இதன் வடிவமைப்பு கவர்ச்சிகரமாக இருந்தாலும் விலைதான் கொஞ்சம் பயப்பட வைக்கிறது. ஆனாலும் மற்ற ஸ்மார்ட் போன்களுடன் ஒப்பிடும் போது குறைவுதான். லெனோவா எஸ்860 யின் விலை 21,500 ரூபாய். லெனோவா எஸ்860 யின் தொடு திரையின் அளவு 5.3 இன்ச்சுகள். ஆனால் 24,000 ரூபாய் விலையுடைய எல்ஜி ஆப்டிமஸ் 4.7 தொடுதிரையையும், 23,600 ரூபாய் விலையுடைய சாம்சங் கேலக்ஸி எஸ்3 நியோ 4.8 இன்ச்சுகள் தொடுதிரையையும் கொண்டுள்ளன.
அதே போல, எல்.ஜி ஆப்டிமஸ் (1.5 GHZ quad core ) ஸ்மார்ட் போனைவிட லெனோவா எஸ்860 1.3GHz quad core குறைவான பிராஸசர் கொண்டிருந்தாலும் அதற்கு இணையாக லெனோவா எஸ்860 யின் செயல்பாடு இருக்கிறது. லெனோவா எஸ்860 யின் இண்டர்னல் மெமரி 16ஜிபி ஆகும். எஸ்டி கார்டு மூலம் 64ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.பேட்டரி வசதியை பார்க்கும் போதும் லெனோவா எஸ்860 4000mApi சக்தி வாய்ந்த பேட்டரியை கொண்டுள்ளது.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.
ஆனால் எல்.ஜி ஆப்டிமஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்3 நியோ மிகக் குறைவான பேட்டரி திறனைக் கொண்டுள்ளன. லெனோவா எஸ்860 யின் பின்புற கேமராவை மற்ற இரண்டு ஸ்மார்ட் போன்களுடன் ஒப்பிடும் போது குறைவுதான். லெனோவா எஸ்860 யின் பின்புற கேமரா 8 மெகா பிக்ஸல்கள். ஆனால் முன்புற கேமரா 1.6 மெகா பிக்ஸல். இது எல்ஜி ஆப்டிமஸ் போனைவிட அதிகமாகவே இருக்கிறது.
லெனோவா எஸ்860 யில் இருக்கு டூயல் சிம் வசதி எல்ஜி ஆப்டிமஸில் கிடையாது. லெனோவா எஸ்860 யின் ஆண்ராய்டு அமைப்பும் மற்ற இரண்டு ஸ்மார்ட் போன்களை ஒப்பிடும் போது அதிக தன்மையுடன் இருக்குறது. அதேபோல பேட்டரியை பொறுத்தவரை டாக்டை 43 மணி நேரமும், Stand-by (3G) 960 மணி நேரமும் பேசக்கூடிய அளவுக்கு உள்ளது. லெனோவா எஸ்860 மற்ற இரண்டு ஸ்மார்ட் போன்களை விட குறைவான விலையில் கிடைப்பது நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment