பாபாஜி 1809 வது பிறந்த நாள் விழா வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு!
பரங்கிப்பேட்டையில் நேற்று பாபாஜியின் 1809வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பரங்கிப்பேட்டை சுங்க அலுவலகம் அருகே உள்ள பாபாஜி கோவிலில் ஆண்டுதோறும் பாபாஜியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு நேற்று நடந்த பாபாஜியின் 1809 வது பிறந்த நாள் விழாவையொட்டி பாபாஜிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. அதைதொடர்ந்து மதியம் 12 மணிக்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 3 மணிக்கு ஓம் கிரியா பாபாஜி நம ஓம் கிரியா யோகம் துவங்கி இன்று 30ம் தேதி அதிகாலை 3 மணிக்கு முடிவடைகிறது. பாபாஜியின் பிறந்த நாளையொட்டி மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் பரங்கிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment