மும்பை தாக்குதலுக்கு, சதி திட்டம் தீட்டி கொடுத்த, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், டேவிட் ஹெட்லி மற்றும் தகவுர் ராணா ஆகியோருக்கு, அமெரிக்க கோர்ட்டில், வரும், ஜனவரி மாதம் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.மும்பையில், 2008, நவம்பரில், தாக்குதல் நடத்திய, அஜ்மல் கசாப்புக்கு, சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்தவர், அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான ஹெட்லி; இவருடைய கூட்டாளி, தகவுர் ராணா.மும்பை தாக்குதலில் பலியான, 166 பேரில், ஆறு பேர் அமெரிக்கர்கள். பலியானவர்களின் உறவினர்கள், இது தொடர்பாக, அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அமெரிக்க போலீசார், சிகாகோ நகரில், ஹெட்லியையும், அவரது கூட்டாளி ராணாவையும் கைது செய்தனர்.
மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்ததை, ஹெட்லி ஒப்பு கொண்டதால், அவருக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டின், பத்திரிகை அலுவலகத்தை, வெடிகுண்டு வைத்து தகர்க்க, சதி செய்தது தொடர்பாக, ராணா மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம், 15ம் தேதி, ராணாவுக்கும், 17ம் தேதி, ஹெட்லிக்கும், சிகாகோ கோர்ட் தண்டனை அறிவிக்க உள்ளது.
No comments:
Post a Comment