சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Nov 2012

மனதை தொட்ட குரல்...


               விலைவாசி உயர்வால், குடும்பம் நடத்த முடியாமல், நடுத்தர பிரிவு மக்களே திணறி வருகின்றனர். நிலையான சம்பளம் இல்லாமல், வாழ்க்கையை நடைபாதையில் நகர்த்துபவர்களும் உள்ளனர். பிராட்வே நடைபாதையில் வசிக்கும் பவானி தினசரி வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார் என்பது அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து...

நடைபாதையிலேயே வாழுறீங்களே?

ஆமாங்க. எங்கம்மா, நான், என் பொண்ணு, என் பேரன்னு ஐந்து தலைமுறையா இங்க தான் இருக்கிறோம். இதே எடத்துல தான், எங்க தாத்தா இருந்தாரு. இது அவரு புடிச்ச இடம். இப்ப நாங்க இருக்கிறோம்.

HTML : <a href="http://www.neobux.com/?r=Online8447"><img src="http://images.neobux.com/imagens/banner9.gif" width="468" height="60"></a>

என்ன படிச்சுருக்கீங்க?

மூணாவது வரைதான் படிச்சேன். இந்த ரோட்டுல தான் எப்பவும் விளையாடிட்டு இருப்பேன். விவரம் தெரிஞ்சதும், வீட்டு வேலைகளுக்கு போக ஆரம்பிச்சுட்டேன்.

எப்போ திருமணம் ஆச்சு”?

எனக்கு 13 வயசுல நடந்துச்சு. அப்போ அவருக்கு 27 வயசு இருக்கும்.

நிச்சயிக்கப்பட்டதா?

இல்லை. காதல் திருமணம். துரத்தி, துரத்தி காதலிச்சாரு. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

எத்தனை பசங்க?

மூணு பொண்ணுங்க... இரண்டு பசங்க...

என்ன படிச்சுருக்காங்க?

பசங்க ஐந்தாவது, பொண்ணுங்க மூணாவது வரை படிச்சுருக்காங்க. பொண்ணுங்க இங்க இருந்தா கெட்டு போயிடுவாங்கன்னு, ரெண்டு பேரையும், ஒன்பது வய”ல கேரளாவுக்கு, வீட்டு வேலைக்கு அனுப்பிட்டேன். வய”க்கு வந்ததும் பொண்ணுங்கள, அவங்களே திருப்பி அனுப்பி வச்சுட்டாங்க.

பொண்ணுகளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

முதல் பொண்ணுக்கு, 15 வயசுல கல்யாணம் பண்ணோம். அவங்க வீட்டுக்காரு எய்ட்ஸ் நோயால இறந்துட்டாரு. அதனால, என் தம்பிய இரண்டாவதா எடுத்துருக்கோம். ("எடுத்துக்குறோம்' என்றால், தாலி கட்டி கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது) இரண்டாவது பெண்ணுக்கு, 14 வய”ல கல்யாணமாச்சி. கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமாயிட்டா. அதுனால, அந்த பையனையே கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். பின்னாடி, வீட்டுக்காரு சரியில்லன்னு வாழல. என் கூட தான் இருக்கா. மூணாவது பெண்ணு வேலைக்கு போயிட்டு இருக்கா.

பசங்க என்ன பண்ணுறாங்க?

ஒரு பையன் மீன்பாடி வண்டி ஓட்டுறான். இன்னொரு பையன் ஆட்டோ மெக்கானிக்கா இருக்கான். பசங்க பாரீஸ் சுத்தி இருக்குற கடையில தான் வேலை செய்யுறாங்க. சம்பாதிக்குற காசுல பாதி, குடிக்க தான் செய்யுறாங்க.

கணவர் என்ன வேலை செய்கிறார்?

முதல, பிக் பாக்கெட் அடிச்சுட்டு இருந்தாரு. இப்ப ரிக்ஷா வண்டி ஓட்டுறாரு.

எவ்வளவு சம்பாதிக்குறாரு?

தெரியாது. வாரத்துக்கு இரண்டு நாள் தான் வேலைக்கு போவார். அதுல வர காசையும் குடிச்சே அழிச்சுடுவாரு. செலவுக்குன்னு ஒரு ரூபா கூட கொடுக்க மாட்டாரு.

உங்களுக்குள் சண்டை வருமா?

அடிக்கடி வரும். குடிச்சுட்டு வந்து அடிப்பாரு. யாருக்காவது சாதகமாக பேசினா, சந்தேகப்பட்டு அடிப்பாரு. இங்க இருக்கிற எல்லா பொண்ணுங்க நிலைமையும் இது தான். அடிபட்டு சாகறதுக்கு பதிலா, கணவருடன் வாழாமல், யாரையாவது எடுத்துக்குறாங்க.மூணு, நாலு பேரை எடுத்துக்கிட்டவங்களும் உண்டு. ஆம்பளைகளும் அதே மாதிரி இருக்காங்க. இங்க இது சாதாரணமாக நடக்கும்.

வீட்டு செலவ எப்படி சமாளிக்குறீங்க?

பூ கட்டுறதுல, 100 ரூபா கிடைக்கும். பிராட்வே கடைகளில அட்டை பெட்டி, காகிதத்தை கொட்டுவாங்க. அதை எடுத்து விற்பேன். 150 ரூபா கிடைக்கும். அதுல தான் குடும்பத்த நடத்துறேன். பசங்க, நாலு நாள் வேலைக்கு போனா, நாலு மாசம் வேலைக்கு போக மாட்டா ங்க. என்ன பண்ணுறது என் தலையெழுத்து.

திட்டமிட்டு வாழறீங்களா?

இன்னைக்கு என்ன வேணுமோ அத வாங்கி சமைப்பேன். இல்லன்னா, ஓட்டலில் சாப்பிடுவோம். திட்டமிட்டு வாழறது பத்தி எல்லாம் தெரியாது.

எந்த முகவரி பயன்படுத்துவீங்க?

ரேஷன் கார்டு, அடையாள அட்டைன்னு எல்லாத்துக்கும் எதிரே உள்ள கடை அட்ரச தான் கொடுப்போம். கடையில விசாரிச்சுக்குவாங்க.

இங்க கஷ்டம் இருக்கா?

எந்த பொருளையும் வாங்கி வைக்க முடியாது. வீடு இருந்தா அழகா வைச்சு பாக்கலாம். இங்க ரோட்டுல தான் எல்லாத்தையும் வைக்க வேண்டி இருக்கு. இதனால, யாரு, வரா, போறான்னு ரோட்டையே பார்க்க வேண்டி இருக்கு. வீட்டுல இருந்தா, பூட்டிட்டு ஒரு வாரம் கூட வெளிய போயிட்டு வரலாம். ரோட்டுல இருக்குறதால வெளிய எங்கும் போக முடியாது.

வீட்டுல தங்க ஆசை இருக்கா?

யாருக்கு தான் வீட்டுல தங்க ஆசை இருக்காது. ஒரு தடவை, ரோட்டு வாழ்க்கையே வேணாம்ன்னு, வாடகை வீடுக்கு போனேன். ஆசாரமான வீடு. எங்க வீட்டுக்காரு அங்க குடிச்சுட்டு வந்துட்டாரு. அதுனால கோபத்துல, அவர வீட்டுக்குள்ளயே வச்சி பூட்டிட்டு வந்துட்டேன். அதோட வாடகை வீட்டுக்கு போறதயே வுட்டுட்டேன்.

கொடுக்குற வீட்டை வித்துடுறதா சொல்லுறாங்களே?

சூழ்நிலை தான் காரணம். சில பேர் வித்துடுறாங்க. கஷ்டம்ன்னு வாடகைக்கு விட்டுட்டு, இங்க நிறைய தங்குறாங்க. குடிச்சவங்க

கிட்ட கூட நிறைய பேர் வீட்டை எழுதி வாங்கியிருக்காங்க.

இதில சிரமமா இல்லையா?

அழாத நாளே இல்லை. ரோட்டுல, பிளாஸ்டிக் கட்டிட்டு பயந்துட்டே குளிக்கணும். உடம்பு சரியில்லைன்னாலும் நடுரோட்டில படுக்கணும். மழை வந்தா தூங்க இடம் இல்லாம, முழிச்சுட்டு இருக்கணும். இதை விட வேற என்ன கஷ்டம் இருக்கு. எனக்கு இங்க இருக்க புடிக்கலனா எங்கயாவது போயிடுவேன். ரொம்ப நாள் கழிச்சு தான் வருவேன். இந்த வாழ்க்கை வாழுறதுக்கு வாழாமலே இருக்கலாம்

No comments:

Post a Comment