சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Nov 2012

கபில் சிபலின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மர்ம நபர்களால் ஹேக்


                 மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது.
இணையத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவதைக் கண்டிக்கும் வகையிலேயே கபில் சிபலின் வலைத்தளத்தைத் தாக்கிச் சென்றதாக ‘அனானிமஸ்’ பெயரிலான ஹேக்கர்கள் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சர் கபில் சிபலின் வலைத்தளத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்றவர்களுக்கு அதிர்ச்சி... கபில் சிபலைக் கிண்டல் செய்யும் ஓர் அம்சம் அதில் இருந்தது.

http://kapilsibalmp.com/ என்ற அவரது தளம் ஹேக் செய்யப்பட்ட விவரம் தெரிந்து, உடனடியாக தளம் மீட்கப்பட்டு, ஹேக்கர்களின் அட்டகாசங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

கபில் சிபல் தளத்தில் அவர் ‘கோன் பனேகா குரோர் பதி’ போட்டியில் பங்கேற்பது போலவும், அதில் ஒரு கேள்விக்கான நான்கு ஆப்ஷனில் ஒன்றை அவர் தேர்ந்தெடுத்துச் சொல்வது போலவும் படம் வெளியிடப்பட்டது.

நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தீமை விளைவிப்பது எது?’ என்பதே அந்தக் கேள்வி. ‘நான்’, ‘சுதந்திரம்’, ’நான்’ மற்றும் ‘நான்’ என்பதே ஆப்ஷன்கள். அதில், கபில் சிபல் தேர்வு செய்தது ‘சுதந்திரம்’ என்ற ஆப்ஷனை எனக் குறிக்கும் விதமாக அந்த புகைப்படம் இருந்தது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66ஏ-வில் உள்ள சில அம்சங்களை விமர்சிக்கும் வகையில், இணைய சுதந்திரத்தை மீட்க வலியுறுத்தும் வகையிலுமே கபில் சிபலனின் வலைத்தளத்தை ஹேக் செய்ததாக அனானிமஸ் க்ரூப் தங்களது ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் தகவல் சொல்லியிருக்கிறது.

மேலும், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்கே பாதுகாப்பு இல்லை என்பதை ஹேக்கர்கள் குறிப்பால் சொல்லியிருக்கிறார்கள்.

அத்துடன், நவம்பர் 30-ம் தேதியான இன்று கணினி பாதுகாப்பு தினம் என்பதும், கணினியை வைரஸ் மற்றும் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது

என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!.

               தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை; மதுரையைக் கடக்கிறது வைகை; நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி; தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது; திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது; என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.
வற்றாத ஒரு நதியுமில்லை; வானளாவிய ஒரு கோவிலுமில்லை; இதிகாசத்திலே இடமுமில்லை; எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை; இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.
              தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார். இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை; ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?
விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன; ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.
                          சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம். மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம்.                 கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம். வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது. எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.
பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை. உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...
           
                  அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான். எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.
இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது கோவை. அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்; குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி'; மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது "ஓசை'; ரயில் சேவைக்காக போராடுகிறது "ராக்'.
மரியாதைக்குரிய கொங்குத் தமிழ், அத்துப்படியான ஆங்கிலம், இதமான காலநிலை, சுவையான சிறுவாணி, அதிரடியில்லாத அரசியல்... இவற்றையெல்லாம் தாண்டி, அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள். 
                
                  புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி பீடு நடை போடுகிறது. அதைக்கொண்டாட வேண்டிய அழகான நாள் இன்று...கோயம்புத்தூர் தினம்.
எல்லோரும் சொல்வோம் இறுமாப்பாய்...

மீனாட்சிஅம்மன் கோயில் பார்க்கிங்

              மதுரையில் மீனாட்சி கோயிலுக்கு வரும் டூரிஸ்ட் வாகனங்களை நிறுத்துவதற்கு "பார்க்கிங்' வசதி இல்லை. இதனால் ஆண்டுதோறும், ஐயப்ப பக்தர்கள் அலைக்கழிக்கப்படுவது, தொடர்கதையாகி விட்டது.
சபரிமலை சீசனில், மதுரைக்கு தினமும் சராசரியாக 400 வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர். திருப்பரங்குன்றம், மீனாட்சிஅம்மன் கோயில், அழகர்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக 
கொண்டுள்ளனர். 

            சில ஆண்டுகளுக்கு முன், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்ட், தெற்கு மாரட்வீதி, டி.பி.கே.,ரோடுகளில் "பார்க்கிங்' செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், எல்லீஸ்நகர் மற்றும் பைபாஸ் ரோடுகளுக்கு மாற்றப்பட்டது.
              
              மதுரை அரசு பாலிடெக்னிக் பாலம் பணிகள் நடந்து வருவதால், மூன்று நாட்களாக எல்லீஸ்நகர் ரோட்டில் இந்த வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. பைபாஸ் ரோட்டில் நிறுத்தப்படுகிறது.
இங்கு குடிநீர், கழிப்பறை என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால், இப்பகுதிகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றன.
பார்க்கிங் பிரச்னை: சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில், கார் மற்றும் வேன்களை பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. டூரிஸ்ட் பஸ்கள், இரவு 11 
மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
               
        எல்லீஸ்நகர் ரோட்டில், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தில், வாகன பார்க்கிங் செய்ய, கடந்த ஆண்டு கோயில் நிர்வாகம் முன்வந்தது. அந்த இடத்தில் கோயில் சார்பில் பார்க்கிங் கட்டணமும் வசூல் செய்யப்பட்டது. இதற்கு, எல்லீஸ்நகர் ரோட்டில் வாகன பார்க்கிங் வசூல் செய்ய உரிமம் பெற்றுள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கைவிடப்பட்டது.

         பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் கடந்த ஆண்டு பார்க்கிங் அனுமதிக்கப்பட்டது. அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டதால், இந்த ஆண்டு இப்பகுதியில் பார்க்கிங் அனுமதி அளிக்கவில்லை. இங்கு பக்தர்களுக்கு கழிப்பறை, தண்ணீர், ஓட்டல் வசதிகள் உள்ளன.

         எனவே பக்தர்களின் வாகனங்களை எங்கே நிறுத்த வைப்பது என்பதில் போக்குவரத்து போலீசார் திணறுகின்றனர்.

வசூல் மட்டுமே குறி:
                     பைபாஸ்ரோடு, எல்லீஸ்நகர் ரோடுகளில் நுழையும் அனைத்து வாகனங்களையும் பின்தொடர்ந்து சென்று, கட்டண வசூல் செய்யப்படுகிறது. பஸ்களுக்கு ரூ.100, மற்ற வாகனங்களுக்கு ரூ.50. இதிலும் முறைகேடுகள் தொடர்கின்றன. கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. 
அதற்கு ரசீது தருவது இல்லை. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் முகாமிட்டுள்ளன. 

         ஆட்டோவில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்ல, தலா ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஒரே ஆட்டோவில் 12க்கும் மேற்பட்டோர் சவாரி    செய்வது தனிக்கதை.

பிறந்து வளர்வதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 66வது இடம்

                                     உலகில், பிறப்பதற்கு சிறந்த இடம், சுவிட்சர்லாந்து என, 

ஆய்வில் தெரிய வந்துள்ளது.பிரிட்டனை சேர்ந்த, பொருளாதார நுண்ணறிவு 

பிரிவு, சமீபத்தில்    ஒரு ஆய்வு மேற்கொண்டது. பிறந்தது முதல், படிப்பு, 

வேலை வாய்ப்பு, குடும்பம் நடத்துவதற்குரிய சூழல் ஆகியவற்றை 

அடிப்படையாக கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நல்லபடியாக 

வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ள  நாடு, சுவிட்சர்லாந்து என, 

கூறப்பட்டுள்ளது.அதிக குற்றங்கள் நடக்காத, ஊழலற்ற நிறுவனங்கள் உள்ள 

நாடுகள் பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடத்தை பெறுகிறது. இரண்டாவது 

இடம், ஆஸ்திரேலியாவுக்கு  கிடைத்துள்ளது.முதல், 10 இடங்களில், நார்வே, 

சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூசிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங் ஆகிய 

நாடுகள், மனிதர்கள்  பிறப்பதற்கு ஏற்ற இடங்களாக தேர்வாகியுள்ளன.இந்த 

பட்டியலில்  இந்தியா,66வது இடம் வகிக்கிறது; பிரிட்டனுக்கு, 27வது இடம் 

கிடைத்துள்ளது.

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐ.நா.,வில் ஓட்டெடுப்பு


                   பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் தொடர்பாக, ஐ.நா.,வில் நடந்த ஓட்டெடுப்பில், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ளவில்லை.பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாகப் பகை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தை, தனி நாடாக அங்கீகரிக்கக் கோரி போராடியவர், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத்.

           இவரது முயற்சியால் பாலஸ்தீனம் தனி நாடானது. இருப்பினும், இந்த நாடு, ஐ.நா., சபையால் இன்னும் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது.ஐ.நா., சபையால் தனி நாடாக அங்கீகரிக்கப்படாததால், ராணுவம் அமைப்பது, ஆயுதங்களை வாங்குவது, எல்லைகளை வரையறுப்பது போன்ற காரியங்களை, பாலஸ்தீனத்தால் செய்ய முடியவில்லை.எனவே தான், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் தீர்மானத்தின் மீது, ஐ.நா., சபையில், நேற்று ஓட்டெடுப்பு நடந்தது.

             அமெரிக்கா, ஜெர்மன், இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், இந்தத் தீர்மானத்தை எதிர்த்தன.ஐ.நா., சபையில் மொத்தமுள்ள, 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட, 126 நாடுகள் அதன் இறையாண்மையை அங்கீகரித்து உள்ளன.ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஓட்டளித்து உள்ளன.ஐ.நா.,வில் நிறைவேற்றப் பட்டுள்ள இந்தத் தீர்மானத்தால், பாலஸ்தீனம், சுதந்திரநாடாக அறிவிக்கப்பட்டு விட்டதாகக் கருத முடியாது.
           
               கடந்த, 67ம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளுடன் தங்கள் நாட்டை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பாலஸ்தீனம் வலியுறுத்தி உள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லி


மும்பை தாக்குதலுக்கு, சதி திட்டம் தீட்டி கொடுத்த, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், டேவிட் ஹெட்லி மற்றும் தகவுர் ராணா ஆகியோருக்கு, அமெரிக்க கோர்ட்டில், வரும், ஜனவரி மாதம் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.மும்பையில், 2008, நவம்பரில், தாக்குதல் நடத்திய, அஜ்மல் கசாப்புக்கு, சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்தவர், அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான ஹெட்லி; இவருடைய கூட்டாளி, தகவுர் ராணா.மும்பை தாக்குதலில் பலியான, 166 பேரில், ஆறு பேர் அமெரிக்கர்கள். பலியானவர்களின் உறவினர்கள், இது தொடர்பாக, அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அமெரிக்க போலீசார், சிகாகோ நகரில், ஹெட்லியையும், அவரது கூட்டாளி ராணாவையும் கைது செய்தனர்.

மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்ததை, ஹெட்லி ஒப்பு கொண்டதால், அவருக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டின், பத்திரிகை அலுவலகத்தை, வெடிகுண்டு வைத்து தகர்க்க, சதி செய்தது தொடர்பாக, ராணா மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம், 15ம் தேதி, ராணாவுக்கும், 17ம் தேதி, ஹெட்லிக்கும், சிகாகோ கோர்ட் தண்டனை அறிவிக்க உள்ளது.

மனதை தொட்ட குரல்...


               விலைவாசி உயர்வால், குடும்பம் நடத்த முடியாமல், நடுத்தர பிரிவு மக்களே திணறி வருகின்றனர். நிலையான சம்பளம் இல்லாமல், வாழ்க்கையை நடைபாதையில் நகர்த்துபவர்களும் உள்ளனர். பிராட்வே நடைபாதையில் வசிக்கும் பவானி தினசரி வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார் என்பது அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து...

நடைபாதையிலேயே வாழுறீங்களே?

ஆமாங்க. எங்கம்மா, நான், என் பொண்ணு, என் பேரன்னு ஐந்து தலைமுறையா இங்க தான் இருக்கிறோம். இதே எடத்துல தான், எங்க தாத்தா இருந்தாரு. இது அவரு புடிச்ச இடம். இப்ப நாங்க இருக்கிறோம்.

HTML : <a href="http://www.neobux.com/?r=Online8447"><img src="http://images.neobux.com/imagens/banner9.gif" width="468" height="60"></a>

என்ன படிச்சுருக்கீங்க?

மூணாவது வரைதான் படிச்சேன். இந்த ரோட்டுல தான் எப்பவும் விளையாடிட்டு இருப்பேன். விவரம் தெரிஞ்சதும், வீட்டு வேலைகளுக்கு போக ஆரம்பிச்சுட்டேன்.

எப்போ திருமணம் ஆச்சு”?

எனக்கு 13 வயசுல நடந்துச்சு. அப்போ அவருக்கு 27 வயசு இருக்கும்.

நிச்சயிக்கப்பட்டதா?

இல்லை. காதல் திருமணம். துரத்தி, துரத்தி காதலிச்சாரு. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

எத்தனை பசங்க?

மூணு பொண்ணுங்க... இரண்டு பசங்க...

என்ன படிச்சுருக்காங்க?

பசங்க ஐந்தாவது, பொண்ணுங்க மூணாவது வரை படிச்சுருக்காங்க. பொண்ணுங்க இங்க இருந்தா கெட்டு போயிடுவாங்கன்னு, ரெண்டு பேரையும், ஒன்பது வய”ல கேரளாவுக்கு, வீட்டு வேலைக்கு அனுப்பிட்டேன். வய”க்கு வந்ததும் பொண்ணுங்கள, அவங்களே திருப்பி அனுப்பி வச்சுட்டாங்க.

பொண்ணுகளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

முதல் பொண்ணுக்கு, 15 வயசுல கல்யாணம் பண்ணோம். அவங்க வீட்டுக்காரு எய்ட்ஸ் நோயால இறந்துட்டாரு. அதனால, என் தம்பிய இரண்டாவதா எடுத்துருக்கோம். ("எடுத்துக்குறோம்' என்றால், தாலி கட்டி கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது) இரண்டாவது பெண்ணுக்கு, 14 வய”ல கல்யாணமாச்சி. கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமாயிட்டா. அதுனால, அந்த பையனையே கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். பின்னாடி, வீட்டுக்காரு சரியில்லன்னு வாழல. என் கூட தான் இருக்கா. மூணாவது பெண்ணு வேலைக்கு போயிட்டு இருக்கா.

பசங்க என்ன பண்ணுறாங்க?

ஒரு பையன் மீன்பாடி வண்டி ஓட்டுறான். இன்னொரு பையன் ஆட்டோ மெக்கானிக்கா இருக்கான். பசங்க பாரீஸ் சுத்தி இருக்குற கடையில தான் வேலை செய்யுறாங்க. சம்பாதிக்குற காசுல பாதி, குடிக்க தான் செய்யுறாங்க.

கணவர் என்ன வேலை செய்கிறார்?

முதல, பிக் பாக்கெட் அடிச்சுட்டு இருந்தாரு. இப்ப ரிக்ஷா வண்டி ஓட்டுறாரு.

எவ்வளவு சம்பாதிக்குறாரு?

தெரியாது. வாரத்துக்கு இரண்டு நாள் தான் வேலைக்கு போவார். அதுல வர காசையும் குடிச்சே அழிச்சுடுவாரு. செலவுக்குன்னு ஒரு ரூபா கூட கொடுக்க மாட்டாரு.

உங்களுக்குள் சண்டை வருமா?

அடிக்கடி வரும். குடிச்சுட்டு வந்து அடிப்பாரு. யாருக்காவது சாதகமாக பேசினா, சந்தேகப்பட்டு அடிப்பாரு. இங்க இருக்கிற எல்லா பொண்ணுங்க நிலைமையும் இது தான். அடிபட்டு சாகறதுக்கு பதிலா, கணவருடன் வாழாமல், யாரையாவது எடுத்துக்குறாங்க.மூணு, நாலு பேரை எடுத்துக்கிட்டவங்களும் உண்டு. ஆம்பளைகளும் அதே மாதிரி இருக்காங்க. இங்க இது சாதாரணமாக நடக்கும்.

வீட்டு செலவ எப்படி சமாளிக்குறீங்க?

பூ கட்டுறதுல, 100 ரூபா கிடைக்கும். பிராட்வே கடைகளில அட்டை பெட்டி, காகிதத்தை கொட்டுவாங்க. அதை எடுத்து விற்பேன். 150 ரூபா கிடைக்கும். அதுல தான் குடும்பத்த நடத்துறேன். பசங்க, நாலு நாள் வேலைக்கு போனா, நாலு மாசம் வேலைக்கு போக மாட்டா ங்க. என்ன பண்ணுறது என் தலையெழுத்து.

திட்டமிட்டு வாழறீங்களா?

இன்னைக்கு என்ன வேணுமோ அத வாங்கி சமைப்பேன். இல்லன்னா, ஓட்டலில் சாப்பிடுவோம். திட்டமிட்டு வாழறது பத்தி எல்லாம் தெரியாது.

எந்த முகவரி பயன்படுத்துவீங்க?

ரேஷன் கார்டு, அடையாள அட்டைன்னு எல்லாத்துக்கும் எதிரே உள்ள கடை அட்ரச தான் கொடுப்போம். கடையில விசாரிச்சுக்குவாங்க.

இங்க கஷ்டம் இருக்கா?

எந்த பொருளையும் வாங்கி வைக்க முடியாது. வீடு இருந்தா அழகா வைச்சு பாக்கலாம். இங்க ரோட்டுல தான் எல்லாத்தையும் வைக்க வேண்டி இருக்கு. இதனால, யாரு, வரா, போறான்னு ரோட்டையே பார்க்க வேண்டி இருக்கு. வீட்டுல இருந்தா, பூட்டிட்டு ஒரு வாரம் கூட வெளிய போயிட்டு வரலாம். ரோட்டுல இருக்குறதால வெளிய எங்கும் போக முடியாது.

வீட்டுல தங்க ஆசை இருக்கா?

யாருக்கு தான் வீட்டுல தங்க ஆசை இருக்காது. ஒரு தடவை, ரோட்டு வாழ்க்கையே வேணாம்ன்னு, வாடகை வீடுக்கு போனேன். ஆசாரமான வீடு. எங்க வீட்டுக்காரு அங்க குடிச்சுட்டு வந்துட்டாரு. அதுனால கோபத்துல, அவர வீட்டுக்குள்ளயே வச்சி பூட்டிட்டு வந்துட்டேன். அதோட வாடகை வீட்டுக்கு போறதயே வுட்டுட்டேன்.

கொடுக்குற வீட்டை வித்துடுறதா சொல்லுறாங்களே?

சூழ்நிலை தான் காரணம். சில பேர் வித்துடுறாங்க. கஷ்டம்ன்னு வாடகைக்கு விட்டுட்டு, இங்க நிறைய தங்குறாங்க. குடிச்சவங்க

கிட்ட கூட நிறைய பேர் வீட்டை எழுதி வாங்கியிருக்காங்க.

இதில சிரமமா இல்லையா?

அழாத நாளே இல்லை. ரோட்டுல, பிளாஸ்டிக் கட்டிட்டு பயந்துட்டே குளிக்கணும். உடம்பு சரியில்லைன்னாலும் நடுரோட்டில படுக்கணும். மழை வந்தா தூங்க இடம் இல்லாம, முழிச்சுட்டு இருக்கணும். இதை விட வேற என்ன கஷ்டம் இருக்கு. எனக்கு இங்க இருக்க புடிக்கலனா எங்கயாவது போயிடுவேன். ரொம்ப நாள் கழிச்சு தான் வருவேன். இந்த வாழ்க்கை வாழுறதுக்கு வாழாமலே இருக்கலாம்

மறுபடியும் மழைநீர் சேகரிப்பு திட்டம் வரணும் - பாண்டிராஜ் திரைப்பட இயக்குனர்


நான் புதுக்கோட்டை ஆளு. சினிமா டைரக்டராகணும்கற கனவோடு, 1995ல் சென்னைக்கு வந்தேன். அதுவொரு அடை மழைக்காலமா இருந்ததால, தெருவெல்லாம் நச நசன்னு சேறும் - சகதியமா இருந்துச்சு. அக்கம் பக்கத்துல யாருமே முகம் கொடுத்துப் பேசல. எல்லாருமே ஏதோவொரு அவசரத்துல இருந்தாங்க. நான் கற்பனை செய்து வைத்திருந்ததை போல இல்லாம வேற மாதிரி இருந்ததாலே "சே...என்ன ஊரு இது...'ன்னு வெறுத்துப் போய் சொந்த ஊருக்கே கிளம்பலான்னு இருந்தேன். ஆனா சினிமாவுல ஜெயிக்கணுமேங்கிற வைராக்கியம் என்னை கட்டி போட்டிருச்சு.

இங்க, எல்லாருமே "இதயம் சுமக்கும்' எந்திரமா மாறிப்போயிருக்காங்க. எல்லாத்துக்குமே அவசரம். ஆம்புலன்ஸ் பின்னாடியே "பைக்'ல பறக்குறாங்க. கொஞ்சம் கவனம் பிசகினா அதே ஆம்புலன்சுல அந்த இளைஞன் போக வேண்டியதாயிடும்.
போக்குவரத்து விதிகளை மதிக்கணும்:

நாம போக்குவரத்து விதிகளை மதிக்கணும். சீனாவுல சைக்கிளை அதிகமா பயன்படுத்தறாங்க, குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள பாதையில எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், சைக்கிள்ல தான் பயணம் செய்தாகணும். சைக்கிளை பயன்படுத்தறது மூலமா ஊளைச்சதை குறையும். நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும். துபாய்ல "ரூட் மேப் பிளான்' வச்சிருக்கறதால "டிராபிக் ஜாம்'கற பேச்சுக்கே இடமில்லை. அதே மாதிரி இங்கேயும் வந்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில திடீர்னு "குழி'யை வெட்டி வச்சிடறாங்க. பாதாள சாக்கடையை மூடாம போய்டறாங்க. இதனால குழந்தைகள், வயதானவங்களுக்கு பெரும் அவஸ்தையா போயிருது. பள்ளிகளும் - கோவில்களும் இருக்குற இடத்துல தான் மதுபான கடைகள் இருக்கு. இதெல்லாம் என்னோட மனச பிசையுற விஷயமா இருக்கு. இதெல்லாம் மாறினா எழில்மிகு சென்னையை பார்க்க முடியும்.

"மழைநீர் சேகரிப்பு திட்டம்':

நான் சென்னை நகரத்துக்கு வந்த புதுசுல தான் தண்ணீர் பாக்கெட் அறிமுகமாச்சு. "இங்க தண்ணியவே காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு...!' ன்னு எங்க அம்மாவுக்கு கடிதம் எழுதினேன். கோடை காலத்துல தண்ணீர் பிரச்னை பெரும் தலைவலியா இருக்கு. கடந்த முறை அ.தி.மு.க., ஆட்சியில "மழைநீர் சேகரிப்பு திட்டம்' கொண்டு வந்தாங்க. அதனால, ஓரளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு கட்டுக்குள்ள வந்துச்சு. அந்த அருமையான திட்டத்தை மறுபடியும் அரசாங்கம் கொண்டு வரலாம்கறது என்னோட அபிப்ராயம்.


சென்னை நகரத்துல என்னதான் பல அசவுகரியங்கள் இருந்தாலும் அதை நான் நேசிக்கிறேன். ஏன்னா, நான் பார்த்து பிரமிச்ச பல திரையுலக பிரம்மாக்கள், என்னோட "பசங்க, மெரினா' படங்களை பார்த்து பிரமிச்சு போய் என்னை பாராட்டினாங்க.

அதுக்கு கைமாறாகத் தான் சென்னை மெரினா கடற்கரையில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கையை "மெரினா' படத்தில் பதிவு செஞ்சேன். அத்துடன் "வணக்கம் வாழ வைக்கும் சென்னை...' என்கிற ஒரு பாடலையும் அதில் வச்சேன். மெரினா பீச், காந்தி மண்டபம், வள்ளுவர் கோட்டம், ஏ.வி.எம்., பிரசாத் ஸ்டுடியோ, நட்சத்திர ஓட்டல்கள்; மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள், மெகா மால்கள்ன்னு எத்தனையோ பொக்கிஷங்கள் இங்கே இருக்கு. அந்த பொக்கிஷங்கள நாம பொத்தி பாதுகாக்கணும்

பாபாஜி 1809 வது பிறந்த நாள் விழா வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு!

பரங்கிப்பேட்டையில் நேற்று பாபாஜியின் 1809வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பரங்கிப்பேட்டை சுங்க அலுவலகம் அருகே உள்ள பாபாஜி கோவிலில் ஆண்டுதோறும் பாபாஜியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு நேற்று நடந்த பாபாஜியின் 1809 வது பிறந்த நாள் விழாவையொட்டி பாபாஜிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. அதைதொடர்ந்து மதியம் 12 மணிக்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 3 மணிக்கு ஓம் கிரியா பாபாஜி நம ஓம் கிரியா யோகம் துவங்கி இன்று 30ம் தேதி அதிகாலை 3 மணிக்கு முடிவடைகிறது. பாபாஜியின் பிறந்த நாளையொட்டி மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் பரங்கிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மனிஷா கொய்ராலாவிற்கு நோய்!

Manisha koyralavirku cancer!
பம்பாய், உயிரே, இந்தியன், ஆளவந்தான் மற்றும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை

போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மனிஷா கொய்ராலா.

அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடந்து நேற்று மும்பையில் உள்ள 

ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை 

பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாக 

தெரிவித்துள்ளனர். எனவே, சில நாட்கள் மருத்துவமனையில் தங்கும் 

அவருக்கு சில மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர்கள் 

தெரிவித்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் மலையாள மொழித் 

திரைப்படங்களில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா, நேபாளின் மன்னர் 

குடும்பத்தை சேர்ந்தவர். விவாகரத்து பெற்ற 42 வயதான நடிகை மனிஷா   

1991-ம் ஆண்டு சௌதாகர் என்னும் இந்தித் திரைப்படம் மூலம் இந்திய 

சினிமாவில் அறிமுகமானார். 

சச்சின் vs பாண்டிங்


                 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு  பெறுகிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங். இதையடுத்து, தனது ஓய்வு குறித்தும் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு சச்சின் தள்ளபட்டுள்ளார். 

                    ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கேப்டனாக விளங்கியவர் ரிக்கி பாண்டிங், 37. இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை (2003, 2007) உலக கோப்பை வென்று சாதித்தது. கடந்த 1995ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் காலடி வைத்த இவர், 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். ஏற்கனவே இவர், 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின் சர்வதேச "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர், பெரிதாக சோபிக்கவில்லை. இதில் கடைசியாக விளையாடிய தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்டில் மொத்தம் 20 ரன்கள் (0, 4, 16 ரன்) மட்டுமே எடுத்தார். இதனால் இவரது "பார்ம்' குறித்து விமர்சனம் எழுந்தது.

              இந்நிலையில் பெர்த்தில் இன்று துவங்கவுள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பாண்டிங் தெரிவித்தார். இதன்மூலம் இவரது 17 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. உள்ளூர் போட்டிகளில் "டாஸ்மானியா' அணியுடனான ஒப்பந்த காலம் முடியும் வரை விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.
     
           பாண்டிங் கூறியது: நீண்ட நாட்களாக யோசித்து எடுத்த இந்த ஓய்வு முடிவு கடினமான ஒன்று. சமீபகாலமாக போட்டியில் எனது செயல்பாடு சிறப்பானதாக இல்லை. அணியின் வெற்றிக்கு தேவையான பங்களிப்பை என்னால் முழுமையாக கொடுக்க முடியவில்லை. எனவே ஓய்வு பெறுவதற்கு இது சரியான தருணம் என நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது எனது சொந்த முடிவு. தேர்வுக்குழுவினரோ அல்லது வேறு யாருடைய ஆலோசனையின் படி முடிவு எடுக்கவில்லை.
               
            கிரிக்கெட் போட்டி காரணமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தினருடன் நீண்ட நேரம் செலவழிக்க முடியவில்லை. ஓய்வுக்கு பின் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பேன். இனி குடும்பம் தான் எனது புதிய அணி.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.


அடுத்து சச்சின்:
                   கிரிக்கெட் அரங்கில் பாண்டிங் மற்றும் இந்தியாவின் சச்சினை ஒப்பிட்டு பேசுவதுண்டு. சதம் அடிப்பதிலும், ரன் குவிப்பதிலும் இருவருக்கும் இடையே எப்போதும் போட்டி காணப்படும். தற்போது பாண்டிங் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், "பார்ம்' இல்லாமல் தவிக்கும் சச்சினும் விரைவில் ஓய்வு குறித்து முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டாவது இடம்
                  கடந்த 17 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் பாண்டிங், இதுவரை 167 டெஸ்டில் 41 சதம், 62 அரைசதம் உட்பட 13,366 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு (15,562 ரன்) பின் இரண்டாவது இடம் பிடித்தார்.
பத்தாயிரம் ரன்களை கடந்தவர்கள்:
வீரர்                        போட்டி          ரன்         100/50
சச்சின் (இந்தியா)          192         15,562   51/65
பாண்டிங் (ஆஸி.,)    167        13,366 41/62
டிராவிட் (இந்தியா)   164       13,288 36/63
காலிஸ் (தெ.ஆ.,)   157        12,941 44/56
லாரா (வெ.இ.,)            131        11,953 34/48
பார்டர் (ஆஸி.,)            156        11,174 27/63
ஸ்டீவ் வாக் (ஆஸி.,)   168        10,927 32/50
சந்தர்பால் (வெ.இ.,)   146        10,696 27/61
ஜெயவர்தனா (இலங்கை) 135       10,640 31/43
கவாஸ்கர் (இந்தியா)        125       10,122 34/45

                * பாண்டிங், ஒருநாள் போட்டியிலும் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர், 375 ஒருநாள் போட்டியில் 30 சதம், 82 அரைசதம் உட்பட 13,704 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் (463 போட்டி, 18,426 ரன்) உள்ளார்.
           
                   * டெஸ்ட் அரங்கில், அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் பாண்டிங் (41 சதம்). முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் சச்சின் (51 சதம்), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (44) உள்ளனர்.
          
             * இதுவரை 6 முறை இரட்டை சதம் அடித்துள்ள பாண்டிங், ஒருமுறை கூட 300 ரன்களை தொட்டதில்லை. கடந்த 2003ல் இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த டெஸ்டில் 257 ரன்கள் எடுத்து, தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார்.

இந்தியாவுக்கு எதிராக அதிகம்
            இதுவரை 167 டெஸ்டில் விளையாடி 13,366 ரன்கள் எடுத்துள்ள பாண்டிங், இந்தியாவுக்கு எதிராக 29 டெஸ்டில் அதிகபட்சமாக 2555 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8 சதம், 12 அரைசதம் அடங்கும். தவிர இவர், இந்தியாவுக்கு எதிராக மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.
ஒவ்வொரு அணிக்கு எதிராக பாண்டிங் எடுத்த ரன்கள்:
எதிரணி          போட்டி               ரன்                100/50
இந்தியா                      29                2555          8/12
இங்கிலாந்து              35                2476           8/9
தென் ஆப்ரிக்கா      25                2120           8/11
வெஸ்ட் இண்டீஸ் 24                 1977         7/7
பாகிஸ்தான்                15                  1537         5/6
நியூசிலாந்து                 17                  1076         2/6
இலங்கை                14                   975         1/7 
ஜிம்பாப்வே                  3                   290         1/1
வங்கதேசம்                 4                   260               1/2
உலக லெவன்         1                   100            0/1

ஸ்டீவ் வாக் சாதனை சமன்
                      இன்று தனது 168வது டெஸ்டில் விளையாட உள்ள பாண்டிங், டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்குடன் பகிர்ந்து கொள்ள உள்ளார். சர்வதேச அளவில் இரண்டாவது இடம் பெற உள்ளார். முதலிடத்தில் 192 டெஸ்டில் விளையாடிய இந்தியாவின் சச்சின் உள்ளார்.
  
முதலும்...முடிவும்
                    கடந்த 1995ம் ஆண்டு பெர்த் நகரில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான பாண்டிங், 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பெர்த் மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதன்மூலம் டெஸ்ட் வாழ்க்கையை துவங்கிய மைதானத்திலேயே ஓய்வு பெற இருப்பது சுவாரஸ்யமான ஒன்று.

வெற்றிக் கேப்டன்
                   டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்கள் வரிசையில் பாண்டிங் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 77 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட இவர் 48 வெற்றியை தேடித்தந்துள்ளார். 16 டெஸ்டில் தோல்வி கண்ட இவர், 13 போட்டியை "டிரா' செய்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5' கேப்டன்கள்:
வீரர் போட்டி வெற்றி தோல்வி "டிரா' வெற்றி சதவீதம்
பாண்டிங் (ஆஸி.,) 77 48 16 13 62.33
ஸ்மித் (தெ.ஆ.,) 96 44 26 26 45.83
ஸ்டீவ் வாக் (ஆஸி.,) 57 41 9 7 71.92
லாய்டு (வெ.இ.,) 74 36 12 26 48.64
பார்டர் (ஆஸி.,) 93 32 22 38 34.40

* இந்தியா சார்பில் கங்குலி (21 வெற்றி), தோனி (20 வெற்றி) ஆகியோர் அதிக வெற்றியை தேடித் தந்துள்ளனர்.

சூப்பர் பீல்டர்
              "பீல்டிங்கில்' வல்லவரான பாண்டிங், டெஸ்ட் வரலாற்றில் அதிக "கேட்ச்' பிடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதுவரை 196 "கேட்ச்' பிடித்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் டிராவிட் (210 கேட்ச்) உள்ளார். தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (190 கேட்ச்) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா பாராட்டு
                         பாண்டிங் ஓய்வு குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) தலைவர் வாலி எட்வர்ட்ஸ் கூறுகையில், ""பாண்டிங் நேர்மையான வீரர். இவர், நிறைய போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கைகெடுத்துள்ளார். சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் சிறந்த வீரராகவும் ஜொலித்த இவருக்கு மனமார்ந்த பாராட்டுகள். இவரது இடத்தை பூர்த்தி செய்வது கடினம். இவர், இளம் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். ஓய்வுக்கு பின், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.

வற்புறுத்தக்கூடாது: காம்பிர்
                        இந்திய வீரர் காம்பிர் கூறுகையில்,""பாண்டிங் ஓய்வு பெறுவதால், சச்சினும் ஓய்வு பெற வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒவ்வொருவருக்கும், எப்போது ஓய்வெடுக்க வேண்டும் எனத் தெரியும். எனவே, யாரையும் ஓய்வு பெற வற்புறுத்தக்கூடாது. இருவரும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். எனவே ஒப்பிட்டு பேசக்கூடாது. 

                       இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் சச்சின். அணிக்காக, இன்னும் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய திறமை இவரிடம் உள்ளது. எல்லா மனிதர்களுக்கும் ஏற்றமும், இறக்கமும் இருக்கத்தான் செய்யும். விளையாட்டை தாண்டியும், இவர் அதிகம் செய்துள்ளார். 
சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றாற் போல, ஆடுகளம் வேண்டும் எனக் கேப்டன் தோனி கேட்பதில் தவறில்லை. அசாருதின் கேப்டனாக இருந்த போதும், இப்படித்தான் இருந்தது. அப்போது, யாரும் கேள்வி கேட்கவில்லையே. அடுத்து நடக்க உள்ள கோல்கட்டா டெஸ்டில் இந்திய அணி எழுச்சி பெறும்,''என்றார். 

புஷ்க்குகே நிமோனியா
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹச்.டபிள்யூ.புஷ் மருத்துவமனையில் 

அனுமதிக்கப்பட்டுள்ளார். 88 வயதாகும் புஷ், தொடர் இருமலால் 

பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது உதவியாளர் ஜூன் பிகர் தெரிவித்துள்ளார். 

இது   நிமோனியாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்து 

மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டசபையின் வைரவிழா

 தமிழக சட்டசபையின் வைரவிழா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில் தற்போது சிறப்பாக நடந்து வருகிறது.

தமிழக சட்டசபை துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதையொட்டி, சட்டசபையின் வைரவிழா இன்று நடக்கிறது. இவ்விழாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். இதற்காக இன்று மாலை 3.30 மணியளவில் தனி விமானம் மூலம் டில்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரணாப் முகர்ஜியை, சென்னை விமான நிலையத்தில் கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற பிரணாப் முகர்ஜி, அங்கு சிறிது நேர ஓய்வுக்குப்பின், சி.ஐ.டி., காலனியில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சட்டசபைக்கு வந்தார். இதைத்தொடர்ந்து தமிழக சட்டசபை வைரவிழா இன்று மாலை 4.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. 

இதையடுத்து எழுந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மவுனம் அனுசரிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அனைவரும் எழுந்து நின்று குஜ்ரால் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சபாநாயகர் தனபால் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், கவர்னர் ரோசய்யாவுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். பின்னர் சபாநாயகர் தனபால், முதல்வர் மற்றும் பட்டுக்கோட்டையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணசாமி கோபாலன், பொள்ளாச்சி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என். மகாலிங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆர்.எம். பழனியப்பன் ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் பொன்னாடையும், சட்டசபை படம் பொறித்த நினைவுப்பரிசும் வழங்கினார். 

தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா சட்டசபை வைரவிழா மலரை வெளியிட, அதை பிரணாப் முகர்ஜி மற்றும் ரோசய்யா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து சட்டசபை முன்னாள் உறுப்பினர்கள் விடுதிக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் வாழ்த்துரை வழங்க, முதல்வர் ஜெயலலிதா சிறப்புரை ஆற்றுகிறார். இதையடுத்து கவர்னர் ரோசய்யா தலைமையுரை ஆற்ற, பிரணாப் முகர்ஜி சிறப்புரை ஆற்றுகிறார். இறுதியாக துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நன்றியுரை ஆற்றுகிறார். பின்னர் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10 வது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கில் தேநீர் விருந்து நடக்கிறது. இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழ...ன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப
்பட...்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. http://padugai.com/tamilonlinejob/index.php?r=8050 தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும், தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் அப்படியே சோழறின் வாழ்வை பிரதிபலிப்பதாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு அரசன் செய்த சாதனைகள் தந்தையின் புகழில் மறைந்துவிட்டது.காத்திருங்கள்.

மீண்டும் தொடரலாம்.
ஒரு சிறிய இடைவேளைக்கு  பிறகு

தமிழே நீ நதியாக ஓடு

         தமிழே நீ நதியாக ஓடு - இந்தத் 

தரைமீது வழிமாறித் தொலையாம லோடு 
எமதாசை மனம்மீதும் ஓடு - உனை 
இசைபாடித் தொழுவோரின் இதயத்தில் ஓடு 
அமர்ந்தே நில் ஆற்றுப்படுக்கை - இன்னும் 
அகல்வாவி குளமென்று அலைகொண்டு ஆடு 
நிமிர்ந்தோடு நேராக ஓடு - நீ 
நெடுந்தூரம் நடந்தாலும் புவிகண்டு வாழு 

நிமிர்ந்தோடு, புவிகொண்ட மொழிகள் - பல 
நினையுண்டு தலைதூக்க நெருங்கு மப்போது 
துமிதூறச் செல்வங்களோடு - நீ 
தொலையாது பெரிதாகு மழைகொண்டதாகு 
சுமந்தோம் உன் புகழ்தன்னை ஆண்டு - பல 
சொல்லவும் முடியாத பெருந்துன்பங் கொண்டு 
எமதன்பின் தமிழென்று கண்டோம் - இனி 
எதிர்காலம் உண்டோவென் றோரச்சம் கொண்டோம் 

அழிகின்ற மொழிநூறு உண்டு - இந்த 
அகிலத்தில் தொலைகின்ற மொழியோடு சேர்ந்து 
வழிகண்டு தமிழ்போகின் தீது - இது 
வருங்காலம் நடைபெறக் குறி கொண்டதேது 
செழிக்கின்ற மரம்வேண்டும் நீரும் - நீ 
திரும்பும் உன் வழியெங்கும் தமிழ்பேச வேண்டும் 
தெளிவோடு ஒளிதோன்ற வேண்டும் - இதில் 
தேவையெனில் புதுப்பாதை நாம்காண வேண்டும் 

மொழிஎன்ப துயிருக்கு நேராம் - இந்த 
மூச்சில்லை யென்றிடில் முழுவாழ்வும் போமாம் 
பொழிகின்ற மழை நின்றுபோனால் - கொண்ட 
பசுமைக்கு புவிமீது இடமேது கூறு 
எழில்கொண்ட தமிழ்வாழ வேண்டும் - இதற் 
கெமதன்பு இதயத்தில் இடம் நல்கவேண்டும் 
வழிஉண்டு வகை செய்ய வல்லோம் - இந்த 
வையத்தில் தமிழ்என்ற பெருமையும் கொள்ளோம்

உருள்கின்ற கல்லென்ப குன்றின் - நிலை 
யுயர்நின்று விழும்போது உடன் கையிலேந்து 
வருகின்ற கல்வீழும் பாதை - அது 
வரவர வேகமும் பெரிதாகும் கொள்ளு 
பெரும் வீழ்ச்சி கொண்டோடி அருவி - நிலை 
பிறழ்வுண்டு விழமுன்புதடையொன்று போடு 
தருமின்பத் தமிழ்காத்து வெல்லு - இன்றேல் 
தரைவீழும் அருவிக்குப் பெயராழி யென்று !
                                                             

                                                                                     படித்ததில் பிடித்தது!
                                                                                                                                                       

காத்திருங்கள்.

மீண்டும் தொடரலாம்.
ஒரு சிறிய இடைவேளைக்கு  பிறகு