சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jul 2015

விபத்தில் சிக்கியவருக்கு 50 மணி நேரம் இலவச உயர் சிகிச்சை: மோடி தகவல்!

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு முதல் 50 மணி நேரம் இலவசமாக உயர் சிகிச்சை அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களிடையே, பிரதமர் மோடி வானொலி மூலம் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று தனது 10வது நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார்.


அப்போது அவர் கூறுகையில், ''ஜூலை 26ஆம் தேதியான இன்று கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த நமது வீரர்களை நினைவு கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். உயிர் தியாகம் செய்த வீரர்களையும் நினைவு கூர்கிறேன்.


வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் நான் ஆற்ற வேண்டிய உரை குறித்து பொதுமக்கள் பலர் எனக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் பலரும் உங்களது எண்ணங்களை எனக்கு அனுப்பி வையுங்கள்.

தற்போது, நமது நாட்டில் ஒரு நிமிடத்திற்கு ஒரு சாலை விபத்து நடக்கிறது. ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இது கவலையை தருகிறது. எனவே, அரசின் விழிப்புணர்வையும் தாண்டி, சாலை பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் 4 வயது சிறுமி பலியான சம்பவம் கவலை அளிக்கிறது. அவருக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்திருக்கிறார். சாலை பாதுகாப்பு கொள்கையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சாலை விபத்துக்களை குறைக்கவும் புதிய சட்டதிட்ட கொள்கைகள் வகுக்கப்பட உள்ளது.

அதன்படி, நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நபர்களுக்கு முதல் 50 மணி நேரத்துக்கு இலவசமாக உயர் சிகிச்சை அளிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யும். இந்த திட்டம் முதற்கட்டமாக, குர்கான், ஜெய்ப்பூர், வதோதரா, மும்பை, ராஞ்சி, ருங்கான், மயூராக ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் தொடங்கப்படும்'' என்றார்.




No comments:

Post a Comment