ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள்
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள்
மூத்த குடிமக்கள் பாலிசி எடுத்த பிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் முதலில் உங்களின் டி.பி.ஏ யார்? அவரின் இலவச தொலைபேசி எண் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். டி.பி.ஏ நிறுவனத்துக்கு போன் செய்து உங்களின் இன்சூரன்ஸ் தொகை எவ்வளவு, எந்தெந்த வியாதிகளுக்கு கவரேஜ் உண்டு, கேஸ்லெஸ் வசதி எந்தெந்த மருத்துவமனையில் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் எந்தெந்த மருத்துவமனைகள் உள்ளன,அதில் நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டால், பாலிசியில் கிளைம் பெற முடியுமா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.சிகிச்சை எடுக்கும் முன் செலவு தொகையில் எத்தனை சதவிகிதம் பாலிசிதாரர் தரவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள்
மேலும் பாலிசிதாரர்கள் செய்யும் தவறுகள் என்னவென்றால் மூத்த குடிமக்களுக்கான பாலிசியை பெரும்பாலும் அவர்களின் பிள்ளைகள் தான் எடுத்து தருகிறார்கள். இதில் அவர்கள் பாலிசி புதுபிக்கும் தேதியை மறந்து விடுகிறார்கள். இதனால் மீண்டும் புதிதாக பாலிசி எடுக்க வேண்டிய நிலை வருகிறது. இதனால் ஏற்கனவே உள்ள வியாதிகளுக்கு கவரேஜ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.அதோடு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் போது அறை வாடகையை கவனிப்பது அவசியம்.ஏனெனில் கவரேஜ் தொகையில் 1 சதவிகிதம் தான் அறை வாடகையாக இருக்கும்.இது அதிகமாகும் போது கிளைம் தொகை குறைவதற்கான வாய்ப்பு உண்டு. கட்டணம் குறைவாக உள்ள தரமான மருத்துவமனைகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.பொதுவாக 60 வயதுக்குமேல் மருத்துவ தேவைகள் அதிகமாக இருக்கும்.எனவே குறைவான தொகைக்கு கிளைம் செய்யாமல் இருப்பதே நல்லது.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள்
பெற்றோர்களுக்கு மூத்த குடிமக்களுக்கான பாலிசி எடுத்துவிட்டோம் என்று இல்லாமல் மருத்துவ தேவைகளுக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து வைப்பது முக்கியம்.அதே போல எந்தெந்த வியாதிகளுக்கு எல்லாம் கவரேஜ் இல்லை என்பதையும் நினைவு வைத்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment