ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.
நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் செல்போனுக்கு வரும் மின்னஞ்சல் அறிவிப்பில் உங்களுக்கு யார் மெயில் அனுப்பியது என்றும், மின்னஞ்சலின் சப்ஜக்ட்டையும் உங்கள் செல்போனில் பார்த்து விடலாம். அதன் பின்பு உடனடியாக உங்கள் மெயில் ஐடியை ஒபன் செய்து பார்த்து கொள்ளலாம். இந்த வசதியை Way2sms இணையத்தளம் தருகிறது.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.
முதலில் <http://wwwg.way2sms.com/ இணையத்தளத்திற்க்கு சென்று அதில் உங்களுக்கு என்று ஒரு கணக்கை துவக்குங்கள். அதில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் ஆகியவற்றை தந்தால் போதும். அதன் பின் உங்களுக்கு 4 இலக்க எண் உங்கள் செல்போனுக்கு அனுப்பப்படும். உடனே அந்த இணையத்தளத்தில் அந்த 4 எழுத்து சங்கேத எண்ணை கொடுத்து நுழைந்தால் புதிய பாஸ்வேர்ட் கேட்கும். அதனை கொடுத்து விட்டு மெயில் என்ற பகுதியை கிளிக் செய்தால் ஒரு புதிய மின்னஞ்சல் உருவாக்க யூசர் நேம் கேட்கும். அதை நீங்கள் கொடுத்தவுடன் உங்களுக்கான way2sms அக்கவுண்ட் உருவாக்கப்படும்.
அதே போல நீங்கள் ஜி-மெயில் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் ஜி-மெயில் செட்டிங்கில் Forwarding and POP/IMAP என்ற பகுதியில் Forward a copy of incoming mail என்பதில் தெரிவு செய்து உங்களின் way2sms மின்னஞ்சல் முகவரியைத் தந்து கீழே keep gmails copy in the inbox என்பதை தேர்வு செய்து அதனை save செய்து விட்டால் போதும். அடுத்து Yahoo.co.in அக்கவுண்ட் வைத்து இருப்பவர்கள் உங்களுக்கான Yahoo மின்னஞ்சல் கணக்கினை ஒபன் செய்து கொண்டு அதில் options-> Mail options செல்லவும். அதில் இடது பக்கம் உள்ள Pop & Forwarding --> Set up or Edit Pop & Forwarding தேர்வு செய்து கொள்ளவும்.
அதன் பின் Forward என்ற பகுதியில் உங்கள் way2sms முகவரியைத் தந்து save செய்தால் போதும். பின்னர் way2sms இணையத்தளத்தில் நுழைந்து Settings என்ற பகுதியில் Mail Alert என்பதனை தேர்வு செய்து அதில் Mobile preference பகுதியில் Alert me whenever கொடுத்தவுடன் பின்னர் Time settings - ல் All 7 days & Round the clock கொடுத்து சேவ் செய்து விடுங்கள். இதன் பின் உங்கள் g-mail மற்றும் Yahoo கணக்கில் வரும் மின்னஞ்சல்கள் உங்கள் செல்போனுக்கு மெஸேஜாக வந்து சேரும்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள்.
அதன் பின் நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னவெனில் இந்த வசதி g-mail மற்றும் Yahoo கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த வசதி ஒரு வாரத்திற்க்கு மட்டுமே பொருந்தும்.மறுபடியும் நீங்கள் way2sms இணையத்தளத்தில் நுழைந்து இந்த வசதியை புதுபித்து கொள்ள வேண்டும். இந்த இணையத்தளம் மூலம் நீங்கள் இந்தியா முழுவதும் மெசேஜ்கள் இலவசமாக அனுப்பலாம். இந்த இணையத்தளம் மூலம் இலவசமாக chat செய்யவும் முடியும்.
No comments:
Post a Comment