சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jul 2015

மண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்!

துரங்கம் ஆட்டத்தை பற்றி நமக்கு தெரியும். இரு அணிகளுக்கும் ராஜா தலைமையில் ராணி, மந்திரிகள், சிப்பாய்கள் என 16 பேர் அடங்கிய படை. ராஜா, ராணி என ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இயங்குவார்கள் என இருவருக்கும் ஒரே மாதிரியான விதி. ஒரு படை இன்னொரு படையை தாக்கி, ராஜாவை சிறைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆட்டம். 

தாக்குதல் நடத்துவதும், அதில் இருந்து தற்காத்துக்கொள்வதும்தான் ஆட்டம் என்று நினைத்தால் நிச்சயம் நீங்கள் இதில் வெல்ல முடியாது. தந்திரமாய் சிப்பாயையோ அல்லது வேறு வீரரையோ தாக்கும்படி வாய்ப்பு ஏற்படுத்தித் தந்து, ஆசையை உருவாக்கி, அந்தப் படையை கவர்ந்திழுத்து, அதன் பின்னர் சுற்றிவளைத்து தாக்கி ராஜாவை சிறைபிடிக்க வேண்டும். அப்படியென்றால்தான் நீங்கள் வெல்ல முடியும். 

அதாவது ஆசை காட்டி, கவர்ந்திழுத்து தாக்க வேண்டும். சதுரங்கத்தில் உள்ள இந்த உளவியலை தீர்க்கமாய் அறிந்தவர்களுக்கு கொங்கு மண்டலத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்து வந்தது. கிடைத்தும் வருகிறது. இனியும் கிடைக்கக் கூடும். 
'மாட்டாத வரை எதுவும் தவறில்லை!'
இன்றைய சமூகத்தில் ஒருவர் கற்றவரா, பண்பாளரா என்பதையெல்லாம் தாண்டி அவர் செல்வந்தரா என்பது முக்கிய தகுதியாய் இருக்கிறது. செல்வந்தராக இருந்தால், அவர் எவ்வழியில் பொருளீட்டினார் என்பதெல்லாம் பார்க்கப்படுவதில்லை. மாட்டாமல் இருக்கும் வரை எதுவும் தவறில்லை என்பதுதான் பொதுவான கோட்பாடாக மாறிப்போனது. 

மந்திரிகுமாரியில் ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு. நாட்டை சூறையாடிவந்த கொள்ளையனை சிறையில் அடைத்திருப்பார்கள். அவனிடம் ராஜதந்திரியான அவனது தந்தை,  குற்றத்தை ஒப்புக்கொண்டு ராஜாவிடம்  விடுதலை பெறுமாறு அவனிடம் சொல்வார். அப்போது கொள்ளையனான அவரது மகன், கொக்கரிப்போடு சிரித்துவிட்டு,  'குற்றம்...எது குற்றம்? உங்களுக்குதான் அது குற்றம். எனக்கு அது கலை' என்பான் இறுமாப்பாக. 

நிஜத்தில் நடந்துகொண்டிருப்பது அதுதான். மாட்டிக்கொண்டால் குற்றம். மாட்டாத வரை அது ஒரு கலை, கொஞ்சம் முன்னேறி இன்று அதுவே சாமார்த்தியம் என்றாகிவிட்டது.
இந்தச் சூழல் பெரும்பாலானோர் உடனடி பணக்காரராகிவிட வேண்டும் என்றும், உழைக்காமல், குறுகிய காலத்தில் பணம் சேர்த்துவிட வேண்டும் எனவும் யோசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இப்படி எப்படியாவது பணம் ஈட்டிட வேண்டும் என நினைப்பவர்கள்தான் மோசடியாளர்களின் டார்கெட்.
சர்வசாதாரணமாய் இல்லாமல் இவர்களை ஏமாற்றுவது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அனைத்தும் மிக நூதனமானவை. இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா அல்லது இப்படியெல்லாம் ஏமாறுவார்களா என யோசிக்க வைப்பவை. ஆனால் அத்தனையும் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றது. லட்சங்களில் துவங்கி பல ஆயிரம் கோடி வரை மோசடிகள் சர்வ சாதாரணமாய் நிகழ்ந்த பகுதி என்றால் தமிழகத்தின் மேற்கு பகுதியான இந்த கொங்கு மண்டலம்தான். எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள், இந்த மோசடிகளின் நதி மூலம், ரிஷி மூலம் எல்லாம் என்ன என விவரித்தால்,  இப்படியெல்லாமா ஏமாந்தார்கள்? என்ற அதிர்ச்சி மேலோங்கும்.

ஆனால், அதே நேரத்தில் அடுத்த மோசடி சத்தமில்லாமல் துவங்கியிருக்கும். முந்தைய மோசடிக்கு அதிர்ச்சி தெரிவித்தவர், இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவராக இருப்பார். அப்படி விதவிதமாய் நடந்த மோசடிகளைதான் நாம் இந்தத் தொடரில் பார்க்க இருக்கிறோம்...
மோசடிகளின் துவக்கம் மண்ணுளிப் பாம்பு!
கொங்கு மண்டலத்தில் மோசடிகளின் துவக்கம் என்றால் அது மண்ணுளிப் பாம்புகள்தான். மண்ணுளிப் பாம்பு என்றால்கூட ஊரில் பலருக்கு தெரியாது. இரு தலை மணியன் என்றால்தான் பலருக்கு தெரியும். மண்புழு வகையைச் சேர்ந்த இந்த மண்ணுளிப் பாம்பை 2000-க்கு முன் யாரும் சீண்டியதுகூட இல்லை. 2000-க்குப் பின்னர் இதற்கு ஏற்பட்ட கிராக்கி எக்கச்சக்கம். ஒவ்வொரு பாம்பும் 50 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதெல்லாம் நடந்தது. ஒருவரை ஏமாற்றி பல லட்ச ரூபாய்க்கு விற்றதுதான் கொங்கு மோசடியின் துவக்கம்.


அதெப்படி யாரும் சீண்டாத மண்ணுளியை 50 லட்ச ரூபாய்க்கு ஏமாற்றி விற்க முடியும் என்கிறீர்களா? அதுதான் இதில் உள்ள ட்ரிக். இந்தப் பாம்பு அதற்கு நல்லது என்றும், இதற்கு நல்லது என்றும், இத்தனை லட்சத்துக்கு மண்ணுளிப் பாம்பை வாங்க ஆட்கள் தயாராக உள்ளார்கள் என்றும் ஊர் முழுவதும் முதலில் தகவல்கள் பரப்பப்பட்டன. 3 கிலோவுக்கு மேல் எடை இருந்தால் ஓரிரு லட்சம், அதுவே 5 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட மண்ணுளி என்றால் அதற்கு பல லட்சம் கிடைக்கும் என பரப்பப்பட்ட தகவல்கள் மக்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவியது. வேலையே செய்யாமல் பணக்காரராகி விட வேண்டும் என இருந்தவர்கள், பணக்காரராக இதுதான் வாய்ப்பு என மண்ணுளியைத் தேடி பயணம் போனார்கள். இன்னும் சிலர் வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு மண்ணுளிப் பாம்பைத் தேடத்துவங்கினர். அப்படி வந்ததுதான் மண்ணுளிக்கு வந்த கிராக்கி. இந்த கிராக்கிதான் அதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாத, பாம்பாக கூட மதிக்கப்படாத மண்ணுளி பல லட்சத்துக்கு விலை போகும் என நம்புவதற்கு காரணமாய் இருந்தது.
மண்ணுளி வாஸ்து பாம்பாம்!
சும்மா கிராக்கி உருவாக்கினா மட்டும் போதுமா? இத்தனை விலை கொடுத்து மண்ணுளிப் பாம்பை ஏன் வாங்கணும்? அதற்கும் விதவிதமாய் காரணங்கள் சொல்லப்பட்டது. அப்படி மண்ணுளிப் பாம்புக்கான டிமாண்டை ஏற்ற முதலில் சொல்லப்பட்ட காரணம்... அது வாஸ்துவுக்கு சிறந்தது என்பதுதான். 'இந்தப் பாம்பை வீட்டில் வளர்த்தால் வாஸ்து சாஸ்திரப்படி ராசி. இந்த பாம்பு இருக்கும் வீடுகளில் லட்சுமி குடியிருப்பாள்' எனச் சொல்லப்பட்டது. 'பொள்ளாச்சி பக்கத்துல விவசாயம் எல்லாம் ஒடிஞ்சு போய் இருந்தானே சுப்பிரமணி. இப்ப எப்படி நிலம், பங்களானு வாங்கி கோடீஸ்வரனா இருக்கான் தெரியுமா? காரணம் இந்த மண்ணுளிதான். வீட்டுல வாங்கி வளர்த்துட்டு வந்தான். ஆறே மாசத்துல பெரிய பணக்காரன் ஆயிட்டான்ல' இப்படி சில கதைகள் சொல்லப்படும். ஆம்... அந்தப் பாம்பால்தான் நான் கோடீஸ்வரன் ஆனேன் எனச் சொல்லவும் சிலர் இருப்பார்கள். இப்படி மெல்ல மெல்ல நம்பவைத்து முதலில் ஓரிரு லட்சங்களுக்கு விலை போனது.

பாம்பில் இருந்து வயாக்ரா?
இதில் கிடைத்த லாபம் குறைவு என்பதாலோ என்னவோ, அடுத்த காரணத்தைத் தேடினர் மோசடியாளர்கள். அதுதான் ஆண்மை பெருக்குவதற்கான மருந்து இதில் உள்ளது என்பது. வயாக்ரா போன்ற மாத்திரைகள் அறிமுகமான காலத்தில் அதுபோன்ற மாத்திரைகள் இந்தப் பாம்பின் மூலம்தான் தயாரிக்கப்பட்டு வந்ததாகச் சொல்லப்பட்டது. இந்தப் பாம்புக்கான தேவை வெளிநாடுகளில் மிக அதிகம் இருக்கிறது. இந்தப் பாம்பை சில லட்சங்கள் கொடுத்து வாங்கினால் கோடியில் விற்கலாம் என ஆசை வார்த்தை கூறப்பட்டது. வெளிநாடுகளில் இதன் தேவை இருப்பதை போன்று சூழலை இவர்களே உருவாக்கி, அதை நம்ப வைப்பார்கள். 'போன மாசம் தர்மபுரியில 4 கிலோ பாம்பு கிடைச்சது. அதை 10 லட்சத்துக்கு ஒருத்தர் வாங்கினார். ரெண்டு நாளுக்கு முன்னாடி இந்தப் பாம்பை செக் பண்ணி பாத்துட்டு ஒரு கோடிக்கு வாங்கிட்டாங்க. இந்த பாம்பு 5 கிலோ இருக்கு. விலை 15 லட்சம்தான். ஒரு மாசம் வீட்டுல வெச்சு பாத்துகிட்டீங்கனா எப்படியும் ஒன்றரை கோடிக்கு விலைக்குப் போகும். அதுக்கு நான் கியாரண்டி. ஆனா, எடை குறையாமா பாத்துக்கோங்க" என்பார்கள். நான் பாம்பை வாங்கிக்கறேன்னு சில போன் அடுத்தடுத்து வரும். இதெல்லாம் புரோக்கர்களால் உருவாக்கப்படும்.

எய்ட்ஸ்க்கு இதுதான் மருந்தாம்!
இதுவும் கொஞ்சம் ஓய்ந்த பின்னர், மண்ணுளிப் பாம்புக்கான டிமாண்டை உருவாக்க அடுத்து சொல்லப்பட்ட காரணம்... இந்தப் பாம்பில் இருந்து எடுக்கப்படும் மருந்துதான் எய்ட்ஸ் மற்றும் கேன்சருக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். இதனால், மண்ணுளிப் பாம்பின் விலை தாறுமாறாக நிர்ணயிக்கப்பட்டது. 
"எய்ட்ஸ் நோய், கேன்சர் நோய் தாக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை அணுக்களோட செயல்பாடு ரொம்ப குறைஞ்சுடும். இதனால் சீக்கிரம் சாக வாய்ப்பிருக்கு. இந்த மண்ணுளிப் பாம்புல வெள்ளை அணுக்கள் நிறைய இருக்கு. 5 கிலோ எடைக்கு மேல இருக்குற பாம்புகள்லதான் இந்த வெள்ளை அணுக்கள் அதிகம் இருக்கும். இதனாலதான் இந்தப் பாம்புக்கு ஏக கிராக்கி. 

கோடிக்கணக்குல விலை கொடுத்து வாங்க ஆள் ரெடியா இருக்கு. குறைஞ்ச விலையில உங்களுக்கு கிடைச்சிருக்கு. வாங்கி கை மாத்தி விட்டா 10 மடங்கு லாபம் கிடைக்கும். நீங்களே முடிவு பண்ணிக்கோங்க" என ஆசையைத் தூண்டி விட்டு இந்த பிசினஸ் நடக்கிறது.
யாரை ஏமாற்றுவார்கள்?
இதற்கான ஆளை தேர்வு செய்வதுதான் மிகப்பெரிய வேலை. ஒரு ஊரில் யார் உழைக்காமல் கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள்தான் இவர்கள் டார்கெட். அவர்களிடம் ஓரளவு பணம் இருக்க வேண்டும், புத்திசாலித்தனமாக யோசிக்கக் கூடாது. எளிதில் ஆசை காட்டி கவர்ந்திழுத்திருக்கக் கூடியவராக இருக்க வேண்டும். இப்படி ஒருவரைத் தேர்வு செய்துவிட்டால், அவரைச் சுற்றி மண்ணுளி பாம்புக்கு ஏக கிராக்கி உள்ளதை போன்று காட்சிகள் உருவாக்கப்படும். அவரிடமோ, அவர் அருகில் இருக்கும்போதோ 'மண்ணுளிப் பாம்பு கிடைச்சா பல லட்சத்துக்கு விலை போகுதாம். பக்கத்து ஊர்ல கூட நடராஜ் இப்படிதான் பல லட்சம் சம்பாதிச்சு புது வீடு வாங்கிட்டான்' எனச் சிலர் திரும்பத் திரும்ப பேசுவார்கள். அதன் பின்னர், 'மண்ணுளிப் பாம்பு ஒண்ணு இருக்கு. ஒரு மாசம் வெச்சு கை மாத்தி விட்டா பல லட்சம் கிடைக்கும். யாராவது ஆள் இருக்காங்களா?'னு அவர்கிட்டயே கேப்பாங்க. அப்புறம் என்ன..? அவரிடம் சில லட்சங்களுக்கு மண்ணுளி விற்கப்படும். ஆனால், பின்னாளில் பாம்பின் எடை குறைந்துவிட்டது எனச் சொல்லியோ வேறு காரணங்களைச் சொல்லியோ அவர் ஏமாற்றப்படுவார்.
இந்த மோசடியில் மூன்று தரப்பினர் சிக்கலுக்கு உள்ளாகின்றனர். லாபம் அடைவது புரோக்கர் மட்டும்தான். அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண மக்கள். மண்ணுளிப் பாம்பு கிடைத்தால் பல லட்சம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட தகவலை நம்பி, வேலை வெட்டியை விட்டு மண்ணுளிப் பாம்பைத் தேடி சுற்றித்திரியும் மக்கள். காடுகளில் தேடி கஷ்டப்பட்டு மண்ணுளிப் பாம்பைப் பிடித்தவர்கள் சிலர், வனத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு. அப்படியே பாம்பு பிடித்து வந்தாலும் 'இது 3 கிலோவுக்கும் குறைவா இருக்கு. எதுக்கும் அதை கொஞ்ச நாள் வெச்சு வளர்த்துட்டு வா. 4 கிலோ ஆனா கூட வித்துடலாம்' எனச் சொல்லி அவர்களை ஏமாற்றினர். இவர்கள் பணத்தை இழக்காவிட்டாலும் பாம்பைத் தேடியும், பாம்பைப் பற்றி பேசியுமே இவர்களின் காலம் கழிந்துவிடும்.
இரண்டாவதாக பாதிக்கப்பட்டவர்கள், சிறிய முதலீடைக் கொண்டு பெரிய லாபம் அடைந்துவிடலாம் என எண்ணிய நடுத்தர வர்த்தகத்தினர். சிறிய கடைகளை நடத்தி, சிறு விவசாயிகளாக இருந்து மண்ணுளிப் பாம்பைக் கைமாற்றினால் பல லட்சம் கிடைக்கும் என எண்ணி ஓரிரு லட்சங்கள் கொடுத்து வாங்கியவர்கள். 'அட பாம்பு வெயிட் குறைஞ்சிடுச்சு. நல்ல நேந்திரம் பழமா வாங்கி போடுங்க. போட்டுட்டு அங்க நிக்காதீங்க. நீங்க பார்த்தா பாம்பு பழத்தை சாப்பிடாது' என ஏகப்பட்ட விதிமுறைகளைச் சொல்லி, மாதக்கணக்கில் பாம்புக்குப் பழம் வாங்கிப் போட்டு, தான் சாப்பிட மறந்துபோன இவர்கள், நாம் ஏமாற்றப்பட்டதை யாரிடமும் சொல்ல முடியாமல், அந்தப் பாம்பை என்ன செய்வது எனத் தெரியாமல், யாருக்கும் தெரியாமல் அதை வெளியே வீசிச் சென்ற பரிதாபமும் உண்டு.
மூன்றாவதுதான் செல்வந்தர்கள். 'இந்தப் பாம்பு இருக்கும் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும். உங்களுக்குச் சாதகமான சூழல் உருவாகும்' எனச் சொல்லியதில் வந்து விழுந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கம். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர்களும் கொங்கு மண்டல மோசடியில் சிக்கியது இப்படித்தான். இது ஆண்மைக்கு நல்லது, கேன்சருக்கு மருந்து போன்றவற்றை சொல்லியும் செல்வந்தர்கள் ஏமாற்றப்பட்டனர். எய்ட்ஸ், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள், உயிர் மேல் உள்ள பயத்தில் பணத்தைப் பற்றி கவலைப்படாமல், அதுவரை அருவெருப்புடன் நாம் ஒதுக்கித் தள்ளிய இருதலை மணியன் எனும் மண்ணுளிப் பாம்பை ஆசையாய் வாங்கிச் சென்று வளர்த்தனர்.
இதெல்லாம் உண்மையா?
மண்ணுளிப் பாம்பை மையப்படுத்திய இந்த தகவல்கள் எந்தளவுக்கு உண்மை?

மருத்துவர்கள் உள்ளிட்ட சில நிபுணர்களிடம் பேசினோம். அவர்களின் பதில்... அனைத்துமே பொய் என்பதுதான். "மண்ணுளிப் பாம்பு, மண்புழு குடும்பத்தைச் சேர்ந்தது. அது மண்ணில் இருப்பது, மண் வளத்தை பாதுகாக்கும். அதை வாஸ்து பாம்பு எனச் சொல்லி வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பது நல்லதல்ல. அதனால் எந்தப் பலனும் நிச்சயம் கிடைக்காது.
இரண்டாவது இது ஆண்மைக்கான மருந்தெல்லாம் கிடையாது. ஏற்கெனவே கடல் ஆமைகளில் ஒரு வகை ஆமையை விரும்பி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்று ஒரு வதந்தி பரவியது. அப்போது கடல் ஆமைகளுக்கு பெரிய டிமாண்ட் ஏற்பட்டது. அதில் உண்மை ஏதும் இல்லை. அது போன்றதுதான் இதுவும். மண்ணுளிப் பாம்பில் இருந்து மருந்து எதுவும் எடுத்ததாக தகவல் இல்லை.  அதேபோல் எய்ட்ஸ் மற்றும் கேன்சருக்கு இதுவரை உரிய மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. அதற்கான ஆய்வுகள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


மண்ணுளி பாம்பில் இருந்து வெள்ளை அணுக்கள் எடுக்கப்பட்டு எய்ட்ஸ், கேன்சர் தாக்கியவர்களுக்கு செலுத்தப்படுவதாக கூறுப்படுவது முற்றிலும் பொய். மக்களை ஏமாற்றிட, மண்ணுளி பாம்பு அணுக்கள் மூலம் இந்த நோய்களை குணப்படுத்திடலாம் என வதந்தியைப் பரப்புகிறார்கள்" எனச் சொன்னார்கள்.
ஆனால் இன்றும் தொடர்ந்து வருகிறது இந்த மண்ணுளிப் பாம்பு மோசடி. இப்போதும் மண்ணுளிப் பாம்பைத் தேடித்திரிபவர்கள் இருக்கிறார்கள். நட்சத்திர ஹோட்டல்களில் மண்ணுளிப் பாம்பை வைத்து பேரம் நடக்கிறது. புதிய புதிய ஆட்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
2000-ம் ஆண்டின் துவக்கத்தில் மண்ணுளிப் பாம்பை வாங்கி கைமாற்றிவிட நினைத்து ஏமாந்தவர்களில் ஒருவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன். பாம்பின் எடை குறைந்ததால் லட்சாதிபதி ஆகும் வாய்ப்பை இழந்துவிட்டதாக இன்றும் நம்புபவர். 'நமக்கு மண்ணுளி பாம்பு ராசியில்லை' என இதில் இருந்து ஒதுங்கியவர், ஆபத்தில் இருந்து தப்பி ஆற்றில் விழுந்த கதையாக இன்னொரு பிரச்னையில் சிக்கிக்கொண்டார். 

அது... நாகமாணிக்கக் கல் மோசடி. "யாரையுமே கடிக்காத ராஜ நாகத்தோட விஷம் கெட்டிப்பட்டு இறுகிடும். அது ஒரு மாணிக்கமா மாறும். அதுதான் நாகமாணிக்கம். அமாவாசை இரவுல அந்த ராஜநாகம் மாணிக்கத்தைத் துப்பி அந்த வெளிச்சத்துல ஆடும். அந்தப் பாம்புக்குத் தெரியாம மாட்டுச் சாணியால மூடி நாகமாணிக்கத்தை எடுத்து வந்தா லட்சக்கணக்குல கிடைக்கும்" என யாரோ சொன்னதை நம்பி, நாகமாணிக்கக் கல்லைத் தேடி அலைந்தார்.
அதென்ன நாகமாணிக்கக் கல் மோசடி என்கிறீர்களா? அதை அடுத்த மாதம்  விரிவா பார்க்கலாம்...

ராஜா சாண்டோ - தமிழ் சினிமா முன்னோடி

பி.கே.ராஜா சாண்டோ- வட இந்தியாவில் கோலோச்சிய முதல் தமிழக கலைஞர்

க்காலத்தில் திரைப்பட தயாரிப்புகளுக்கு முக்கிய கேந்திரமாக சென்னை விளங்கியது. இந்திய அளவில் புகழ்பெற்றிருந்த கலைஞர் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னையில் முகாமிட்டு தங்கள் படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக பம்பாயும், கல்கத்தாவும்  சினிமா தயாரிப்புகளுக்கு உகந்ததாக விளங்கியது. திரைப்பட தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப காரணங்களுக்காக பம்பாய், கல்கத்தா என அக்காலத்தில் கலைஞர்கள் உழலவேண்டியிருந்தது. அப்படி பம்பாய் செல்லும் தமிழக கலைஞர்களுக்கு நெருடலான ஒரு விஷயம் உண்டு. அது அங்குள்ளவர்கள் அவர்களை "சாலா மதராஸி" என அழைத்து கேலி செய்வது. தமிழர்கள் என்றால் அத்தனை இளக்காரம் பம்பாய் ஸ்டுடியோவாசிகளுக்கு.

மும்பைவாசிகளின் இந்த கேலி வார்த்தை சென்னையிலிருந்து செல்பவர்களை மிகுந்த எரிச்சலாக்கும். ஒருமுறை தமிழக கலைஞர் ஒருவர், மும்பைவாசி ஒருவரால் இப்படி அவமானப் பட்டதை நேரில் கண்டார் ஒரு மனிதர். குஸ்திக்கலைஞரும் விளையாட்டு வீரருமான அந்த மனிதர்,  கிண்டல் செய்த அந்த மும்பைவாசிக்கு தன் பாணியில் பதில்கொடுத்துவிட்டு, உக்கிரமான குரலில்,  “ பம்பாய் ஸ்டியோகாரர்கள் இனி 'சாலா மதராஸி' என்று தமிழன் எவனையும் பார்த்து விளிக்கக் கூடாது” என்றார். அன்றோடு சென்னைவாசிகளை கேலி செய்வது நின்றுபோனது. அதன்பின் தமிழக  கலைஞர்களுக்கு பம்பாயில் உரிய மரியாதை கிடைத்தது. 

தமிழருக்கு நேர்ந்த அவமானத்தை போக்கி மரியாதை கிடைக்கச் செய்த அந்த மனிதர் வேறு யாருமல்ல.....ராஜா சாண்டோ


சிறந்த டைரக்டர், திறமையான நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் விளங்கி,  வட இந்தியாவில் தமது திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுப் பெற்ற முதல் தமிழர். ஊமைப்படங்களிலும்,  பேசும் படங்களிலும் சிறப்பாக நடித்து புகழ்பெற்றவர். 

சிறந்த விளையாட்டு வீரராகவும், குஸ்தி சாம்பியனாகவும் விளங்கிய ராஜா சாண்டோ, 1895 ம் வருடம் பொள்ளாச்சியில் பிறந்தார். இவரது நிஜப்பெயர் நாகலிங்கம். டைரக்டராகவும், சிறந்த வசனகர்த்தாவாகவும் பன்முக ஆற்றலுடன் விளங்கிய ராஜா சாண்டோ, 1915 -ல் தம் இருபது வயதில் சென்னை வந்தார். தேகப் பயிற்சி காட்சிகளை வட சென்னையில் சில காலம் நடத்தினார். சென்னை ஒற்றை வாடை  தியேட்டரில் தனது அற்புதமான தேகப்பயிற்சி காட்சிகளை நடத்தி, மிக பிரபலமாக விளங்கினார்.
சென்னை மட்டுமின்றி நாகப்பட்டணம், தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும் அவரது காட்சிகள் நடந்தன.

ஒருமுறை கொல்லங்கோடு அரண்மனைக்குச் சென்ற சாண்டோ,  அங்கு விஜயம் செய்திருந்த பரோடா மன்னருக்கு தேகப் பயிற்சி காட்சிகளை நடத்திக் காட்டினார். சிறிய வயதில் அவரது திறமையை பாராட்டிய மன்னர், ஆயிரம் ரூபாய் சன்மானமாக கொடுத்து சாண்டோவை கவுரவித்தார். 1000 ரூபாய் என்பது அக்காலத்தில் பல லட்சங்களுக்கு சமம். பின்னர் மங்களூரில் சில காலம் தேகப்பயிற்சிகளை நடத்தினார். 

தம் இருபதாவது வயதில் பம்பாய் வந்த சாண்டோ, பிரபலமான நேஷனல் பிலிம் கம்பெனியில் சேர்ந்தார். இந்த நிறுவனம் 'பக்தபோதனா" என்ற மௌனப்படத்தை தயாரித்தது. இதில் ரூ.101 சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தார். இதுதான் ராஜா சாண்டோ நடித்த முதல் திரைப்படம்.
"வீர பீம்சிங்" படத்தில் இவரே வீரன் பீம்சிங்காக நடித்தார். பிறகு கோஹினூர் பிலிம் ஸில் சேர்ந்து அதன் தயாரிப்புகளிலும் கதாநாயகனாக நடித்தார். பம்பாய் லட்சுமி பிலிம்சுக்காக இவர் பல படங்களைத் தயாரித்தார். ''தேவதாசி", "பஞ்ச தண்டா", "மீரா" ஆகிய  படங்களில், அந்நாளில் புகழ்பெற்ற நடிகைகளான சுபைதா, புட்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

'சதி மாதுரி", "இடையர் மன்னன்", "ஞான சவுந்தரி", "டைபிஸ்ட் பெண்", "மும்தாஜ் மகால்", "படித்த மனைவி", "மனோரமா" ஆகிய கோஹினூர் பிலிம் கம்பெனியின் படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தன. சந்த்லால்ஷாவின் டைரக்‌ஷனில் இவர் ''விசுவமோகினி", "கிருகலட்சுமி", "சந்திரமுகி", "ராஜ லட்சுமி" ஆகிய படங்களில் கோஹர் என்ற புகழ்மிக்க நடிகையோடு நடித்தார். ரஞ்சித் பிலிம் கம்பெனியார் தயாரித்த பல படங்களில் கதாநாயகனாக ராஜா சாண்டோ நடித்தார். அவற்றில் "பாரிஸ்டரின் மனைவி"  பெரிதும் பேசப்பட்டது. 

"பேயும் பெண்ணும்", "அனாதைப் பெண்", 'கருந்திருடன்", "ராஜேசுவரி", ஆகிய படங்களை இயக்கிய சாண்டோ, அப்படங்களில் நடிக்கவும் செய்தார். இவை சென்னை அசோஸியேடட் பிக்சர்ஸார் தயாரித்த ஊமைப் படங்களாகும். "மேனகா" "விஷ்ணு லீலா" "சந்திரகாந்தா", "திருநீலகண்டர்" முதலிய தமிழ்ப் பேசும் படங்களையும் டைரக்ட் செய்தார். 

ஊமைப்பட காலம் எனப்பட்ட அந்நாளில், சலனப்படங்களின் டைட்டில் கார்டில், படத்தை தயாரித்த கம்பெனியின் பெயரும், அதை இயக்கிய டைரக்டர் பெயரும்தான் காட்டப்பட்டு வந்தன.
ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குகிற நடிக, நடிகைகள் இப்படி புறக்கணிக்கப்படுவது ராஜாசாண்டாவுக்கு எரிச்சலை தந்தது. தன் ஒரு படத்தில்,  அதன் தயாரிப்பாளரான பம்பாய் முதலாளியோடு இதுகுறித்து வாதித்து போராடி, அந்த படத்தின் டைட்டில் கார்டில் நடிக, நடிகைகளை பெயர்களை இடம்பெறச் செய்தார். அதைத்தொடர்ந்து இந்திய மொழிப்படங்களில் நடிக, நடிகையர் பெயர் தவறாமல் இடம்பெற ஆரம்பித்தன. இப்படி தன் சக கலைஞர்களின் மீது அளவற்ற அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார் சாண்டோ. 

பம்பாய், ரஞ்சித் பிலிம் கம்பெனியில் சேர்ந்து திரையுலகில் தீவிரமாக இயங்கிவந்த சாண்டோ, அங்கு திரையுலகின் நுணுக்கங்களை நன்கு அறிந்துகொண்டார். தன் திறமையையும் ,அனுபவங்களையும் கொண்டு,  ஆரம்ப நிலையிலிருந்த தமிழ்ப் பேசும் படத்துறையை வளர்த்தெடுக்க ராஜா சாண்டோ விரும்பினார். 1931-ம் ஆண்டு வெளிவந்த முதல் தென்னக சினிமாவான 'காளிதாஸ்", முழுமையான ஒரு தமிழ் படமாய் அமையவில்லை என்ற எண்ணம் அவர் மனதில் உறுத்திக்கொண்டிருந்ததே அதற்கு காரணம். 

பரிசோதனை ரீதியில் எடுக்கப்பட்ட ஒரு பன்மொழித் தொகுப்பாக அப்படம் உருவாகியிருந்தது. சென்னை வந்த ராஜா சாண்டோ, தமிழில் சில படங்களை டைரக்ட் செய்தார்.

நாற்பதுகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் "சவுக்கடி சந்திரகாந்தா". அதில் பண்டார சந்நதியாக நடித்தவர் காளி என்.ரத்தினம். பண்டார சந்நதிக்கு பல ஆசை நாயகிகள் இருந்தனர். அதில் ஒருத்தி ஆங்கில அழகி. அவளுக்கு தமிழ் தெரியாது. காளி என்.ரத்னத்திற்கோ ஆங்கிலம் தெரியாது. அவள் தமிழ்ப் பேச்சு புரியாமல் "ஓ காட்" என்று தலையில் அடித்துக் கொள்கிறாள். காளி என். ரத்னம், ஆள் பேசுவது புரியாமல் 'பாவம், தலைவலி போலிருக்கிறது' என்று நினைத்து "அமிர்தாஞ்சனம் வேண்டுமா",  நெற்றியில் தேய்த்துவிடவா?" என்கிறார். அர்த்தம் புரியாமல் பேசும் அவரைப் பார்த்து,  அவள் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும். இது அன்றைய காட்சி.

படமாக்கும் போது அந்த நடிகைக்கு சிரிக்கவே வரவில்லை. டைரக்டர் ராஜா சாண்டோ எவ்வளவு விளக்கியும் பயன் ஏற்படவில்லை. அவர் திடீரென்று ஏதோ நினைத்தவராய், "ரெடி, ஸ்டார்ட்" என்றவர், காமிராவுக்குப் பின்னால் நின்றபடி தன் கால் செருப்புகளை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு "தை தை" என்று கூத்தாடினார். இதைப் பார்த்த அந்த ஆங்கில அழகி கை கொட்டிச் சிரித்தாள். அந்தக் காட்சி சிறப்பாகப் படமாக்கப்பட்டது. அந்தப் படத்தில் குண்டூர் இளவரசராக நடித்தவர் பி.யு.சின்னப்பா.

"இப்படித்தான் என் குருநாதர் டைரக்டர் ராஜா சாண்டோ அவர்கள் நடிக்கத் தெரியாதவர்களையும் தனது சமயோசித யுக்தியால் சிறப்பாக நடிக்க வைத்து விடுவார். அவர் ஒரு பிறவி மேதை" என்று புகழ்ந்து பேசினார் நடிகர் பி.யு.சின்னப்பா. டைரக்டர் ராஜா சாண்டோ படமாக்கும் பாங்கும், நடிக, நடிகைகளிடம் பழகும் பண்பும் எல்லோராலும் பாராட்டப்பட்ட காலம் அது.  இருவருமே குஸ்தி, சிலம்பம் போன்ற வீர விளையாட்டுக்களில் தீரர்கள். திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள்.
பின்னர்,  துவாரகாதாஸ் நாராயணதாஸின் கோஹினூர் பிலிம் கம்பெனியில் ஒப்பந்தம் செய்துகொண்டு,  கம்பெனி படங்களில் நடித்தார். சில காலம் சென்ற பின் "மெஜஸ்டிக் பிலிம்" கம்பெனியாரின் படமான "ரஷியாபேகம்" என்ற மௌனப் படத்தில் நடித்தார். 'எக்பால்' என்ற கதாநாயகியுடன் "இரவு லீலைகள்" (Midnight Romance) என்ற படத்தில் கதாநாயகனாக ராஜா சாண்டோ நடித்தார். 

படப்படிப்பு தளங்களில் ராஜா சாண்டோ ஒரு கறாரான மனிதர். தான் விரும்பியபடி காட்சி சிறப்பாக வரும் வரையிலும் நடிகர்களை உண்டு இல்லையென்று செய்துவிடுவார். அந்த சமயங்களில் அவர்கள் ராஜா மீது கடும் எரிச்சல் அடைவார்கள். ஆனால் காட்சி திரையில் வரும்போது அவர்கள் ராஜா சாண்டோவின் திறமையை எண்ணி வியப்பிலாழ்ந்துவிடுவர். 
இந்த காரணங்களால் பி.யு சின்னப்பா மட்டுமின்றி மக்கள் திலகம் எம்.ஜி. ஆரும் அவரை தன் குரு என போற்றினார். என் திரைப்படங்கள் ராஜா சாண்டோ பாணியை பின்பற்றியது என ஒருமுறை குறிப்பிட்டார் எம்.ஜி. ஆர். 

சாண்டோ அவருக்கு மிகவும் பிடித்தமான டைரக்டர், நடிகர், தயாரிப்பாளர். சாண்டோவை அவரது ஒவ்வொரு கோணத்திலும் ரசித்து சிலாகித்தவர் எம்.ஜி.ஆர்.

தமிழ்சினிமாவிற்கு பெரும்பங்களிப்பு செய்த சாண்டோவிற்கு,  நாடகங்கள் பிடிக்காது என்பது ஆச்சர்யமான தகவல். புராதன, இதிகாச கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு அரதப்பழசான விஷயங்களை முன்னிறுத்துவதாக கருதிய அவர்,  திரும்ப திரும்ப அத்தகைய தகவல்களை காட்சிகளாக்குவதை வெறுத்தார். சமூக படங்களின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், புராண நாடகங்களின் மீது எரிச்சலை ஏற்படுத்தியது. 

ஒருமுறை பிரபல நாடக கலைஞர் எஸ். ஜி. கிட்டப்பா இவரை சந்திக்க அனுமதி கேட்டு,  நாடக நடிகர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சந்திக்க மறுத்தார் என்ற தகவல் சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு நாடகங்களின் மீது வெறுப்பு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்திய திரையுலகிற்கு ராஜா சாண்டோ பங்களிப்பு செய்த மேலும் பல படங்கள்...

(மௌனப் படங்கள்)

1. பக்த போதனா 
2. வீர பீம்சேனன்
3. விஷ்வ மோகினி
4.கிருஹலஷ்மி
5. ரஷிய கேர்ள்ஸ்
6. அபிசீனிய அடிமை
7. கிருஷ்ணகுமாரி
8. சாம்ராட் சிலதித்யா
9. மைனாகுமாரி
10. படித்த மனைவி
11. குணசுந்தரி
12. வீரகுணாளன் 
13. தேவதாசி 
14.காலாசோர்
15. நீரா
16. நாகபத்மினி
17.வீர பத்மினி
18.இரவு காதல்
19.பேயும் பெண்ணும் (1930)
20. நந்தனார்
21.ஹிந்துஸ்தானின் பெருமை
22.ராஜேஸ்வரி
23.அனாதைப்பெண்
24.உஷாசுந்தரி
25.பக்தவத்சலா 1931 (தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட படம்)

இந்தி மொழியில் பங்கேற்ற பேசும் படங்கள்..
1.இந்திரா
2. காலேஜ் கேர்ள்
3. பாரிஸ்டர் வைஃப்
4. மத்லபி துனியா
5. தேவகி

ராஜா டைரக்ட் செய்த தமிழ் படங்கள் 


1. பாரிஜாத புஷ்பஹாரம் (1932,இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார்)
2.  மேனகா (1935)
3. வசந்த சேனா (1936, இப்படத்திற்கு வசனம் எழுதி நடித்தும் உள்ளார்)
4. மைனர் ராஜாமணி (1937)
5. சந்திரகாந்தா (1936)
6. விஷ்ணுலீலா (1938)
7. நந்தகுமார் (1938, இதில் நடித்துள்ளார்)
8. திருநீலகண்டர் (1939)
9. ஆராய்ச்சி மணி (1942)
இதுமட்டுமின்றி இந்திய திரையுலகிற்கு ராஜா சாண்டோ  பங்களிப்பு செய்த படங்கள் என 1994 ல் வெளியான சினிமா பற்றிய என்சைக்ளோபிடீயா, ராஜாவின் படங்களின் எண்ணிக்கையை 56 எனக் குறிப்பிட்டுள்ளது. அதன் விபரங்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மேனகா படத்திற்கு சில சிறப்புகள் உண்டு. நகைச்சுவை மேதை கலைவாணர் இதில்தான் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். கே.ஆர் இராமசாமி இதில் சிறிய வேடத்தில் அறிமுகமானார். டி.கே.எஸ் சகோதரர்கள் நடித்த இந்த படத்தின் கதை  சுவாரஸ்யமானது.

மேனகா படத்தின் கதை இதுதான். டெபுடி கலெக்டர் சாம்பசிவ ஐயங்காரின் மகள் மேனகா. வக்கீல் வராகசாமியை மணந்த மேனகா, புகுந்த வீட்டில் பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள். வராகசாமியின் சகோதரிகள் மேனகாவைக் கொடுமைப் படுத்தியதுடன், வராகசாமிக்கு மறுமணம் செய்விக்கும்  நோக்கத்தில், மேனகாவை நைனா முகமது என்பவனுக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு சாமா என்பவன் உதவி செய்கிறான்.

வஞ்சிக்கப்பட்ட மேனகாவை நைனா முகமது பலாத்காரம் செய்ய முயலும்போது, தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். அப்போது நைனா முகமதுவின் மனைவி நூர்ஜஹானால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள்.

இதற்கிடையில் மேனகா, ஒரு நடிகனுடன் ஓடிப் போய் விட்டதாக, வராகசாமியின் சகோதரிகளும், சாமாவும் கதை கட்டி விட, அதை வராகசாமியும் நம்பி விடுகிறான்.

ஒருதடவை நூர்ஜஹானுடன் மேனகா காரில் சென்று கொண்டிருக்கும்போது, வராகசாமி பார்த்து விடுகிறான். தன்னை ஏமாற்றிய அவளைக் கொல்வதற்காக, பின்தொடரும்போது, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். மருத்துவ மனையில் மேனகா நர்ஸ் வேடத்தில் கணவனுக்குப் பணிவிடை செய்கிறாள். இறுதியில் உண்மை தெரிய வர, வராகசாமியும், மேனகாவும் ஒன்று சேர்வதாக கதை முடிகிறது.
ராஜா சாண்டோவின் இயக்கத்தில், அந்த ஆண்டில் வெளியான படங்களில் வெற்றிகரமான படமாக ஓடிய படம் என்ற பெருமையை "மேனகா"  பெற்றது.  பிற்காலத்தில் கலைவாணர் எனப் புகழ்பெற்ற என்.எஸ்.கே. யின் திரையுலகப் பிரவேசம் மேனகாவின் மூலம்தான் நடந்தது. 

இந்தப் படத்தில் டி.கே.எஸ். சகோதரர்கள் நான்குபேருமே நடித்தனர். மேனகாவின் தந்தை சாம்பசிவ ஐயங்காராக டி.கே.சங்கரன் நடித்தார். பெருந்தேவி என்னும் விதவைப் பெண் வேடத்தில் வேடப்பொருத்தத்துடன் டி.கே. முத்துசாமி தோன்றி பாராட்டுப் பெற்றார்.
பெண்கள் கூச்சப்பட்டு நடிக்க முன்வராத அந்தக் காலத்தில், நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கும் முறையைப் பின்பற்றி டி.கே.சண்முகத்தின் சகோதரர் முத்துசாமி தலையை மழித்து விதவைப் பெண் வேடமிட்டு நடித்தார். அதேபோல வேலைக்கார ரங்கராஜனின் மனைவி மற்றும் மகள் வேடங்களிலும் முறையே டி.என். சுப்பையா, பி.எஸ்.திவாகரன் என்ற ஆண்களே நடித்தனர் என்பதும், அவ்வை சண்முகி போன்ற வேடங்களுக்கு இதுவே முன்னோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படமான முதல் நாவல் என்பதுடன், முதல் சமூகத் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் “மேனகா" பெற்றது.  

அந்நாளில் புகழ்பெற்ற நடிகரும், சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான தியாகராஜ பாகவதர் நடிப்பில் உருவான "சிவகவி" படத்தின் டைரக்‌ஷன் பொறுப்பை ஏற்றார். ஒப்பந்தப்படி படத்தினை இயக்கிவந்த சாண்டோ, படத் தயாரிப்பில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக பாதியிலே விட்டு விலகினார். பின் கோவையில் சிலகாலம் தங்கியிருந்தார். 

தமிழ்சினிமாவின் அந்நாளைய சாபக்கேடுக்கு  ராஜாவும் தப்பவில்லை. சம்பாதித்த எதையும் சேமித்துவைக்கும் பழக்கம் இல்லாத ராஜா,  தம் இறுதிக்காலத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தார். நெருங்கிய நண்பர்கள் உதவியால் ஓரளவு சமாளித்தாலும், அவர் அல்லல்படும் அளவுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது.
ராஜா சாண்டோ,  தன் மனைவி ஜானகி பாய் பெயரில் ஜானகி பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தையும் துவங்கி ஒரிரு தமிழ்ப்படங்களை துவக்கியதாக குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அது பாதி தயாரிப்புடன் நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது.

1942 ஆம் ஆண்டு,  ராஜா சாண்டோ ஒரு விநோத நோயால் பாதிக்கப்பட்டார். அவரது உடலில் முதுகுப் பகுதியில் ஒரு கட்டி உருவாகி அவருக்கு தொந்தரவு அளித்தது. இதை எடுக்க அவர் புகழ்பெற்ற மருத்துவமனையை அணுகினார். ஆபரேஷன் செய்யப்பட்டது. அதற்கான செலவை நண்பர்கள் உதவியுடன் செலுத்தினார். இருப்பினும் அதே இடத்தில் அடுத்தடுத்து கட்டிகள் உருவாகி தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 
இந்த முறை அவரது நண்பர்கள் உஷாரானார்கள். ராஜா உடல்நிலை முன்போல இல்லை. அவருக்கு  செலவிடும் பணம் திரும்ப வராது என அவர்கள் முடிவெடுத்தனரோ என்னவோ, சத்தமில்லாமல் விலகிக்கொண்டனர். மருத்துவரும் அவர் தன் இறுதிக்காலத்தை நெருங்கிவிட்டதாகவே ராஜாவின் மனைவி ஜானகியிடம் தெரிவித்தனர். 

ஆனால் உடல் வலிமை மட்டுமின்றி, மனவலிமையும் அதிகம் பெற்றவரான ராஜா, அதிலிருந்து அதிசயமாக மீண்டார். சகஜமாகி உலவத் துவங்கினார்.  சில காலம் அதிக உற்சாகத்துடன் காலம் கழித்த ராஜா, திடீர் மாரடைப்பு காரணமாக 1943 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி கோவையில் மரணமடைந்தார். தமிழில் ராஜா சாண்டோ கடைசியாக டைரக்ட் செய்த படம் "ஆராய்ச்சிமணி". 

அதீதி திறமையால், வட இந்தியாவில் கோலோச்சிய தமிழகத்தின் முதல் கலைஞனான ராஜா சாண்டோவின் சினிமா சேவையைப் போற்றும் வகையில்,  தமிழ்நாடு அரசு அவரது பெயரில் "ராஜா சாண்டோ" நினைவு விருதொன்றை நிறுவியது. ஆண்டுதோறும் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு அரும் பணியாற்றிய கலைஞர்களில் ஒருவருக்கு வழங்கி சிறப்பிக்கின்றது.
தமிழ்த்திரையுலக வரலாற்றில் ராஜா சாண்டோவின் சாதனை தவிர்க்க முடியாத பக்கங்கள். திரையுலகின் கடைசி சாதனையாளர் உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும்!


அசைவ உணவு சாப்பிடுபவர்களாக நீங்கள்...?

சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையே அதிகரித்து வருகிறது.

அசைவ பிரியர்களுக்கு, தினமும் ஏதாவது ஓர் அசைவ வகை உணவு இல்லாமல் போனால், ஒரு வாய் உணவுகூட உள்ளே இறங்காது. ஆனால், மாறிவரும் வாழ்க்கை சூழலில், அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பதே நல்லது என்ற கருத்து பரவலாக உள்ளது. அசைவ உணவு சாப்பிடுவதால் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என்பது பற்றி சித்த மருத்துவர் கி.கலைசெல்வியிடம் கேட்டோம்.

''அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் அதிகமாக சாப்பிடும்போது, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், சீரற்ற இதய துடிப்பு, அதிக உடல் பருமன் போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். இதயத்துக்கு செல்லும் குழாயில் கொழுப்பு படியும். அதிக ரத்த அழுத்தம் ஏற்படும். பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும். பெண்குழந்தைகள் அதிக அளவில் எடுத்துக் கொண்டால், சிறு வயதிலேயே பருவம் எய்தும் நிலை உண்டாகும்.

உணவில் காய்கறிகளை அதிகம் சேர்க்கும்போது, 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் செரித்துவிடும். ஆனால், அசைவு உணவு செரிமானம் அடைய சுமார் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் வரை ஆகும். எனவே, அசைவ உணவுகளை இரவு வேளையில் சாப்பிடக் கூடாது. செரிமானப் பிரச்னையால் பித்தப்பையில் கல் உருவாகும்.

சில ஆண்கள் மது அருந்திவிட்டு, அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். இதனால், உடலில் கொழுப்பு சேர்ந்து, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மேலும் பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு. குடலிலும் அதிக கொழுப்பு தங்கி, குடலின் இயக்கம் பாதிக்கப்படும். விளைவு, அதிக கோபம், எரிச்சல், நிதானமின்மை என அன்றாட செயல்களில் பாதிப்புகள் ஏற்படலாம்.
அசைவத்தை நிறுத்தினால்...

* இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது, முதலில் உடலின் எடை 3 அல்லது 4 கிலோ வரை குறைய வாய்ப்புள்ளது.

* சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சைவ உணவாளர்களுக்கு இதயநோய் பாதிப்பு 24 சதவீதம் வரை குறைவாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.

* உடல் தசைகள் வலுவடைய புரதச்சத்து மிகவும் அவசியம். இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது. புரதச்சத்து நிறைந்த சைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

* இறைச்சி சாப்பிடுவதால் உடல் சூடு அதிகமாக இருக்கும். இறைச்சியைத் தவிர்ப்பதால் உடல் சூடு குறையும்.

* ஆட்டு இறைச்சியில் கொழுப்பு அதிகம். எனவே அதைத் தவிர்க்கும்போது, உடலில் சேரும் கொழுப்பின் அளவு குறையும்.
* அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது சைவ உணவு எளிதில் செரிமானமாகும். ஏற்கனவே செரிமானப் பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும்.

* கடின உழைப்பாளிகளுக்கு சைவம், அசைவம் என எந்த வகை உணவானாலும், உடலில் கலோரிகள் தங்காமல் எரிக்கப்பட்டுவிடும். அசைவம் சாப்பிட்டாலும் எந்த பிரச்னையும் இருக்காது.

* உடலை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், அன்றாடம் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், அசைவ உணவின் சத்துக்களை சைவ உணவின் மூலம் ஈடுசெய்ய முடியும்'' என்றார்.காக்காமுட்டையைத் தொடர்ந்து உலகை கவனிக்க வைத்திருக்கும் வெற்றிமாறன்

மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து படமாக்குபவர்  வெற்றிமாறன். அவருடைய அடுத்த படம் விசாரணை. தனுஷ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க படம் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது.
இதற்கு நடுவில் பாரம்பரியமிக்க வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் பங்கேற்று உலக சினிமாக்களுடன் போட்டிபோடவிருக்கிறது. முதன் முறையாக தமிழிலிருந்து வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவிருக்கும் படமும் இதுவே.

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்றாலே விருதுகளும் பாராட்டுகளும் நிச்சயம் என்பதை ஆடுகளம், காக்காமுட்டை ஆகியவற்றைத் தொடர்ந்து விசாரணை படம் வெளியாவதற்கு முன்னரே நிரூபித்துவிட்டனர். 

ஆட்டோ சந்திரகுமார் என்பவர் தான் ஜெயிலில் அனுபவித்த சம்பவங்களை மையப்படுத்தி எழுதிய லாக்-அப் நாவலை மையப்படுத்தியே இப்படத்தை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன். விசாரணைக்கு அழைத்துச் சென்று, பின்னர்  காவல் நிலையத்தில் நிகழும் உண்மை நிகழ்வை அப்படியே படமாக்கியிருக்கிறாராம்  இயக்குநர்.
கைதியாக அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கிறார்.  கிஷோர், சமுத்திரகனி, முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  அதுமட்டுமில்லாமல் ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் இறுதியாக படத்தொகுப்பு செய்த படமும் இதுவே.


இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர் விஜய்: விஜய்க்கு நன்றி சொன்ன சிம்பு!

வாலு படம் ஒவ்வொரு முறையும் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய் வருகிறது. மற்றவர்களுக்கு இது செய்தியாக இருந்துவந்த நிலையில் சமீபத்தில் படத்தின் பிரச்னைதான் என்ன எனக் கேட்டறிந்துள்ளார் விஜய்.இந்தப்படம் வெளியாகவேண்டுமென்றால் பெரியதொகை கொடுத்தாகவேண்டும் என்கிற விசயம் அவருக்குத் தெரியவந்திருக்கிறது.

அதைக் கேட்டவுடனே அவ்வளவு தொகையையும் தாமே தருவதாக ஒப்புக்கொண்டாராம்.“பலமுறை இந்தப்படம் தள்ளிப்போனதில் எனக்கு வருத்தம். எனவே படம் வெளியாக என்னாலான இந்த உதவியைச் செய்கிறேன். இதை எப்போது முடியுமோ அப்போது திருப்பிக்கொடுத்தால் போதும்” என்று சொல்லி அந்தப்பணத்தைக் விஜய் கொடுத்துள்ளார். அதோடு தமக்கு வேண்டிய விநியோகஸ்தர்களிடம் இந்தப்படம் வெளியாக உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் என ஓரிரு தினங்களுக்கு முன்பு நம் சினிமா விகடனில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக சிம்பு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். ” வாலு படம் வெளியாக உதவி புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி, இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர்” என விஜய்க்கு நன்றியை கூறி நெகிழ்ந்துள்ளார் சிம்பு. மேலும் எல்லா விதத்திலும் தனக்கு பேருதவியாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு, நீங்கள் பெருமைப் படும்படி கண்டிப்பாக செய்வேன் என நம்புங்கள், நீங்கள் இல்லாமல் நான் இல்லை . என அடுத்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார் சிம்பு.

தெலுங்கிலும் வசூல் நாயகன் அவதாரம் எடுத்த விஜய்!

தமிழைப் பொருத்தவரை ரஜினி, கமல், விஜய், அஜித் இவர்கள் தான் பாக்ஸ் ஆபீஸ் நடிகர்கள். அதிலும் விஜய் , அஜித் என்றால் இணையம் துவங்கி தியேட்டர் வரையென வெறி பிடித்த ரசிர்கர்கள் இருப்பது நாம் அறிந்ததே.
இவர்கள் இருவரைக் குறித்து எந்த கிண்டலோ, கமெண்டுகளோ, ஏன் விமர்சனம் என்றால் கூட ரசிர்கர்கள் கொதித்தெழுந்து விடுவார்கள். இந்நிலையில் சூர்யா தெலுங்கில் தனக்கேன ரசிகர்களை உருவாக்கிவிட்ட போதிலும் விஜய்க்கு இப்போதுவரை அது எட்டாக் கனியாகவே இருந்துவந்தது. 
கேரள ரசிர்களை கவர்ந்திழுத்த விஜய் தெலுங்கு ரசிர்களிடம் அந்த அளவிற்கு நெருக்கம் காட்ட முடியவில்லை. இந்நிலையில் நேசன் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு பொங்கல் சிறப்பாக வெளியான படம் ‘ஜில்லா’. இமான் இசையில் படத்தின் பாடல்கள் மாஸ் ஹிட்டானது. 

விஜய், மோகன் லான், காஜல் அகர்வால், சூரி, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் தற்போது தெலுங்கில் டப்பாகி வெளியாகியுள்ளது. எதிர்பாரா விதமாக வசூலிலும், விமர்சன அளவிலும் மேகா ஹிட்டாகியுள்ளது ‘ஜில்லா’ படம். தமிழ், கேரளா ரசிகர்களிடம் மாஸ் ஹீரோவாக மாறிவிட்ட விஜய்க்கு தெலுங்கில் கிடைத்த முதல் வெற்றி இதுதானாம்.
 இந்நிலையில் இனி விஜய் தெலுங்கு ரசிகர்களையும் கருத்தில் கொண்டு படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் சூர்யா, விஷால் போன்றோரின் சமீபத்திய படங்களான ‘அஞ்சான்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’, மற்றும் ஆம்பள, பூஜை என தமிழில் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்றாலும் தெலுங்கில் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. 
இது ஆரோக்கியமான விஷயம் என்றாலும் சொந்த மண்ணின் ரசிகர்களை இவர்கள் கருத்தில் கொள்கிறார்களா என்ற கேள்வியே தற்போது எழுகிறது. 


'நாம் இருவர்... நமக்கு ஒருவர்!' - இவர்களுக்கு சொல்வது எவர்?

சித்து அழும் குழந்தையை வாரி அணைத்து பால் கொடுக்க முடியாத சூழல் எந்த தாய்க்குமே வரவே கூடாது. பேருந்தில் இருந்து இறங்கும் வரை அதுதான் உச்சக்கட்ட கொடுமை என்று நினைத்திருந்தேன். இறங்கிய பிறகு, இன்னொரு செய்தியை கேட்டதும் கோபமாகவே திட்டிவிட்டேன்.

அன்று ஒரு நீண்ட பயணமாய் பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். ஆசையாய் தொட்டு முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது ஒரு குழந்தையின் குறும்பு. என் தலைமுடியை இழுப்பதும், வளையல்களையும், செல்போனையும் இழுத்து விளையாடுவதுமாய் தொடர்ந்த, அவன் சேட்டைக்கு நடுவில் நானும் குழந்தையாகவே மாறியிருந்தேன்.

'பாப்பாவுக்கு என்ன வயசிருக்கும்?’ என்று அவன் அம்மாவிடம் கேட்க, சம்மந்தமே இல்லாமல், 1 வயது 1 மாதம் என்று சொல்ல, நம்ப முடியாமல் இருந்தது. 3 மாத குழந்தைக்கான உடல் வளர்ச்சியிலும், 1 வயதுக்கான மூளை வளர்ச்சியிலும் இருந்த அந்த குழந்தையின் அம்மாவைப் பார்த்தால் பள்ளி மாணவி போல இருக்கிறார். மூன்று புறமும் கடல் சூழ்ந்தது போல் நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஆண்கள் சூழ்ந்திருக்கிறார்கள். எப்போதோ 4 மணி நேரத்துக்கு முன்பாக கொண்டு வந்திருந்த புட்டிப்பாலை குடிக்க மறுக்கிறது அந்த குழந்தை. இப்போது விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தைக்கு ஒரு நிறுத்தத்தில் புதியதாய் பால் வாங்கிக் கொடுக்க, அதோடு அழுகை நின்றது. ஆனால் இதோடு செய்தி முடிந்துவிடவில்லை.


ஆந்திராவில் இருந்து கைக்குழந்தையுடன் கணவனோ, இல்லை உறவினரோ யாருமே துணைக்கு இல்லாமல் தனியாக வந்து கொண்டிருக்கும் அவளிடம் கைப்பேசியும் இல்லை. போக வேண்டிய இடமும் தெரியாது. 'கோயம்பேடு வந்ததும் இறக்கிவிடுறீங்களா?’ என அப்பாவியாய் கேட்டதோடு என் செல்போனில் இருந்து அவள் கணவனின் எண்ணை சொல்லி, போன் போட்டு தரச்சொல்லி மணிக்கு ஒருதரம் பேசிக் கொண்டிருந்தாள். 'மாமா வந்துடுவேன்னு சொல்லிச்சி... அவர் வர வரைக்கும் என்கூட இருந்து விட்டுட்டுப் போறீங்களா?’ என்றாள்.

'முன் பின் தெரியாத ஊரில், கணவன் வேலைப் பார்க்கிறார் போல..’ என்று நினைத்து அந்த பெண்ணுக்கு துணையாக பயணித்துக் கொண்டிருந்தேன். கோயம்பேடு இறங்கினோம். 10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொன்ன அவள் கணவன் வரவே இல்லை. அரை மணிநேரம் ஒரு மணிநேரம் போய் 2 மணி நேரம் வரை ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தோம். நான் போய்ச் சேர வேண்டிய இடம் தொலைதூரம் என்பதால் அந்த இடத்தில் இருந்து உடனே கிளம்ப வேண்டிய கட்டாயம் எனக்கு. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு காவல்துறையினரிடம் அந்த பெண்ணை ஒப்படைத்துவிட்டு செல்வதென முடுவு செய்து, அவளை அருகில் இருந்த போலீஸ் பூத்தில் விவரம் சொல்லி விட்டுவிட்டு திரும்பினேன். அப்போதுதான் அவள் அதுவரை சொல்லாமல் இருந்து சொன்ன செய்தி பகீர் என தூக்கிப் போட்டது.

‘ரொம்ப மயக்கமா இருக்குக்கா... 5 மாசம் முழுகாம இருக்கேன்.. இன்னொரு தரம் மாமாவுக்கு போன் பண்றீங்களா?’

'ஒரு குழந்தையே இப்படி சத்தில்லாம இருக்கு... இதுல இன்னொன்னா?’

திட்டிவிட்டு போன் போட்டு கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டேன். நான் வீடு வந்ததும் அவள் புருஷனின் எண்ணுக்கு மறுபடியும் போன் போட்டுப் பார்த்தேன். இரவு பத்து மணி இருக்கும். நாட் ரீச்சபிள் என்று வந்தது. அவள் பத்திரமாக சேர்ந்திருப்பாளோ என்ற நினைப்பு என்னை தூங்க விடவில்லை. தொடர்ந்து நாட் ரீச்சபிள். 12.15 இருக்கும். அவள் புருசன் பேசினான். 'ரொம்ப தாங்க்ஸ்ங்க’ என்றான். சரமாரியாக திட்டியப் பிறகுதான் மெதுவாய் தூங்க ஆரம்பித்தேன்.

’முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையில் 2 வருடம் இடைவெளி தேவை...’, ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ இப்படியான வாசகங்களையெல்லாம் நான் குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறேன்!
போதையில் மாற்றம்....சுடுகாட்டிற்கு அனுப்புவதில் முன்னேற்றம் … யாரோ ?

'டாஸ்மாக்  உங்கள் அருகிலேயே..இனி எப்போதும் உங்களுடன்!' என்று சொல்லுமளவிற்கு  நவீன வடிவில் அரசின்  "மதுபான  சேவை " நம்மை நெருங்க ஆரம்பித்துள்ளன .
ஏற்கனவே உள்ள கடைகள் மூலம் பெண்களின் வாழ்க்கையை கெடுத்து கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் நிலையில், அரசின் இலவச தாலி வழங்கும் திட்டத்திற்கு பணப்பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க,  நவீன மதுபானக் கடைகளை, வணிக வளாகங்களில் திறக்க முடிவு செய்துள்ளது அரசு. 

'எல்லாமே இலவசமாக கொடுக்கும் அரசு, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்  கொடுக்குமா?' என பெண்கள் கேட்கும் அளவிற்கு குடிகார சமூகத்தை உருவாக்கி, பெண்களை விதவையாக்கி, ஆண்களை போதையில் முடக்கி  கோடிகளில் மிதந்து வருகிறது. 

அரசுக்கு நல்ல வருமானம் கொட்டப் போகும் நிலையில், வேறு யார் யாருக்கு மது உதவியாக இருக்கும் என்று பார்க்கலாம்.... 

நவீன வணிக வளாகங்களில் மதுபானக் கடைகள் திறப்பால் போலீசுக்கு அதிகப்படியான அடிதடி, கட்டபஞ்சாயத்து, கொலை, கொள்ளை வழக்குகள் ஏற்பட்டு என்றும் பணப் பிரச்னை ஏற்படாமல் அரசின் மது பானக்கொள்கை, போலீசுக்கு  “நண்பனாக” திகழும். 

ஏற்கனவே ஹெல்மெட் சட்டம் மூலம் கடுமையாக வேலை செய்யும் போக்குவரத்து போலீசார், இனி குடி போதை வாகன ஓட்டிகளின் போதை விபத்துக்களை "கட்டப்பஞ்சாயத்து  பேசி"  சமரச நாயகனாக திகழ்வார்கள். இதனால் போக்குவரத்து போலீசுக்கு மனம் சந்தோஷத்தில் இருக்கும்.

இதய நோய், சர்க்கரை நோய் ,மலட்டுத் தன்மைக்கு மருந்து மாத்திரைகள் அதிகம் விற்பனையாகி, மருந்து விற்பனை நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கல்லா கட்டும்.  மதுவால் அதிகப்படியான நோயாளிகள் உருவாவதும், விபத்துக்கள் ஏற்படுவதால் 108 வண்டியின் எண்ணிக்கை அதிகமாகும். தெருவில் ஆட்டோக்கள் போல, 108 வண்டி திரும்பிய இடமெல்லாம் நிறுத்தப்படும். மேலும்  இலவச அமரர் ஊர்தியும் மக்களுக்காக வழங்கப்படும். இதனால் மக்களுக்கு ஓட்டுனர் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மதுவால் கடனாகி, தாலியைக் கூட அடகு வைக்கும் நிலைக்கு மக்கள் ஆளாவதால் அடகுக் கடைகளின் ஆதிக்கம் அதிகமாகும்.  பாதிப்பேர் மதுவால் கடன்பட்டு, நாட்டை விட்டு வெளியேறுவதால் வாடகை வீடுகள் எளிதில் கிடைக்கும்.
விவசாயக் கூலிகள் குடித்து நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடப்பதால், விவசாயம் செய்ய ஆளில்லாமல்  விலை நிலங்களை கூறு போட்டு விற்கும் நிலைமையும் ஏற்படும். இதனாலும் அரசுக்கு பத்திரப் பதிவின் மூலம் லாபம், சிலருக்கு லஞ்சமும் அமோகம்.

“மனு” கொடுப்பவருக்கு “மது கொடுக்கும் திட்டம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மிகப்பெரிய மதுக்கடைகளை திறந்து,  மனு கொடுப்பவர்கள் மனம் நோகாதவாறு  மக்களின் புண்பட்ட மனதிற்கு மது மூலம் போதை கொடுத்து வீட்டிற்கு அனுப்பும் திட்டம் அரசிடம் வரலாம். 

குறிப்பு: மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திலேயே உள்ள மதுக்கடை என்பதால் சரக்கு புதிதாகவும் ,கலப்படம் இல்லாமல் கிடைக்கும் என்ற உறுதிமொழி வழங்கப்படும்.

மாணவர்களை  மது குடிக்க அழைக்கும்   திட்டம்  : இன்றைய மாணவர்களே நாளைய   டாஸ்மாக்  சமூகம் என்பதால் கல்லூரி காண்டீனில் மது வழங்க அரசு சிறப்பு ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் "சாராய  பாரம்பரியம்" பாதுகாக்கப்படும். 
குறிப்பு: அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் வருவதால் கூட்ட நெரிசலைத்  தவிர்க்க அரசு இரவிலும் கல்லூரியில் கடைகளை திறக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்   கொள்கிறது. 

அரசு மருத்துவ மனையில் மதுபானக் கடைகள் திட்டம் : இங்கு உள்ள மதுபானக் கடைகள் மூலம் டோக்கன் பெற்று, குடிப்பவர்களுக்கு அரசே இலவசமாக நோயாளிகள் படுக்கை வசதி செய்து தரும். அரசு சிறப்பு சலுகையாக மாத்திரைகள் உடனுக்குடன் வழங்கப்படும்.

குறிப்பு:  இங்கு வந்து தொடர்ந்து குடித்து செத்துப் போனால் உடனுக்குடன் இலவச அமரர் ஊர்தி வண்டி சேவை உண்டு. 

சூப்பர் சுடுகாட்டு சரக்கு சரக்கு திட்டம்: அரசு மக்களை அனுப்ப விரும்பும் ஒரே இடம் இது. பெரும்பாலான மக்கள் குடியால் செத்துப்போவதால் அவர்தம் நண்பர்கள்,உறவினர்கள் சுடுகாட்டிற்கு வரும் நிலையில், 'சூப்பர் சுடுகாட்டு சரக்கு திட்டம்' மூலம் அங்கேயும் ஒரு பார் வசதி ஆரம்பிக்க அரசு திட்டமிடும்.  இதன் மூலம் அரசுக்கு வருவாயும், சுடுகாட்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பில் நம்பிக்கையும் பிறக்கும். 

குறிப்பு: அங்கேயே இரவு பகலாக குடித்து செத்துபோனவர்களுக்கு அரசே எரிக்க இலவசமாக விறகு கொடுக்கும். கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டித் தரும். இந்த வாய்ப்பு வேறு எங்கும் கிடையாது. முந்துங்கள். குடிக்க வைத்து போதையில் படுக்க வைப்பதில் மாற்றம்....சுடுகாட்டிற்கு தமிழர்களை அனுப்புவதில் முன்னேற்றம்.

இதற்கு காரணம்  யாரோ ?.   வெளிநாட்டு வேலைக்கு செல்கிறீர்களா...? ஜாக்கிரதை!

'பையன் என்ன பண்றாரு...?

'பயணத்துல இருக்காரு'

-  என வெளிநாட்டு வேலையை பற்றி பெருமையாக சொல்ல கேட்கிறோம் .

இன்னும் பலர் 'camp -dubai' என்று போட்டு மாப்பிள்ளையின் வேலை பற்றி திருமண அழைப்பிதழில் பெருமையாகப் போடுவதை காணலாம்.

இப்படிப்பட்ட வெளிநாட்டு வேலைக்காக, படிப்புக்காக ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். 

'சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' - பொதுவாக அரசியல்வாதிகளுக்குத்தான் இந்த கூற்று பொருத்தமாக இருந்தது. இப்போது வெளிநாட்டு  நிறுவனங்களுக்கும் பொருந்தி வருகிறது. வேலைக்கு சேர்க்கும்போது தருவதாக கூறும் சம்பளம், சலுகைகள் எதுவும் தராமல் கொடுமைப்படுத்துவதும்,  'பார்த்தவரைக்கும் போதும்... இந்த வேலையே வேண்டாம்!' என தொழிலாளர்கள் தலைதெறிக்க தாயகம் திரும்புவதும் இப்போதெல்லாம் அதிகரித்துள்ளது.


வெளிநாட்டு வேலைக்காக வீடு, நிலத்தை விற்றும், கடன் வாங்கியும் பணம் சேர்த்தவர்கள், இறுதியாக அந்த பணத்தை சம்பாதிப்பதற்காகவாவது உழைப்போம் என தயாராகிவிடுகிறார்கள். அவர்கள் ஊருக்கு திரும்பியவுடன், இதைப்போல் ஏமாற்றி அடுத்த செட் தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கின்றன மோசடி நிறுவனங்கள். ஏமாற்றுவதும், ஏமாறுவதும் தொடர்கின்றன.

வேலை தேடிச் செல்பவர்கள், இதேபோல் அங்குள்ள நிறுவனங்களின் தரத்தினை தெரிந்துகொண்டுதான் செல்கின்றனரா என்றால் இல்லை. படித்து முடித்தவுடன், எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் வெளிநாடு செல்வோரின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாக ஆகிவிடுகின்றன. பொறியியல் போன்ற மேல் படிப்பு  படித்தவர்களுக்கு பெரும்பாலும்  இந்த பிரச்னை இல்லை. குறைந்த அளவிலான கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு தையல், கட்டுமானம், மீன் பிடித்தல், தோட்டத் தொழில், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் நிலைமை பரிதாபத்துக்குரியது.

அதிக ஊதியம் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி இங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் தொழிலாளர்கள், அங்கு கொத்தடிமைகளாகவும், வேறு பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதன் மூலம் படும் இன்னல்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்தாலும், இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரியாமலே போய்விடுகின்றன.
"இந்தியாவிலேயே ஏராளமான வேலைவாய்ப்புகளும், வியாபார வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. வெளிநாட்டு வேலை மோகத்தை ஒழித்துவிட்டு இங்கேயே வேலை, வியாபாரம் செய்தாலும் வாழ்வில் உயரலாம்" என்று சிலர் சொல்லி கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் வெளிநாடு செல்பவர் அதிகம் சென்று கொண்டுதான் இருக்கின்றனர். 

இவ்வளவு சிக்கலை கேட்டும், மக்களிடம்  வெளிநாட்டு மோகம் இன்னும் உள்ளதால் வெளிநாட்டில் வேலையை நாடுபவர்கள், முதலில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன வேலை வாய்ப்புகள் சாத்தியப்படும் என்பது குறித்து அறிய வேண்டும். பொதுவாக துபாய், ஓமன், அபுதாபி போன்ற கல்ஃப் நாடுகளில் எப்போதும் கட்டட வேலை நடந்துகொண்டே இருக்கும். அதனால் கட்டடத் கூலித் தொழிலாளர்கள், எலெக்ட்ரீஷியன்கள், பொறியாளர்களுக்கு அங்கே தேவை அதிகம். 

மலேஷியா, சிங்கப்பூரில் ரப்பர் தோட்டங்கள் அதிக அளவில் இருப்பதால், அங்கு தோட்டத் தொழிலாளர் களுக்கு அதிக தேவை இருக்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் சாஃப்ட்வேர் துறை யினருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு, எல்லா நாடுகளிலும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. 

வெளிநாடு செல்ல நினைப்போர்  செய்ய வேண்டியது என்ன...

மத்திய  அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உரிமம் பெற்ற ஏஜென்சிகளே, வெளிநாட்டுக்குப் பணியாட்களை அனுப்பும் தகுதி பெற்றவையாகின்றன. ஒருவேளை நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு ஏதாவது ஒரு ஏஜென்ஸியை அணுகும்பொருட்டு, அவர்களிடம் அரசாங்கத்தின் லைசென்ஸ் எண்ணைக் கேட்டு, அதை அயல்நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் வெப்சைட்டில் பரிசோதித்துக் கொள்ளுங்கள் (www.moia.gov.in). 

பின் அந்த ஏஜென்சிக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் ஆட்கள்,  தேவைக்கான டிமாண்ட் லெட்டரில் அளிக்கப்பட்டிருக்கும் வேலை விவரம், சம்பளம், விடுமுறை நாட்கள், விதிமுறைகள் என அனைத்தையும் அந்த லெட்டரை கேட்டுப் பெற்று, தெரிந்துகொள்ளுங்கள். அந்த டிமாண்ட் லெட்டரில் வேலை வழங்கும் நிறுவனம்,  அந்த நாட்டில் பெற்ற லைசென்ஸ் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். 

அதன் மூலம் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளலாம். வேலைக்கு ஆள் எடுக்க, சம்பந்தப்பட்ட கம்பெனி,  தன் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து 'நோ அப்ஜெக்ஷன்' லெட்டர் வாங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை பார்ப்பவர், நிறுவனம் இருவருக்கும் அது சிக்கல்களைத் தரும்.ஆக்ரமிப்பு, அலட்சியம், அக்கறையின்மை: துாங்கி வழியும் மகாமகம் ஏற்பாடுகள்!

புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா நடக்க இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் நிகழாமல் இருப்பது மகாமக பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் மகா உற்சவம், காலை, மாலை சாமி வீதியுலா என கும்பகோணத்தில் உள்ள 63 கோயில்களிலும் முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கும். மகாமகத்திற்கு இன்னும் 150 நாட்களே உள்ள நிலையில், எந்த பணிகளும் முழுமை அடையாமல் இருப்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதுவரை இரண்டு மகாமகத்தை கொண்டாடிய அதிமுக அரசு,  இப்போது மூன்றாவது மகாமகத்தை கொண்டாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. மகாமகத்திற்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், மகாமகம் நடப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ள கும்பகோணம் வாசிகள், முதல்வர் நேரடியாக மகாமக பணிகளில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

முழு வீச்சில் பணிகள் நடைபெற்றாலும் இன்னும் 5 மாதத்தில் ஏற்பாடுகளை முடிக்க முடியுமா என கேள்வி எழுப்புகிறார்கள் பக்தர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, “ கடந்த இரண்டு மகாமகத்திற்கும் ஆதீனபக்தர்கள், மடாதிபதிகள், தொழிலதிபர்கள், உபயதாரர்கள் என ஒரு கமிட்டி அமைத்து சாலை பணிகள், கழிப்பிட வசதி, போக்குவரத்து பணிகள், கோயில் திருப்பணிகள் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தினார்கள் அதிகாரிகள்.

ஆனால் இப்போது பிப்ரவரி 13-ம் தேதி நடக்க இருக்கும் மகாமகத்திற்கு அரசு சார்பில் கமிட்டி அமைக்கவில்லை. எந்த பணிகளும் இதுவரை முழுமையாகவும் நடைபெறவில்லை. முன்கூட்டியே பணிகள் நடைபெற வேண்டுமென்பதற்காக அரசு சார்பில் 260 கோடி நிதி ஒதுக்கினார்கள். 

முதலமைச்சரின் வழக்கினை காரணம் காட்டி, சரியாக பொறுப்பாளர்கள் இல்லாததால் பாதிக்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் பாதியில் நடைபெறாமல் இருக்கின்றது. இன்னும் மேலும் சில கோயில்களில் பாலாலயம் திருப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இனிவரும் காலம் மழை காலம் என்பதால் வர்ணங்கள் பூசுவது முதல் கட்டட பணிகள் வரை தாமதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

பணிகளை அதிகாரிகளே தங்களது இஷ்டம்போல  செய்கிறார்கள். 80 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த விழாவில்,  அதற்கான ஏற்பாடுகளும், பணிகளும் இன்னும் 30 சதவீதம்கூட நடைபெறவில்லை. 40 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு தனியார் லாட்ஜ்களையும், திருமண மண்டபங்களையும் இப்போதே புக் செய்துவிட்டார்கள். 

காவிரி ஆற்றில் குளித்துவிட்டு, மகாமக குளம், பொற்றாமரை குளத்தில் குளிக்க வேண்டும் என்பது ஐதீகம். 
ஆனால் குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இப்போதே தண்ணீர் விட்டு நீர் ஆதாரத்தை பெருக்கினால்தான் மகாமகம் நேரத்தில், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். 44 குளங்கள் இருக்கின்றன. அதில் 12 குளங்கள்தான் பயன்பாட்டில் இருக்கிறது. 17 குளங்கள் எங்கே இருக்கின்றன என்று தெரியாமல் ஆக்கிரமிப்புகாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 15 குளங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. 

பக்தர்கள் நீராடும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கான திட்டத்தை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்தினால்தான் போதுமான பாதுகாப்பு கொடுக்க முடியும். போதுமான பாதுகாப்பு இல்லாமல் போனதால்தான் கடந்த 1992- ல் நடைபெற்ற மகாமகத்தில் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பத்து நாட்களும் மகாமக குளத்தில் நீராடலாம் என்று அறிவித்தார்கள். இந்த முறையும் பத்து நாட்களும் மகாமக குளத்தில் நீராடலாம் என்று அறிவிப்பை அரசு அறிவிக்க வேண்டும்.

பக்தர்கள் இலவசமாக தங்குவதும், குளியல் வசதி, போக்குவரத்து உள்ளிட்ட விவரங்களடங்கிய விளம்பர பலகைகளை ஒரு மாதத்திற்கு முன்பே, நகர்ப்புறங்களில் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார். 

பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர், “மூன்று குளங்களில் பக்தர்கள் நீராடுவதுதான் மகத்தின் சிறப்பே. மகாமக குளத்தில் நீராடிவிட்டு காவிரியில் குளிக்க வேண்டும். ஆனால், காவிரியின் படித்துறை நீண்டபடித்துறை. இதில் இறங்கித்தான் பக்தர்கள் நீராட வேண்டும். இடிந்த நிலையில் உள்ள படித்துறைகளை சீரமைத்தால்தான் பக்தர்கள் எந்தவிதமான சிரமங்களும் இல்லாமல் குளத்தில் இறங்கி நீராட முடியும்.

திருமஞ்சனத்திற்காக தீர்த்தவாரி மண்டபங்களும் சேதமடைந்து, ஆக்கிரமிப்புகளுடன் காணப்படுகிறது. சேதமடைந்து கிடக்கின்ற படித்துறைகளையும், மண்டபங்களையும் சீரமைப்பதற்கோ, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கோ மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் இருக்கிறது. இப்பொழுது ஆரம்பித்தால்கூட எந்த வேலையும் முழுமை அடைவதற்கான வாய்ப்பில்லை, ஏனென்றால், 3 மாதங்களுக்குள் மழை ஆரம்பித்துவிடும், மழை காலங்களில் எந்த வேலை செய்தாலும் பயன் இல்லாமல்தான் போகும். 

ஆதி கும்பேஸ்வரர் கோயில் மகாமகம் காலங்களில் 5 தேர்களை அலங்கரித்து, பக்தர்களின் பார்வைக்கு வைத்து பரவசமூட்டுவார்கள். ஆனால், 5 தேர்களில் 2 தேர் மட்டுமே இருக்கிறது; மீதமுள்ள 3 தேர்களில் இப்போதுதான் வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் 5 மாதத்திற்குள் முடிவடையுமா? என்பது கேள்விகுறிதான். ஒருவேளை தேர் வேலைகள் நிறைவு பெற்றாலும், அதை தரமானதாக இருக்குமா என்பதும் கேள்விகுறிதான்.

வைணவ கோயில்களான சக்கரபாணி, சாரங்கபாணி, ராமசாமி, ராஜகோபாலசாமி, வரதராஜபெருமாள் கோயில்களின் திருப்பணிகள் இன்னும் முழுமையடையாமல் இருக்கின்றன. சாரங்கபாணிகோயிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், ராமசாமி கோயிலில் அடுத்தமாதம் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில்  வரதராஜபெருமாள் கோயில், சக்கரபாணி திருக்கோயில் திருப்பணிகள் தாமதமாகவே நடைபெற்று வருகின்றன.
சிவன் கோயில்களான காளஹஸ்தீஸ்வரர், தானுபுரீஸ்வரர், சோமேஸ்வரர், கோடீஸ்வரர் கோயில் திருப்பணிகள் மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. இன்னும் குறுகிய நாட்களே இருப்பதால் திருப்பணிகளின் வேலைகளை அவசரகதியில் வேலை பார்த்தால் தரம் குறைவாகவே இருக்கும். 

நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டு 4 பாசன வாய்க்கால்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் டவுன் பகுதிகளுக்குள் செல்கின்றன. பிரதான வாய்க்கால்களான இவை தூர்ந்து கிடக்கின்றன. இதனால் மகாமகம் காலங்களில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 
நகராட்சி நிர்வாகம் சார்பில் வாய்க்கால்களை சுத்தப்படுத்துவதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. தற்போது தற்காலிக கழிப்பறைகள் மற்றும் பொதுகழிப்பறைகளை அமைத்து வருகிறார்கள்.  இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் போதிய தண்ணீர் இல்லாமல், பணியாளர்கள் இல்லாமல் மகாமகம் காலங்களில் பழைய நிலைக்கே திரும்பி வந்துவிடும். 

கும்பகோணம் ரயில்நிலையத்தில் பயணிகள் தங்கும் அறைகள் 4 மட்டுமே உள்ளது. மகாமகம் காலங்களில் 4 அறைகள் எப்படி போதுமானதாக இருக்கும். 80 லட்சம் பக்தர்களை எதிர்பார்க்கும் அரசு,  ரயில் மார்க்கத்தில் வருபவர்கள்தான் அதிகம்பேர் என கணக்கிட்டுள்ளது. ரயில்நிலையத்திலும் கழிப்பறைகள வசதிகள் இல்லை. தஞ்சாவூர் வரை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களை கும்பகோணம் வரை நீட்டிப்பு செய்யச்சொல்லி பலமுறை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம், ரயில் நீட்டிப்பதற்காக எந்த முகாந்திரமும் இல்லை"  என்று வேதனையுடன் சொல்லி முடித்தார்ரஷ்ய அதிபர் புதின் - சூப்பர் ஹீரோ அதிபரின் டாப் 14 புகைப்படங்கள்

லக நாடுகளின் அதிபர்களில் யாருக்கு இணையத்தில் விசிறிகள்(ஃபேன்ஸ்) அதிகம் தெரியுமா? பராக் ஒபாமா என்றால் நீங்கள் இணையத்தின் ஒரு பகுதியைத்தான் பார்த்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இணையத்தின் ஃபேவரிட் எப்போதும் ரஷ்யாவின் அதிபர் புதின்-தான். ஏன்? புதின்-ன் புகைப்படங்கள்தான்.
 ரஷ்ய அதிபர் புதினுக்கு தன்னை மற்ற அதிபர்களிடம் இருந்து வித்தியாசமாகக் காட்டிக் கொள்வதில் எப்போதுமே விருப்பம் அதிகம். மற்ற நாடுகளின் அதிபர்களின் புகைப்படங்களில் பெரும்பாலும், கோட்சூட் அணிந்துகொண்டு கைகுலுக்கிக் கொண்டிருப்பார்கள் அல்லது நம்மூர் அரசியல்வாதிகள் அரெஸ்ட் ஆகும்போது சிரித்துக்கொண்டே கையசைப்பதுபோல டாடா காண்பித்துக்கொண்டிருப்பார்கள்.


ஆனால் புதின், காட்டில் துப்பாக்கியுடன் உலாவுகிறார். சட்டையில்லாமல் குதிரைகளில் வலம்வருகிறார்.  ஃபார்முலா 1 காரில் சீறிப் பாய்கிறார்.  நீர்மூழ்கிக் கப்பலில்  Baikal ஏரியின் ஆழம் பார்க்கிறார். ஜூடோ பயிற்சியில் எதிரியை தூக்கி அடிக்கிறார். இன்னொரு பக்கம் கச்சேரியில் பியானோ வாசிக்கிறார், பாடுகிறார். ஐஸ் ஹாக்கியில் கோல் போடுகிறார். பப்பி நாய்க்குட்டியைத் தூக்கிக் கொஞ்சுகிறார்.

எல்லாத்தையும் நீங்களே பாருங்க பாஸ்!


வாட் எ மேன்...!
 
 
டாப்லெஸ் புதின்!(ஆகஸ்ட் 15, 2007. Dmitry Astakhov/AP)
 
 
ச்சோ க்யூட்ல...!(அக்டோபர் 11, 2008. REUTERS/RIA Novosti/Alexei Druzhinin/Pool)
 
 
                                                                                                   ஓவர் ஆக்டிங்                                                                                                        (AFP/GETTY)
 
 
 
காட்டுக்குள் வேட்டை!
(ஆகஸ்டு15, 2007. REUTERS/RIA Novosti/KREMLIN)
 
 
பாசக்கார நண்பன்ஸ்..!
(RIA Novosti / Alexsey Druginyn)
 
 
 
 
ரஷ்யாவின் GRU மிலிட்டரி இன்டெலிஜென்ஸ் தலைமையகத்தில் 'பாயின்ட் & ஷூட்'!(Reuters)
 
 
குதிரையுடன் கூலிங் கிளாஸில் புதின்!(Getty)
 
 
சைபீரியாவின் Khakasiya பகுதியில் இளைப்பாறும்போது!(ஃபிப்ரவரி 25, 2010 - REUTERS/Ria Novosti/Alexei Druzhinin/Pool)
 
 
என்னா ஸ்டைலான ஃபோட்டோ...!(ஆகஸ்டு 3, 2009. REUTERS/RIA Novosti/Pool/Alexei Druzhinin)  
 
 
(டிசம்பர் 18, 2009 - REUTERS/Ria Novosti/Pool/Alexei Druzhinin)
(இப்ப எதுக்குய்யா சம்பந்தமில்லாம என்ன இழுக்குறீங்க..?)
 
 
'அமெரிக்காவையும் இப்படித்தான் டீல் செய்வேன்!'
(AP)
 
 
அந்த வானத்தப்போல மனம் படைச்ச மன்னவனே..!(மே 9, 2012. . REUTERS/Alexei Nikolsky/RIA Novosti/Pool)  
 
 
தல...நீங்க ஹீரோ லெவல்....
(ஆகஸ்டு 3, 2009. REUTERS/RIA Novosti/Pool/Alexei Druzhinin)
 
                       புதின் அதிகமாக பியானோவில் வாசிக்கும் இசை 'From What the Motherland Begins?'                                 (செப்டம்பர் 15, 2011. REUTERS/Alexei Nikolsky/RIA Novosti)
இவற்றில் பெரும்பாலான புகைப்படங்கள் புதினுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்டது. அவர் நன்றாக இருக்கிறார் என்று ரஷ்ய மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கவும், உலகத்துக்குச் சொல்லவும் 'அரெஞ்ச்' செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இதனாலே புதின் மீம்களும் இணையத்தில் பிரபலம்.
ஆனாலும், ரசனைக்கார பிஆர் டீமைத்தான் வைத்திருக்கிறார் மனுஷன்!