சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 May 2014

அவுட் பேஷண்ட் பாலிசி - அறிமுகம்


தற்போது இன்சுரன்ஸ் உலகில் புதிய அறிமுகம் அவுட் பேஷண்ட் பாலிசி. மெடிக்கிளைம் பாலிசியில் ஹாஸ்பிடலில் 24 மணி நேரம் அட்மிட் ஆகியிருந்தால் மட்டுமே இழப்பீடு தரும் பாலிசிகள் இருந்தன. இப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் வெளிநோயாளியாக இருப்பவர்களும் இழப்பீடு பெறும் பாலிசி அறிமுகமாகியுள்ளது. இந்த பாலிசி எடுத்தவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் மருத்துவர் பரிந்துரைப்படி மருத்துவம் செய்து கொண்டு இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் தந்து இழப்பீடை பெறமுடியும்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.

 இந்த வகை அவுட் பேஷண்ட் பாலிசிகள் தனியாக கிடைக்காது. ஹெல்த் இன்சுரன்ஸ் பாலிசிகளோடு துணை பாலிசியாக கிடைக்கும். இந்த துணை பாலிசி பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளது. மெடிக்கிளைம் பாலிசி எடுப்பவர்கள் இந்த துணை பாலிசியில் ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். இந்த பாலிசிகள் பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை தினசரி நம் வாழ்வில் ஏற்படும் மருத்துவ செலவுகளை குறைக்க உதவும். பொதுவாக ஹெல்த் இன்சுரன்ஸ் பாலிசி எடுக்கும் போது வயது, பழக்க வழக்கம் ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு ஏற்றாற்போல பாலிசி பிரீமியம் இருக்கும். இந்த பாலிசி மூலம் மருத்துவமனைக்கு வெளியே செய்யும் மருத்துவ செலவுகளை இந்த பாலிசி மூலம் செய்யலாம்.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். WordLinx - Get Paid To Click

 இந்த அவுட் பேஷண்ட் பாலிசி மூலம் நோய் கண்டறியும் சோதனைகள், ஸ்கேன், மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவம் செய்து கொண்டு வாங்கும் மருந்துகள் வாங்குவதை கிளைம் செய்ய முடியும். மேலும் பல் பரிசோதனைகள், சுத்தம் செய்தல், பல் மாற்றுவது போன்றவற்றுக்கும் இந்த பாலிசி மூலம் கிளைம் செய்யலாம். கண்ணுக்கு கண்ணாடி அணிபவர்கள் கண்ணாடியை மாற்ற வேண்டுமெனில் இந்த பாலிசியில் கிளைம் பெற முடியும்.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.

 மருத்துவரின் பரிந்துரைப்படி, ஒருவர் ஜிம்முக்கு போக வேண்டும், யோகா கற்றுக்கொள்ள வேண்டுமெனில், அதற்கு தேவையான ஆவணங்களை மருத்துவர் தந்தால், அந்த செலவுகளையும் இந்த அவுட் பேஷண்ட் பாலிசியில் க்ளைம் பெறமுடியும். தற்போது சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவத்துகூட சரியான ஆவணங்களை இன்சுரன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்தால் க்ளைம் பெறமுடியும். கண் கண்ணாடியில் லென்ஸ்க்கு மட்டும் க்ளைம் கிடைக்கும்.

ஆனால் பிரேம்களுக்கு க்ளைம் பெறமுடியாது. மேலும் மருத்துவர் பரிந்துரைத்தாலும் ஊட்டச்சத்து டானிக்குகளுக்கான செலவை க்ளைம் பெறமுடியாது. 26-35 வயது உள்ள ஒருவர் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால் 4500 ரூபாய் பிரிமீயம் செலுத்துகிறார் என்றால் 5 லட்சம் கவரேஜ் கிடைக்கும்.

இதுவே அவுட் பேஷண்ட் பாலிசியுடன் எடுத்தால் சுமார் 8500 ரூபாய் வரை பிரீமியம் கட்டவேண்டி இருக்கும். இந்த வயதினர் அவுட்பேஷண்ட் பாலிசி மூலம் சுமார் ரூபாய் 5000 க்ளைம் செய்து கொள்ளமுடியும். பிற வயதுள்ளவர்கள் 2500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை க்ளைம் பெறமுடியும். அதே போல இந்த பாலிசியை எடுப்பதன் மூலம் 80Dன் படி ரூபாய் 15000 வரை வரிச்சலுகை பெறமுடியும்.இதுவே வயதானவர்களுக்கு ரூபாய் 20000 வரை வரிச்சலுகை பெறமுடியும். இந்த அவுட் பேஷண்ட் பாலிசி ICICI Lombard ஜெனரல் இன்சூரன்ஸ் இந்த அவுட் பேஷண்ட் துணைப்பாலிசியை தருகிறது. Appolo Munich நிறுவனம் மேக்ஸிமா கம்ப்ளீட் ஹெல்த் பிளான் பாலிசியில் மருத்துவமனை செலவுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெளியே ஆகும் செலவுகளுக்கும் க்ளைம் தருகிறது.இதேபோல் Bajaj Alliance டாக்ஸ் கெயின் பிளானிலும் இந்த அவுட் பேஷண்ட் பாலிசியில் க்ளைம் தருகிறது.


No comments:

Post a Comment