்கள் என்றால் மதியம் வரை ஒயாத உழைப்பு, பின் மதியம் சாப்பிட்டு விட்டு சிறு ஓய்வு, அதன்பின்பு கடுமையான வேலை மாலை வரை அதன்பின் இரவு நேரமே சாப்பிட்டு விட்டு நல்ல நிம்மதியான உறக்கம் என ஒரு முறையோடு வாழ்ந்தனர்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

 ஆனால் இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர்களின் ஒட்டத்திற்க்கு தகுந்தவாறு தங்களின் உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டனர். நேரம் தவறி சாப்பிடுவது, தண்ணீர் முதற்கொண்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது என நம் உணவுபழக்கம் மாறிவிட்டது. வெளிப்புற தோற்றத்திற்க்கு அதிக முக்கியத்துவம் தரும் நாம் சாப்பிடும் உணவுகளில் அக்கறை எடுத்து கொள்வதில்லை. இன்று நாம் சாப்பிடும் உணவுகளில் கெமிக்கல்கள் இல்லாத பொருளே இல்லை. இது நகரம் மட்டுமில்லாமல் கிராமம் வரை பழகிவிட்டது.

ஒரு சிறிய உதாரணம், நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு தரும் குளிர்பானங்கள். முன்னர் நம் வீட்டில் எலுமிச்சை சாறில் தயாரிக்கப்படும் ஜூஸ்கள் தான் கொடுத்து உபசரிப்போம். ஆனால் இப்போது கடையில் விற்க்கும் குளிர்பானங்களை தான் கொடுக்கிறோம். இப்படித்தான் நமது வாழ்க்கை அவசரகதியாக போய்கொண்டிருக்கிறது. நம் கலாச்சாரத்தை பார்த்து மற்ற உலக நாடுகள் வியந்து கொண்டிருக்கும் போது நாம் நம் சுயத்தை தொலைத்து விட்டு நம் வருங்காலத் தலைமுறையினருக்கு தவறான பாதையை கற்று கொடுத்து கொண்டிருக்கிறோம். இதிலிருந்து மாற வழியில்லையா? என்று கேள்வி கேட்டால் பதில் "இருக்கிறது" என்பது தான். அதுதான் இயற்கை உணவு பழக்கம்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

  AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys

இயற்கை உணவு என்பது நாம் வாழும் இடம், அந்த இடத்தில் வளரும் அல்லது அந்தந்த காலங்களில் கிடைக்கக்கூடிய விளைபொருட்கள் சார்ந்து உருவாக்கப்பட்டது தான் நம் உணவு பழக்கமுறை. அதைத்தான் நம் முன்னோர்கள் காலம்காலமாக கடைபிடித்து வந்தனர். அவர்களது உணவு பழக்கத்தை பின்பற்றினால் நாம் மருத்துவமனை செல்ல தேவையில்லை. நாம் ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு சாப்பிடுகிறோம். அதை ஒரு வேளை சமைக்காத உணவு, ஒரு வேளை அரிசி, சர்க்கரை , உப்பு சேர்க்காத உணவு , ஒரு வேளை எண்ணெய் இல்லாத ஆவியில் வேகாத உணவு என பிரித்து எடுத்து கொண்டால் சில நாட்களில் பல மாற்றங்களை நம் உடலில் காணலாம்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

வேகாத உணவு என்றால் பழ வகைகள், பச்சையாக இருக்கும் காய்கறிகள், கீரைகள், கேரட், பீட்ரூட், தக்காளி போன்ற காய்கறிகள் உடலுக்கு தேவையான சத்தினை கொடுக்கும். அசைவம் சாப்பிடுவதை விட இவற்றில் மிகுந்த சத்துகள் உள்ளன. அது மட்டுமில்லாமல் எளிதாக ஜீரணமும் ஆகிவிடும். தவிர்க்க வேண்டிய உணவுகள் என்றால் அரிசி, மைதா, பால், உப்பு, சர்க்கரை ( அஸ்கா ) ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் அவசியம். இன்று இளம் வயதினரும் கூட மூட்டுவலி,உடல் எடை அதிகரித்தல், தலைமுடி உதிர்வது, சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகிறார்கள். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளால் தான் இந்த பிரச்சனைகள் வருகிறது.இயற்கை மருத்துவத்தில் சில சமயம் ஒரே மருந்து கூட பல பிரச்சனைகளை தீர்க்கும்.காய்கறிகளை கழுவிய பின் நறுக்க வேண்டும்.நறுக்கியபின் கழுவினால் அதன் சத்துகள் நீரோடு போய்விடும். அதேபோல கேரட், ஆப்பிள், வெள்ளரி போன்றவற்றை கழுவிய பின் கடித்து சாப்பிட வேண்டும்.தோல் நீக்கியும், நறுக்கியும் சாப்பிடுவது தவறு. இப்படி இயன்றவரை இயற்கை உணவு, இல்லாத போது சமைத்த உணவு என நம் வழக்கத்தை மாற்றிக்கொண்டால் விரைவாக நாம் நோயற்ற வளமான வாழ்க்கைக்கு நாமும் நம் சந்ததிகளையும் அழைத்து செல்லலாம்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள்