சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jun 2014

அசத்தும் ‘அக்காச்சிகள்’!


குடும்பமே உழைக்கும் வர்க்கம் நமது வர்க்கம். எப்போதும் வாடிக்கையாளர்களிடம் கிராக்கி இருக்கும் ஒரு தொழில்... மளிகைக் கடை தொழில். அப்படியான அண்ணாச்சி கடைகள், தமிழ்நாடு முழுக்க தலைமுறை தலைமுறையாக பரவியிருக்கின்றன. சில அல்ல... இப்போது பல கடைகளில் அண்ணாச்சிகளுக்கு இணையாக பம்பரம் போல் சுற்றி வேலை செய்கிறார்கள் 'அக்காச்சிகள்’.


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.  இப்படி, வாரத்தில் ஏழு நாட்களும் கடையில் உழைக்கும் கணவருக்கு கைகொடுக்கவும், குடும்பத்தின் வருமானத்தை மேலும் பெருக்கவும் மளிகைக் கடையில் கலக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் சிலரைச் சந்தித்தோம்! தேனியைச் சேர்ந்த வளர்மதி, சர்வீஸில் சீனியர். ''கல்யாணமாகி 25 வருஷம் ஆகுது. கைபிடிச்ச நாள் முதலா அவருக்கு துணையா கடையிலயும் நிக்கிறேன். ஆரம்பத்தில் மூணு பிள்ளைகளையும் பார்த்துகிட்டு, மளிகைக் கடையையும் பார்த்துக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். அப்புறம் பழகிடுச்சு. காலையில கடையைத் திறக்கறதுக்கு முன்ன கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ணி கோலம் போட்டுடுவேன். அதுக்கப்புறம் ஊதுபத்தி ஏத்தி வெச்சு பூஜை போட்டுடுவேன். முந்தின நாள் ராத்திரி கடையில மொத்தமா ஒரே இடத்துல வெச்சு பூட்டின பலசரக்கு ஒவ்வொண்ணையும் எடுத்து வெளியில பார்வைக்குப் படுற மாதிரி தொங்கவிடுவேன்.

வியாபாரத்தைவிட, கடையில பூச்சி, எறும்பு, ஈ, கொசு, எலி இதெல்லாம் வராம சுத்தமா பார்த்துகுறதுலதான் உழைப்பே இருக்கு. திடீர்னு கை தவறி சர்க்கரையோ... எண்ணெயோ கொட்டிருச்சுனா, மொதல் வேலையா அதை சுத்தம் பண்ணிடணும். இல்லாட்டி, அந்த எடத்துல இருக்குற மளிகைப் பொருட்கள் மொத்தமும் நாசமாயிடும். இப்படி காலையில ஆறு மணிக்கு ஆரம்பிக்கிற வேலை, ராத்திரி பத்து பதினோரு மணி வரைக்கும் இருக்கும். என் வீட்டுக்காரருக்கு இணையா நானும் இங்க சளைக்காம வேலை பார்த்ததாலதான்... இத்தனை வருஷமா கடை வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு!'' என்றார் புன்னகையுடன்.


 ''நாங்க கடை வெச்சு 13 வருஷம் ஆகுது...'' என்று ஆரம்பித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ரேவதி, ''ரெண்டு குழந்தைங்க பொறந்த பிறகு வீட்ல செலவுகள் அதிகமாயிடுச்சு. குழந்தைகளுக்குப் பால் வாங்க, மருந்து வாங்க, துணிமணி வாங்கனு தேவைகள் நிறைய வந்துருச்சு. அந்தச் சமயத்துல மளிகைக் கடை வெச்ச வீட்டுக்காரர், அதை தனியாளா சமாளிக்க முடியாம கஷ்டப்பட்டார். அவருக்குத் துணையா நானும் கடையில் நிக்க ஆரம்பிச்சேன்.


கொஞ்சம் கொஞ்சமா கடை காலூன்றுச்சு. ஆரம்பத்துல பசங்கள கவனிக்க முடியலயேனு வருத்தப்பட்டேன். இப்ப ரெண்டு பிள்ளை களையும் நல்லா படிக்க வைக்கிறோம்னு நினைக்கும்போது, அந்த இழப்போட வருத்தம் போயிடுச்சு. ஆனா, எனக்கு ஒரே குறை... வாரத்துல ஏழு நாளும் கடையைத் திறக்கணும்ங்கிறதால, வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தா, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஏதும் செஞ்சு போட முடியாது. ஆனா, உறவுக்காரங்களும் எங்க சூழல புரிஞ்சுக்கறதால, அது பிரச்னை ஆகல'' என்றார்.


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.
 ''கஸ்டமர் திருப்திதான் முக்கியம்னு நினைச்சு தொழில் பண்ணினா, நிச்சயமா ஜெயிக்கலாம்!'' என்று தொழில் சூத்திரம் சொல்லி ஆரம்பிக்கும் மதுரையைச் சேர்ந்த நாகவள்ளி, ''கணவரோட மளிகைக் கடையில நாமளும் சேர்ந்து வேலை பார்த்தா, அவருக்கு பாரம் குறையுமேனு கடைக்குப் போக ஆரம்பிச்சேன். கடைக்கு வர்ற வாடிக்கையாளர்கள் வேற கடைக்கு நகராதபடி சுறுசுறுப்பா வேலை பார்க்கணும்ங்கிறதுதான் எனக்கு நானே சொல்லிக்கிட்ட முதல் பாடம். 'அக்கா அரை டசன் முட்டை குடுங்க’, 'ரெண்டு ஷாம்பூ பாக்கெட் கொடுங்க’, 'தக்காளி ஒரு கிலோ போடுங்க’னு ஒரே நேரத்துல பத்து பேர் வந்து நிப்பாங்க, ஒருத்தர் கூட கோபப்பட்டு திரும்பிப் போகாத அளவுக்கு சமாளிச்சு எல்லாத்தையும் கொடுத்தனுப்பணும். அங்கதான் நம்ம சாமர்த்தியமே இருக்கு.

இந்த 13 வருஷமா, கணவர் எங்கிட்ட தொடர்ந்து பாராட்டி சொல்ற விஷயமும் இதுதான்!'' என்றார் சின்ன வெட்கத்துடன்! ஐம்பது வயதாகும் சென்னையைச் சேர்ந்த சாந்திக்கு, மளிகைக் கடை அனுபவம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள். ''எனக்கு ரெண்டு பிள்ளைகள். அதுங்கள படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்பட்டோம். மளிகைக் கடை வெச்சிருந்த அவரு பலசரக்கு எடுக்கப் போறப்போ, கடையை சாத்திட்டுப் போயிடுவார். அதனால வியாபாரம் பாதிக்கும். அப்போதான் நானும் கடைக்கு வந்தேன். பிள்ளைகளோட நேரம் செலவு பண்ண முடியாது. சாமான்கள் அடுக்குறது, கணக்குப் பார்க்குறதுனு எப்பவும் கடையில வேலை இருந்துட்டே இருக்கும்.


 ஆனா, மளிகைக் கடைதான் எங்களுக்கு சோறு போடும் தெய்வம் என்பதால, ஒருநாள்கூட சோர்வாக மாட்டேன். மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி நெடிகூட எனக்கு வாசனையா பழகிப்போச்சு. எங்க பிள்ளைங்கள நல்லபடியா படிக்க வெச்சதுக்கும், இப்போ நாங்க மாசம் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறதுக்கும் இந்தக் கடைதான் காரணம்!'' என்று சந்தோஷமாகச் சொன்னார் சாந்தி. தஞ்சாவூர், சத்யாநகர் - பி.எஸ்சி பட்டதாரி தங்க மீனாட்சி, தேனி, கோட்டைப்பட்டி - வசந்தா என்று... வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு, மளிகைக் கடையிலும் இருந்துகொண்டு, கணவருக்கும் குடும்ப வருமானத்துக்கும் பக்கபலமாக இருக்கும் 'அக்காச்சி’களின் பட்டியல் ரொம்பவே பெரிசு!

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். 

WordLinx - Get Paid To Clickஎன்னோட கேர்ள்பிரண்ட் கர்ப்பமாயிட்டே


மகன் அப்பாவிடம் கேட்டான்.....

 "அப்பா ... நம்ம வீட்டில காக்க கத்துனா சொந்தக்காரங்க‌வருவாங்காளா?

 "ஆமாம் ... மகனே"

 "அப்படின்னா எப்போ திரும்பி போவாங்க?"


 "உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க..."


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். 
"அப்பா"

 "என்னடா மகனே?"

 "என்னோட கேர்ள்பிரண்ட் கர்ப்பமாயிட்டே"

 "டேய் அறிவுகெட்டவனே என்னடா பண்ணித் தொலைச்சே ... இனி ஊருக்குள்ள என்னால தலை நிமிர்ந்து நடக்க முடியாதேடா"

 "சும்மா சொன்னேபா ... நான் மேத்ஸ் ல பெயில்... அவ்வளவுதான்"


 "நல்லவேளைடா என் வயித்துல பாலை வார்த்த ..."சுஜாதாவின் பத்து கட்டளைகள்… (கண்டிப்பாகப் படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும்.. ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும். செய்துதான் பாருங்களேன்..


 3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மையைச் சொல்லி விடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம்.. அதைக் க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.

 


 4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.


 5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.


 6. இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.


 7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும்,உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.


 8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். ஏதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள்.. எதையாவது வீசி எறியுங்கள்.. உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.


 9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். 
 10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்).

எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.


 இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...கடவுளின் நிலைப்பாடு


ஒரு ஆசாமி தன்னுடைய தலை முடியையும், தாடியையும் சீர் படுத்த (trimming) நாவிதரின் கடைக்குச் சென்றான். நாவிதர் வேலையை ஆரம்பித்தார். நாவிதருக்கும் ஆசாமிக்கும் நீண்ட நாள் பழக்கம். நாவிதர் அவனுடன் பேசிக் கொண்டே முடிய வெட்ட ஆரம்பித்தார். அரசியலில் இருந்து சினிமாவரை பல விஷயங்களை இருவரும் அலசினார்கள்.


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். 
 இறுதியில் பேச்சு கடவுளைப் பற்றித் திரும்பியதும், நாவிதர் அதிரடியாகச் சொன்னார், " எனக்கு சுத்தமாக கடவுள் நம்பிக்கை இல்லை." ஆசாமி குறுகுறுப்புடன் கேட்டான்," ஏன்?" "அப்படி ஒருவர் இருந்தால் அல்லவா நம்பிக்கை கொள்ள முடியும்?" "எப்படிச் சொல்கிறாய்?" "வேண்டுமென்றால் நான்கு தெருக்களைச் சுற்றிப் பார்த்து விட்டு வாருங்கள். பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள். அவர் இருந்தால் ஏன் இத்தனை நோயாளிகள் ஏன் அனாதைக் குழந்தைகள். ஏன் இத்தனை சோற்றுக்கில்லாதவர்கள்?" கடவுள் இருந்தால் வாழ்க்கையில் இத்தனை அவலங்கள் இருக்காது. இத்தனை சோதனைகள், வலிகள், துன்பங்கள் இருக்காது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவரைக் கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அதனால்தான் சொல்கிறேன் - கடவுள் இல்லை!" வந்திருந்த கஸ்டமர் (அதுதான் அந்த ஆசாமி) ஒரு முறை சிந்தித்தார்.


 வெட்டியாக ஏன் வாதம் செய்ய வேண்டும்? என்று எண்ணியவர் ஒன்றும் சொல்லவில்லை. வந்த வேலை முடிந்தவுடன் பணத்தைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார் வெளியே வந்தவர், சற்றுத் தள்ளி ஒரு மனிதன் நீண்ட, அழுக்கான, வாரிவிடப்படாத தலை முடியுடனும், நெஞ்சுவரை நீண்டிருக்கும் சீராக இல்லாத தாடியுடனும் நிற்பதைப் பார்த்தார். சட்டென்று பார்பரின் கடைக்குள் மீண்டும் நுழைந்தவர், புன்னகையுடன் சொன்னார். "இப்போதுதான் உணர்ந்தேன். என்ன என்று தெரியுமா? உலகில் நாவிதர்களே இல்லை!" "அதை நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்," என்று வியப்பு மேலிடக் கேட்ட நாவிதர், "நான் ஒரு பார்பர்.உங்கள் கண் எதிரே நிற்கிறேன். அதோடு சற்று முன்புதான் உங்களுக்கு முடி வெட்டி விட்டேன் தாடியை டிரிம் செய்துவிட்டேன்"

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். 

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை


காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.

 


முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும். எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.

 25 Jun 2014

ஒட்டு ரக நாவல்பழ சாகுபடி


ஆற்றங்கரைகளிலும், சாலை ஓரங்களிலும் காய்த்துக் குலுங்கிய நாவல் மரங்களில் ஏறி விளையாடியதும், நாவல் பழங்களைப் பறித்தும், பொறுக்கியும் ருசித்தது... தற்போதைய நடுத்தர வயதினரின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.


 

கால ஓட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் மரங்களைக் கொலை செய்வதிலும்; மணல் மாஃபியாக்கள் ஆறுகளைக் கொலை செய்வதிலும் நாவல் மரங்கள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்டன. தவிர, நாவலை தோட்டத்தில் வைத்தால், பேய், பிசாசு வரும் என்கிற மூடநம்பிக்கையும் பரவலாக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகளும் இதை சாகுபடி செய்யாமல் தவிர்க்கிறார்கள். இந்நிலையில், சில விவசாயிகள் மட்டும் ஒட்டு ரக நாவலை சாகுபடி செய்து, நாவல் பழப் பிரியர்களின் ஆசையைத் தீர்த்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள தாதன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ். காய்த்துக் குலுங்கும் மாமரங்களும், தலைவணங்காமல் நின்ற சம்பங்கிச் செடிகளும், கருமை நிற கண்கள் போல கொத்துக்கொத்தாகப் பழங்கள் தொங்கும் நாவல் மரங்களும் சூழ்ந்திருந்த தோட்டத்தில், சின்னராஜை சந்தித்தோம். நாவல் பழங்களை நம்மிடம் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தவர், ''எம்.எஸ்சி, பி.எட் முடிச்சும் வேலை கிடைக்கல. படிப்பு முடிச்சு ரெண்டு வருஷத்துல கல்யாணம் நடந்திடுச்சு. குடும்பச் சொத்து பிரிச்சதுல, எனக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைச்சுது. 'அதுல விவசாயம் பார்த்து பொழப்பை ஓட்டமுடியாது’னு எலக்ட்ரிக் டவர் போடுற வேலைக்காக உத்தரப்பிரதேச மாநிலத்துக்குப் போனேன். அங்க தொழிலைக் கத்துகிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்து, தனியா டவர் அமைக்கிற வேலையை கான்ட்ராக்ட் எடுத்து செஞ்சிட்டிருக்கேன். அதுல வந்த வருமானத்துல 15 ஏக்கர் நிலம் வாங்கி, விவசாயம் பார்த்துட்டிருக்கேன். நிலம் வாங்குன புதுசுல தண்ணி பிரச்னை இல்லை. அதனால நெல், வாழைனு சாகுபடி செஞ்சேன். இடையில தண்ணிக்குத் தட்டுப்பாடு ஆனதும், பதினைஞ்சு போர்வெல் போட்டேன். ஆனா, ஒரு போர்லதான் தண்ணி கிடைச்சது. அதுல கிடைக்கிற தண்ணியை, ஒரு சிமெண்ட் தொட்டியில (100 அடி நீளம், 40 அடி அகலம், 10 அடி ஆழத் தொட்டி) நிரப்பி பாசனம் செய்றேன். கொஞ்சநாள் சப்போட்டா சாகுபடி செஞ்சேன். அது, வறட்சியைத் தாங்காததால வெட்டிட்டு மா நட்டுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த சின்னராஜ் தொடர்ந்தார்.


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.  ''எதேச்சையா ஒரு முறை 'பசுமை விகடன்’ புத்தகத்தை வாங்கிப் படிச்சேன். அதுல சொல்லி இருந்த விஷயங்கள் பிடிச்சுப் போகவும் தொடர்ச்சியா 6 வருஷமா வாங்கிப் படிச்சிட்டிருக்கேன். அதிலிருந்து இயற்கை முறையிலதான் விவசாயம் செய்றேன். பசுமை விகடன்ல வந்த பப்பாளி சாகுபடி பத்தி படிச்சிட்டு, ஆயிரத்து 600 செடியை நட்டதுல, ரெண்டு வருஷத்துல 8 லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சது. அடுத்து, 4 ஆயிரம் செடி நடவு செஞ்சேன். ஆனா, அந்த வருஷம் கொஞ்சம் வறட்சியாகிட்டதால, 7 லட்சம் ரூபாய்தான் வருமானம். மாமரங்களுக்கு ஊடுபயிரா 60 சென்ட் நிலத்துல நாட்டு சம்பங்கி சாகுபடி செய்றேன். அது மூலமா, ஒரு வருஷத்துல 1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் பார்த்திருக்கேன். இன்னொரு 60 சென்ட்ல மாவுக்கு ஊடுபயிரா ஹை-பிரீட் சம்பங்கி போட்டிருக்கேன். அது இப்பதான் மகசூலுக்கு வர ஆரம்பிச்சிருக்கு.

இதில்லாம, சில நண்பர்களோட சேர்ந்து மாம்பழக்கூழ் கம்பெனியை நடத்துறோம். எங்க, கம்பெனிக்கே இயற்கை மாம்பழம் தேவையா இருக்குறதால முழு இயற்கை விவசாயம்தான் பண்றேன். மொத்தம் இருக்குற 15 ஏக்கர்ல ஒரு ஏக்கர்ல தென்னை, 12 ஏக்கர்ல மா இருக்கு. 2 ஏக்கர்ல 150 நாவல் மரங்கள் இருக்கு. ஒரு சோதனை முயற்சியாதான் நாவல் கன்னுகளை நட்டேன். இது, எங்க பகுதிக்கு நல்லா வருது, ஆனா, தண்ணி இல்லேன்னா, காய்ப்பு இருக்கறதில்லை. இந்த வருஷம் கடுமையான வறட்சியால 150 மரங்கள்ல 20 மரங்கள்லதான் காய்ப்பு இருக்கு. போன வருஷம் 30 மரங்கள் காய்ச்சுது. நாவல் பழத்துக்கு நல்ல விலை கிடைச்சுட்டிருக்கு. ஒரு மரத்துக்கு சராசரியா 50 கிலோ பழம் கிடைக்கும். ஒரு கிலோ பழத்துக்கு பண்ணை விலையா 140 ரூபாய் கிடைக்குது. 20 மரத்துல இருந்தே 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். தண்ணி மட்டும் இருந்து, எல்லா மரமும் காய்ச்சிருந்தா பல லட்சங்கள் வருமானமா கிடைச்சுருக்கும்'' என்று ஆதங்கத்துடன் சொன்னார் சின்னராஜ்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள மெட்டூரைச் சேர்ந்த ஜெயக்குமார், ஒரு ஏக்கர் ஒட்டுரக நாவல் சாகுபடியிலேயே லட்சங்களில் வருமானம் எடுத்து வருகிறார். 10.02.14 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் 'ஜுஸ்... ஜாம்... மிட்டாய்! நெல்லியில் மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலமாக 'பசுமை விகடன்’ வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான் இந்த ஜெயக்குமார். பசுமைக் குடைக்கு இடையில் கருநீல முத்துக்களாகச் சிரிக்கும் நாவல்பழத் தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே நம்மிடம் பேசினார், ஜெயக்குமார். உயரம் பிரச்னையில்லை! ''பொதுவா நாவல் மரங்க ரொம்ப உயரத்துக்குப் போகும். அதுல அறுவடை செய்றதுல ரொம்ப சிரமம் இருக்கறதாலதான் விவசாயிக சாகுபடி செய்யத் தயங்குறாங்க. ஆனா, மரங்களை முறையா கவாத்து செஞ்சு குடை மாதிரி வெச்சுகிட்டா, அதிக உயரம் போகாது. அறுவடை செய்றதும் சுலபம்.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.  நான் 2003-ம் வருஷம் ஆந்திராவுல இருந்து, ஒரு கன்னு 100 ரூபாய்னு வாங்கிட்டு வந்து நட்டேன். வழக்கமா 35 அடி இடைவெளி விடுவாங்க. நான் அடர்நடவு முறையில செடிக்கு செடி 22 அடி, வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில 82 கன்னுகளை நடவு செஞ்சேன். 8-ம் மாசம் குடை வடிவத்துல செடியைக் கவாத்து செஞ்சேன். அதுக்கப்பறம் ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் மாசம் கவாத்து செஞ்சிட்டிருக்கேன். இந்த ரக நாவல் நாலாம் வருஷத்துல காய்க்க ஆரம்பிக்கும். ஆரம்பத்துல மரத்துக்கு 5 கிலோதான் கிடைக்கும். வருஷா வருஷம் மகசூல் கூடும். இந்த மரங்களுக்கு 11 வயசாகுது. இந்த வருஷம்தான் நல்லா காய் பிடிச்சிருக்கு. இந்த வயசுக்குப் பிறகுதான் மகசூல் அதிகரிக்கும். இது கூடிட்டே போகும். விற்பனையில் வில்லங்கமில்லை!

இப்போதைக்கு ஒரு மரத்துக்கு 60 கிலோ வீதம் தினமும் பழங்கள் கிடைக்குது. இதை நாகர்கோவில், கோயம்புத்தூர், திண்டுக்கல் மாதிரியான ஊர்கள்ல இருக்குற சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பிட்டிருக்கேன். பசுமை அங்காடிகள்லயும் கேட்டு வாங்கிக் கிறாங்க. அதனால, விற்பனைக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. பொதுவா, நாவல் ஒரு வருஷம் நல்லா காய்க்கும். ஒரு வருஷம் சரியா காய்க்காது. அதுக்காக மனம் தளர்ந்துடக் கூடாது. பொறுமையா இருந்தா, நல்ல லாபம் எடுக்கலாம். என்னோட ஒரு ஏக்கர்ல 82 மரங்கள் இருக்கு. 80 மரங்கள்ல மரத்துக்கு 50 கிலோ பழம் கிடைக்கும்னு வெச்சுக்கிட்டாலே... 4 ஆயிரம் கிலோ வரும். கிலோ 140 ரூபாய்னு விற்பனை செய்யுறப்போ, 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம். பராமரிப்பு, போக்குவரத்துச் செலவுகள் போக, வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய் லாபம். கிட்டத்தட்ட 70 நாளைக்குள்ள அந்த வருஷத்துக்கான மொத்தப் பணத்தையும் எடுத்துடலாம். நான் அப்படியே பழமா விக்காம, நாவல்ல இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிச்சு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அதுக்கான வேலைகளையும் ஆரம்பிச்சுட்டேன்'' என்று சந்தோஷமாகச் சொன்னார்.

 தொடர்புக்கு, சின்னராஜ், செல்போன்: 94432-83047 ஜெயக்குமார், செல்போன்: 98659-25193.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.  ஜெயக்குமார் பகிர்ந்து கொண்ட பராமரிப்பு முறைகள் பாடமாக... நாவலை நடவு செய்யும் போது... 5 கிலோ தொழுவுரம், தலா 5 மில்லி (திரவ நிலையில்) அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து குழியில் இட்டு, செடிகளை நடவு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாரம் ஒரு தண்ணீர் கொடுத்து, போகப்போக... 15 நாட்களுக்கு ஒரு தண்ணீர் கொடுத்தால் போதுமானது. கவாத்து செய்யும்போது கிடைக்கும் இலைகளை, மரத்தைச் சுற்றி மூடாக்காகப் போடவேண்டும். இதனால், ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். நாவல் மரத்தில் இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் இருக்கும். இதை இயற்கைப் பூச்சிவிரட்டி மூலம் விரட்டலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி பஞ்சகவ்யா, தலா 2 மில்லி பவேரியா பேசியானா, மெட்டோசைட் (பயோ) ஆகியவற்றைக் கலந்து, மரம் நன்றாக நனையுமாறு (இலைகள் முழுவதும் நனைந்து தண்ணீர் சொட்டும் அளவுக்கு) தெளிக்க வேண்டும். இப்படி தெளிக்க... ஒரு ஏக்கருக்கு 80 டேங்க் (10 லிட்டர்) தேவைப்படும். பழம் வரும் சமயத்தில் பழப்புழு தாக்க வாய்ப்பு உண்டு. இதனால், பழங்கள் சூம்பிவிடும்.

வெள்ளைப்பூண்டு, மஞ்சள்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து இடித்து, மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, இக்கரைசலில் 10 மில்லியை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், பழப்புழுக்கள் கட்டுப்படும். ஒவ்வொரு ஆண்டும் கவாத்து செய்ததும்... மரத்துக்கு 150 கிலோ தொழுவுரம் அல்லது 15 கிலோ மண்புழு உரம் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மே மாதம் 3-ம் வாரத்தில் இருந்து, ஜூலை மாதம் வரை பழம் பறிக்கலாம். தினமும் பறிக்காவிட்டால், பழங்கள் உதிர்ந்து விடும். நாவல் பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி பேசிய திருவண்ணாமலையைச் சேர்ந்த சித்த மருத்துவர் கிருபாகரன், ''நாவல் பழம் கணிசமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கனிமங்கள், சர்க்கரை மற்றும் புரதங்கள் தவிர, இதில் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது. பழமாக சாப்பிடுவது மட்டுமல்லாமல், சுவையான பானங்கள், மணப்பாகு (சிரப்) ஆகியவற்றையும் தயாரிக்கலாம். சிறிய அளவில் பழச்சாறு உண்டால், வயிற்றுப்போக்கு குணமாகும். நாவல் பழங்களுக்கு பசியைத் தூண்டும் குணமும், ரத்தத்தை விருத்தி செய்யும் குணமும், உடலை உரமாக்கும் குணமும் இருக்கிறது.


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.  பொதுவாக, நாவல் பழங்கள் சாப்பிட்டால், நீர் வேட்கை நீங்கும். நாவல் பழச்சாற்றை ஒரு மாதம் வரை புளிக்க வைத்துப் பயன்படுத்தினால், சர்க்கரை நோயாளிகளின் நீர் வேட்கை தணியும். இரைப்பைக் குடல்வலி நீக்குவதோடு, சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன்படுகிறது. குளிர்ச்சி மற்றும் செரிமானப் பண்புகளையும் கொண்டுள்ளது. பொடி செய்யப்பட்ட விதைகள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். நாவல் விதைகள், நிரந்தரமாக சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதிகமான நாவல் பழங்கள் உண்டால் பித்தம் கூடும். சில நெல்லிக்காய்களை மென்று தண்ணீர் குடித்தால் பித்தம் தணிந்துவிடும்'' என்று சொன்னார்.

 கிருபாகரன், செல்போன்: 94434-92258


டேனியல் பிரையன் VS கானர் மிக்காலே 


ரெஸ்லிங் போட்டிகளைப் பார்த்திருக் கிறீர்களா? மாமிச மலை உடல்களோடு, வன்மம் நிறைந்த கண்களோடு முரட்டுத்தனமாக இருவர் மோதிக்கொள்ளும் போட்டி அது. கூடியிருக்கும் ரசிகர்கள், 'அவனைத் தூக்கிப் போட்டு மிதி’, 'ஏறி மிதிச்சு கழுத்தை உடை’ என்றெல்லாம் தங்கள் ஸ்டார்களுக்கு ஆதரவாக அலறுவார்கள். அத்தனை ரணகள போட்டி. அப்படிப்பட்ட போட்டியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இது...

கடந்த ஏப்ரலில், அமெரிக்காவில் நடந்த 30வது ரெஸ்லிங்மேனியா போட்டியில் தன் போட்டியாளரைப் வென்றுவிட்டு பட்டத்தை வென்ற கையோடு ரெஸ்லிங் ரிங்கில் இருந்து இறங்குகிறார் டேனியல் பிரையன். அதுவரை அவ்வளவு ஆவேசமாக, ரௌத்ரமாக இருந்தவர், பார்வையாளர் வரிசையில் இருக்கும் ஒன்பது வயதுச் சிறுவனைப் பார்த்ததும் நெகிழ்ச்சியாகச் சிரிக்கிறார். அருகில் சென்று அவனை அணைத்துக்கொள்கிறார் டேனியனல் பிரையன். டேனியல், சிறுவன் இருவருக்குமே கண்கள் கலங்குகின்றன.
இன்னொரு சம்பவம்..! ரெஸ்லிங் அரங்கத்தில் இரண்டு ஸ்டார்கள் இருந்தாலே, கூட்டம் கும்மும். ஆனால், ரெஸ்லிங் போட்டியின் பிரபல நட்சத்திரங்கள் குவிந்திருக்கும் அந்த அரங்கத்தில் பார்வையாளர்களே இல்லை. டேனியல் நெகிழ்ச்சியான மனநிலையில் ரிங்குக்குள் நிற்கிறார். அவருக்கு அருகில் அதே சிறுவன். 116 கிலோ எடையுடன் 'டிரிபிள் ஹெச்’ எனும் வீரர் மேடையேறி வார்த்தைகளால் சிறுவனை வம்பிழுக்கிறார். 'அவனை அடிச்சு நொறுக்கு’ என்று அத்தனை நட்சத்திரங்களும் சிறுவனுக்கு ஆதரவாகக் கோஷம் போடுகிறார்கள்.

சிறுவன் தன் சக்திக்கேற்ப டிரிபிள் ஹெச்சைக் குத்துகிறான். டிரிபிள் ஹெச் எகிறிப்போய் விழுகிறார். அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள். சிறுவன் ஜெயித்ததாக நடுவர் தீர்ப்பு சொல்லும் வரை தரையிலேயே படுத்திருக்கும் 'ட்ரிபிள் ஹெச்’ அதன் பிறகு சந்தோஷமாக எழுந்துகொள்கிறார். ஆக்ரோஷமான குணமுடைய ரெஸ்லிங் வீரர்களை தன் அன்பினால் வளைத்து போட்டு விட்டான் சிறுவன் கானர் மிக்காலே.அமெரிக்காவின் அத்தனை ரெஸ்லிங் நட்சத்திரங்களும் பாசத்துடன் உச்சரிக்கும் அந்தச் சிறுவனின் பெயர்... கானர் மிக்காலே. யார் இந்தக் கானர்? 2005-ல் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்த கானர், ரெஸ்லிங் விளையாட்டின் தீவிர ரசிகன். 'ஒருநாள் நானும் ரெஸ்லிங் சாம்பியன் ஆவேன்’ என, தந்தை ஸ்டீவ்விடம் கூறியவன், ரெஸ்லிங் நட்சத்திரங்களைப் போல தனக்கும் ஒரு பட்டப்பெயர் வேண்டும் என்று முடிவு செய்து, ஏகப்பட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு 'தி கிரஷர்’ என்று பெயர் சூட்டிக்கொண்டான். அதற்கு, 'சின்னாபின்னம் ஆக்குபவன்’ என்று பொருள்.

 ரெஸ்லிங் சூப்பர் ஸ்டார் டேனியலின் தீவிர அபிமானி கானர். அதனாலேயே டேனியலை எதிர்த்துப் போட்டியிடும் டிரிபிள் ஹெச்சை அவனுக்குப் பிடிக்காது. டேனியலுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பது கானரின் பெருங்கனவு. இந்த நிலையில், 'கானருக்கு மூளைப் புற்றுநோய் தாக்கியுள்ளது. அதிகபட்சம் மூன்று வருடங்கள்தான் உயிரோடு இருப்பான்’ என்கிறார்கள் மருத்துவர்கள்!

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.  முடி கொட்டி, உடல் மெலிந்து சுருங்கத் தொடங்குகிறது கானருக்கு. டேனியலுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மகனின் கனவை நிறைவேற்ற, WWE அலுவலகத்தில் பழியாகக் கிடக்கிறார் கானரின் தந்தை ஸ்டீவ். ஸ்டீவின் மனம் தளராத முயற்சிக்கு பின் ஒருகட்டத்தில் கானரைச் சந்திக்க ஒப்புக் கொள்கிறார் டேனியல் பிரையன்.

கானரை சந்தித்த டேனியல் அவனது அன்பில் நெகிழும் டேனியல், 'எனது மிகப் பெரிய, ஆனால் மிகச் சிறிய ஃபேன் இவன்தான்’ என்று அறிவித்து WWE குடும்பத்தில் ஒருவனாக அவனை இணைத்துக்கொள்கிறார். அதில் இருந்து அமெரிக்காவில் நடக்கும் அனைத்து ரெஸ்லிங் போட்டிகளிலும் கானருக்கு முதல் வரிசையில் இடம். கிட்டத்தட்ட அத்தனை ரெஸ்லிங் ஸ்டார்களும் கானருக்கு நண்பர்கள் ஆகிறார்கள். இடையில் கானரின் உடல்நிலை மிக மோசம் ஆகிறது. அந்தச் சமயம், 'வரப்போகும் ரெஸ்லிங்மேனியாவில் நீங்கள் ஜெயித்து, ஹெவி வெயிட் சாம்பியன் ஆக வேண்டும். அதே ரெஸ்லிங் மேடையில் நான் டிரிபிள் ஹெச்சை அடித்து ஜெயிக்க வேண்டும்’ என்கிறான். தன் மாபெரும் ரசிகனின் கடைசிக் கனவை நிறைவேற்ற முடிவு செய்கிறார் டேனியல்.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.  ரெஸ்லிங்மேனியா இறுதிப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று, மேடையைவிட்டு கீழே வருகிறார் டேனியல். தன் வெற்றியால் பூரிப்பில் இருக்கும் கானரிடம், 'இந்தப் பட்டம் வாங்க நீதான் உதவி செய்தாய். நாம் தொடர்ந்து போராடுவோம்!’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழுது விடுகிறார். டிரிபிள் ஹெச்சுடன் போட்டியிட விரும்பிய கானரின் ஆசையையும் நிறைவேற்றுகிறார். முரட்டுக்குணம் நிரம்பிய ரெஸ்லிங் பிளேயர்களை அழ வைத்த கானர் மிக்கலேக், சில வாரங்களுக்கு முன் நிரந்தர உறக்கத்துக்குச் சென்றுவிட்டான்!
தன் ரசிகனுக்கான அஞ்சலியாக, கானருடன் தொடர்புடைய அனைவரின் பேட்டிகளையும் தொகுத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். 'கானர் தி கிரஷர்’ என்ற அந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் கண் கலங்காமல், மனம் நெகிழாமல் இருப்பது ரொம்பவே கஷ்டம்! வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=9RAhxhIHdpM


இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் உலகில் பல அறிவியல் கண்டுபிடிப்புகளையும், அதிசய வசதிகளையும் உலகுக்கு அளிக்கும் அமெரிக்கா, புது புது நோய்களையும் அளித்து வருகிறது. அதிலும் பெரும்பாலும் கானர் போன்ற சிறு வயது குழந்தைகளே நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்க்கு காரணம் அமெரிக்கர்களின் உணவு பழக்க வழக்கங்கள் தான்.

உலகுக்கே நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும், மருந்தையே உணவாகவும் உட்கொண்ட வழக்கத்தை உடைய நாம் அமெரிக்க நாகரிகத்தின் பின்னால் ஒடிக்கொண்டிருக்கிறோம். இப்படியே நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் அமெரிக்க நாகரீகத்தை கற்றுக் கொடுத்தால் நம் நாட்டிலும் வருங்காலத்தில் கானர் போன்ற சிறுவர்கள் வருவதை தடுக்க முடியாது.


9 Jun 2014

அவசரத்தேவைக்கானதொடர்பு எண்கள்


நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசரத்தேவைக்கானதொடர்பு எண்கள்! ! ! !

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.

 அவசர உதவி அனைத்திற்கும்————–911
வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
போலீஸ் SMS :- ———————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
போலீஸ் : —————————————–100
தீயணைப்புத்துறை:—————————-101
போக்குவரத்து விதிமீறல——————–103
விபத்து :——————————————–100, 103
ஆம்புலன்ஸ் : ———————————–102, 108

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.  பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
குழந்தைகளுக்கானஅவசர உதவி :——–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
கண் வங்கி அவசர உதவி : ——————-1919
விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.


உங்கள் செல்போனில் மெயில் அலெர்ட் செட் செய்ய தெரியுமா?


நீங்கள் எந்தவொரு மெயிலை பயன்படுத்துபவராக இருந்தாலும் உங்களுக்கு வரும் மெயில்கள் பற்றிய தகவலை உங்கள் செல்போனுக்கு வரும் ஒரு சிறிய மெஸேஜ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் செல்போனுக்கு வரும் மின்னஞ்சல் அறிவிப்பில் உங்களுக்கு யார் மெயில் அனுப்பியது என்றும், மின்னஞ்சலின் சப்ஜக்ட்டையும் உங்கள் செல்போனில் பார்த்து விடலாம். அதன் பின்பு உடனடியாக உங்கள் மெயில் ஐடியை ஒபன் செய்து பார்த்து கொள்ளலாம். இந்த வசதியை Way2sms இணையத்தளம் தருகிறது.


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.

 WordLinx - Get Paid To Click

முதலில் <http://wwwg.way2sms.com/     இணையத்தளத்திற்க்கு சென்று அதில் உங்களுக்கு என்று ஒரு கணக்கை துவக்குங்கள். அதில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் ஆகியவற்றை தந்தால் போதும். அதன் பின் உங்களுக்கு 4 இலக்க எண் உங்கள் செல்போனுக்கு அனுப்பப்படும். உடனே அந்த இணையத்தளத்தில் அந்த 4 எழுத்து சங்கேத எண்ணை கொடுத்து நுழைந்தால் புதிய பாஸ்வேர்ட் கேட்கும். அதனை கொடுத்து விட்டு மெயில் என்ற பகுதியை கிளிக் செய்தால் ஒரு புதிய மின்னஞ்சல் உருவாக்க யூசர் நேம் கேட்கும். அதை நீங்கள் கொடுத்தவுடன் உங்களுக்கான way2sms அக்கவுண்ட் உருவாக்கப்படும். 

அதே போல நீங்கள் ஜி-மெயில் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் ஜி-மெயில் செட்டிங்கில் Forwarding and POP/IMAP என்ற பகுதியில் Forward a copy of incoming mail என்பதில் தெரிவு செய்து உங்களின் way2sms மின்னஞ்சல் முகவரியைத் தந்து கீழே keep gmails copy in the inbox என்பதை தேர்வு செய்து அதனை save செய்து விட்டால் போதும். அடுத்து Yahoo.co.in அக்கவுண்ட் வைத்து இருப்பவர்கள் உங்களுக்கான Yahoo மின்னஞ்சல் கணக்கினை ஒபன் செய்து கொண்டு அதில் options-> Mail options செல்லவும். அதில் இடது பக்கம் உள்ள Pop & Forwarding --> Set up or Edit Pop & Forwarding தேர்வு செய்து கொள்ளவும்.

அதன் பின் Forward என்ற பகுதியில் உங்கள் way2sms முகவரியைத் தந்து save செய்தால் போதும். பின்னர் way2sms இணையத்தளத்தில் நுழைந்து Settings என்ற பகுதியில் Mail Alert என்பதனை தேர்வு செய்து அதில் Mobile preference பகுதியில் Alert me whenever கொடுத்தவுடன் பின்னர் Time settings - ல் All 7 days & Round the clock கொடுத்து சேவ் செய்து விடுங்கள். இதன் பின் உங்கள் g-mail மற்றும் Yahoo கணக்கில் வரும் மின்னஞ்சல்கள் உங்கள் செல்போனுக்கு மெஸேஜாக வந்து சேரும்.

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.  அதன் பின் நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னவெனில் இந்த வசதி g-mail மற்றும் Yahoo கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த வசதி ஒரு வாரத்திற்க்கு மட்டுமே பொருந்தும்.மறுபடியும் நீங்கள் way2sms இணையத்தளத்தில் நுழைந்து இந்த வசதியை புதுபித்து கொள்ள வேண்டும். இந்த இணையத்தளம் மூலம் நீங்கள் இந்தியா முழுவதும் மெசேஜ்கள் இலவசமாக அனுப்பலாம். இந்த இணையத்தளம் மூலம் இலவசமாக chat செய்யவும் முடியும்.


பாஸ்வேர்ட் கொடுத்து முடக்கி வைத்துள்ள பைல்களை மீட்க இலவச மென்பொருள்.


சில அக்ஸஸ் பைல்களை ரகசியம் காக்க பாஸ்வேர்ட் கொடுத்து யாரும் பார்க்க முடியாதது போல செய்திருப்பார்கள். அதை நாம் திறந்து பார்க்க முற்பட்டால் மைக்ரோசாப்ட் அனுமதிக்காது. அந்த பைல்கள் ஒபன் ஆகாது. ஆனால் அதை திறக்க ஒரு சாப்ட்வேர் இருக்கிறது. அதனை பயன்படுத்தினால் எந்த அக்ஸஸ் பைல்களையும் சுலபமாக திறந்து விடலாம். கீழே உள்ள முகவரியில் இருந்து அந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். 

 

 டவுன்லோட் செய்யப்பட்ட பைலை திறந்து அதன் Application Exe File ஐ நேரடியாக இயக்கலாம். இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. அதன் பின்பு கீழே உள்ளது போல Access PassView என்று ஒரு பைல் திறக்கும்.
பின் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து வைத்திருக்கும் பைலை சுலபமாக இழுத்துக் கொண்டு வந்து விட்டாலே போதும். அந்த பைலுக்கான பாஸ்வேர்ட் கிடைத்துவிடும். இதனால் சுலபமாக பாஸ்வேர்ட் கொடுத்து முடக்கி வைத்துள்ள பைல்களை சுலபமாக பார்த்து விடலாம். அடிக்கடி பாஸ்வேர்ட்டை மறந்து விடுபவர்களுக்கு இது ஒரு சுலபமான வழி. இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்யுங்கள். http://www.nirsoft.net/utils/accesspv.html 

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.