சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 May 2014

மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் - அறிமுகம்


ஸ்மார்ட் வாட்சுகளின் ஆதிக்கம் தொடங்கியுள்ள நிலையில் எல்.ஜி, சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்த படியாக மோட்டோரோலாவும் தனது ஸ்மார்ட் வாட்ச்சான மோட்டோ 360 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.. இது இன்னும் வர்த்தகத்துக்கு வரவில்லை என்றாலும், அதன் மீது எதிர்பார்ப்பு ஏராளம்.

                    

 கவர்ச்சிகரமான தோற்றத்தோடு முழுக்க முழுக்க உயர்ந்த ரக உலோகத்தினால் தயார் செய்யப்பட்டுள்ளது இந்த மோட்டோ 360. மோட்டோ 360 டயல் அதிநவீன ஓஏல்டி தொடுதிரையை ( டச்ஸ்க்ரீன் ) கொண்டுள்ளது.இதில் ஒரு மைக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மோட்டோ 360 க்கு வாய்மொழி உத்தரவு அளிக்கலாம்.இந்த வாய்மொழி உத்தரவுகளை கொண்டு ரிமைண்டர், அலாரம், பேஸ்புக், டிவீட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் மெசெஜ்கள், கூகுள் மேப், வானிலை அறிக்கைகள் போன்ற அத்தனை சேவைகளையும் பெறலாம். லேப்டாப், ஸ்மார்ட்போன்,டேப்லேட், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் என அனைத்திலும் மோட்டோ 360 யை இணைத்து பயன்படுத்த முடியும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.



ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

 கீழே விழுந்தால் உடைவதிலிருந்து தப்பிக்கவும், கீறல்கள் விழாமல் இருக்கவும் மோட்டோ 360 சாப்பியர் கிளாஸ் என்ற உயர் ரக கண்ணாடி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வாட்டர் ரெசிஸ்டென்ஸ் வசதியையும் கொண்டிருக்கிறது மோட்டோ 360. இந்த வாட்சு வரும் வாரங்களில் சந்தைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைவாக தான் இருக்கும் என மோட்டோரோலா அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment