சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jun 2014

அசத்தும் ‘அக்காச்சிகள்’!


குடும்பமே உழைக்கும் வர்க்கம் நமது வர்க்கம். எப்போதும் வாடிக்கையாளர்களிடம் கிராக்கி இருக்கும் ஒரு தொழில்... மளிகைக் கடை தொழில். அப்படியான அண்ணாச்சி கடைகள், தமிழ்நாடு முழுக்க தலைமுறை தலைமுறையாக பரவியிருக்கின்றன. சில அல்ல... இப்போது பல கடைகளில் அண்ணாச்சிகளுக்கு இணையாக பம்பரம் போல் சுற்றி வேலை செய்கிறார்கள் 'அக்காச்சிகள்’.


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். 



 இப்படி, வாரத்தில் ஏழு நாட்களும் கடையில் உழைக்கும் கணவருக்கு கைகொடுக்கவும், குடும்பத்தின் வருமானத்தை மேலும் பெருக்கவும் மளிகைக் கடையில் கலக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் சிலரைச் சந்தித்தோம்! தேனியைச் சேர்ந்த வளர்மதி, சர்வீஸில் சீனியர். ''கல்யாணமாகி 25 வருஷம் ஆகுது. கைபிடிச்ச நாள் முதலா அவருக்கு துணையா கடையிலயும் நிக்கிறேன். ஆரம்பத்தில் மூணு பிள்ளைகளையும் பார்த்துகிட்டு, மளிகைக் கடையையும் பார்த்துக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். அப்புறம் பழகிடுச்சு. காலையில கடையைத் திறக்கறதுக்கு முன்ன கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ணி கோலம் போட்டுடுவேன். அதுக்கப்புறம் ஊதுபத்தி ஏத்தி வெச்சு பூஜை போட்டுடுவேன். முந்தின நாள் ராத்திரி கடையில மொத்தமா ஒரே இடத்துல வெச்சு பூட்டின பலசரக்கு ஒவ்வொண்ணையும் எடுத்து வெளியில பார்வைக்குப் படுற மாதிரி தொங்கவிடுவேன்.

வியாபாரத்தைவிட, கடையில பூச்சி, எறும்பு, ஈ, கொசு, எலி இதெல்லாம் வராம சுத்தமா பார்த்துகுறதுலதான் உழைப்பே இருக்கு. திடீர்னு கை தவறி சர்க்கரையோ... எண்ணெயோ கொட்டிருச்சுனா, மொதல் வேலையா அதை சுத்தம் பண்ணிடணும். இல்லாட்டி, அந்த எடத்துல இருக்குற மளிகைப் பொருட்கள் மொத்தமும் நாசமாயிடும். இப்படி காலையில ஆறு மணிக்கு ஆரம்பிக்கிற வேலை, ராத்திரி பத்து பதினோரு மணி வரைக்கும் இருக்கும். என் வீட்டுக்காரருக்கு இணையா நானும் இங்க சளைக்காம வேலை பார்த்ததாலதான்... இத்தனை வருஷமா கடை வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு!'' என்றார் புன்னகையுடன்.


 ''நாங்க கடை வெச்சு 13 வருஷம் ஆகுது...'' என்று ஆரம்பித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ரேவதி, ''ரெண்டு குழந்தைங்க பொறந்த பிறகு வீட்ல செலவுகள் அதிகமாயிடுச்சு. குழந்தைகளுக்குப் பால் வாங்க, மருந்து வாங்க, துணிமணி வாங்கனு தேவைகள் நிறைய வந்துருச்சு. அந்தச் சமயத்துல மளிகைக் கடை வெச்ச வீட்டுக்காரர், அதை தனியாளா சமாளிக்க முடியாம கஷ்டப்பட்டார். அவருக்குத் துணையா நானும் கடையில் நிக்க ஆரம்பிச்சேன்.


கொஞ்சம் கொஞ்சமா கடை காலூன்றுச்சு. ஆரம்பத்துல பசங்கள கவனிக்க முடியலயேனு வருத்தப்பட்டேன். இப்ப ரெண்டு பிள்ளை களையும் நல்லா படிக்க வைக்கிறோம்னு நினைக்கும்போது, அந்த இழப்போட வருத்தம் போயிடுச்சு. ஆனா, எனக்கு ஒரே குறை... வாரத்துல ஏழு நாளும் கடையைத் திறக்கணும்ங்கிறதால, வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தா, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஏதும் செஞ்சு போட முடியாது. ஆனா, உறவுக்காரங்களும் எங்க சூழல புரிஞ்சுக்கறதால, அது பிரச்னை ஆகல'' என்றார்.


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.




 ''கஸ்டமர் திருப்திதான் முக்கியம்னு நினைச்சு தொழில் பண்ணினா, நிச்சயமா ஜெயிக்கலாம்!'' என்று தொழில் சூத்திரம் சொல்லி ஆரம்பிக்கும் மதுரையைச் சேர்ந்த நாகவள்ளி, ''கணவரோட மளிகைக் கடையில நாமளும் சேர்ந்து வேலை பார்த்தா, அவருக்கு பாரம் குறையுமேனு கடைக்குப் போக ஆரம்பிச்சேன். கடைக்கு வர்ற வாடிக்கையாளர்கள் வேற கடைக்கு நகராதபடி சுறுசுறுப்பா வேலை பார்க்கணும்ங்கிறதுதான் எனக்கு நானே சொல்லிக்கிட்ட முதல் பாடம். 'அக்கா அரை டசன் முட்டை குடுங்க’, 'ரெண்டு ஷாம்பூ பாக்கெட் கொடுங்க’, 'தக்காளி ஒரு கிலோ போடுங்க’னு ஒரே நேரத்துல பத்து பேர் வந்து நிப்பாங்க, ஒருத்தர் கூட கோபப்பட்டு திரும்பிப் போகாத அளவுக்கு சமாளிச்சு எல்லாத்தையும் கொடுத்தனுப்பணும். அங்கதான் நம்ம சாமர்த்தியமே இருக்கு.

இந்த 13 வருஷமா, கணவர் எங்கிட்ட தொடர்ந்து பாராட்டி சொல்ற விஷயமும் இதுதான்!'' என்றார் சின்ன வெட்கத்துடன்! ஐம்பது வயதாகும் சென்னையைச் சேர்ந்த சாந்திக்கு, மளிகைக் கடை அனுபவம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள். ''எனக்கு ரெண்டு பிள்ளைகள். அதுங்கள படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்பட்டோம். மளிகைக் கடை வெச்சிருந்த அவரு பலசரக்கு எடுக்கப் போறப்போ, கடையை சாத்திட்டுப் போயிடுவார். அதனால வியாபாரம் பாதிக்கும். அப்போதான் நானும் கடைக்கு வந்தேன். பிள்ளைகளோட நேரம் செலவு பண்ண முடியாது. சாமான்கள் அடுக்குறது, கணக்குப் பார்க்குறதுனு எப்பவும் கடையில வேலை இருந்துட்டே இருக்கும்.


 ஆனா, மளிகைக் கடைதான் எங்களுக்கு சோறு போடும் தெய்வம் என்பதால, ஒருநாள்கூட சோர்வாக மாட்டேன். மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி நெடிகூட எனக்கு வாசனையா பழகிப்போச்சு. எங்க பிள்ளைங்கள நல்லபடியா படிக்க வெச்சதுக்கும், இப்போ நாங்க மாசம் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறதுக்கும் இந்தக் கடைதான் காரணம்!'' என்று சந்தோஷமாகச் சொன்னார் சாந்தி. தஞ்சாவூர், சத்யாநகர் - பி.எஸ்சி பட்டதாரி தங்க மீனாட்சி, தேனி, கோட்டைப்பட்டி - வசந்தா என்று... வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு, மளிகைக் கடையிலும் இருந்துகொண்டு, கணவருக்கும் குடும்ப வருமானத்துக்கும் பக்கபலமாக இருக்கும் 'அக்காச்சி’களின் பட்டியல் ரொம்பவே பெரிசு!

 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். 

WordLinx - Get Paid To Click



No comments:

Post a Comment