சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jul 2015

யூனிஸ்கான் கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார்...சொந்த வாழ்க்கையில் அழுகிறார்!

பாகிஸ்தான் அணியின் தற்போதைய மூத்த வீரர் யூனிஸ் கான், அண்மையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தார். கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கைக்கு அணிக்கு எதிராக களமிறங்கிய அவர், தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
ஆனால் யூனிஸ் கானின் சொந்த வாழ்க்கை, சோகம் ததும்பியது.  தந்தை, இரு சகோதரர்கள், சகோதரி என அடுத்தடுத்து அவர் வீட்டில் நிகழ்ந்த மரணங்கள் யூனிஸ் கானை உலுக்கி எடுத்தன. 

தற்போது 37 வயதான யூனிஸ்கானின் தந்தை இறந்த போது, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். தந்தை இறந்ததை தொடர்ந்து தாய்நாடு திரும்பினார். தொடர்ந்து உக்ரேனில் நடந்த கார் விபத்தில் யூனிஸ் கானின் மூத்த சகோதரர் முகமது செரீப் கான் இறந்து போனர். இவருக்கு வயது 41. பின்னர் 2006ஆம் ஆண்டு ஜெர்மனியில் கார் விபத்தில் சிக்கி 39 வயதான மற்றொரு சகோதரர் ஃபார்மன் அலி கான் மரணம் அடைந்தார். இது மட்டுமல்ல தனது சகோதரரை மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக ஆக்க காண கனவு கண்ட அவரது சகோதரியும், மிக விரைவிலேயே யூனிஸ் கானை விட்டு இறந்து போய் விட்டார்.

வீட்டில் நடந்த அடுத்தடுத்த மரணங்கள் யூனிஸ்கானை மிகவும் பாதித்தன. ஆனால் தந்தை, சகோதர, சகோதரிகளை இழந்தது தன்னை இன்னும் தீவிரமான கிரிக்கெட் வீரனாக மாற்றியதாக யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள யூனிஸ்கான்,  தனது வாழ்க்கையில் நடந்த சோகம் குறித்து கூறுகையில்,'' அவர்களது மறைவு எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்ற எனது தந்தை, சகோதரர்கள், சகோதரி ஆசைப்பட்டனர். தற்போது அவர்கள் யாரும் உயிரோடு இல்லை. அவர்களது கனவை நனைவாக்கவே என்னை நான் தயார்படுத்தினேன்'' எனத் தெரிவித்தார். 

ஓய்வு குறித்து யூனிஸ் கான் கூறும் போது, '' தற்போதைய நிலையில் நான் ஓய்வு பெறுவது குறித்து முடிவு செய்யவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதுதான் எனது லட்சியம். அதற்கு பின்னரே ஓய்வு பற்றி முடிவெடுப்பேன் '' என்றார்.
இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள யூனிஸ் கான்,  8 ஆயிரத்து 814 ரன்கள் அடித்துள்ளார்.  பாகிஸ்தானுக்காக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் மியான்தத், 8 ஆயிரத்து 32 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.   2வது இடத்தில் உள்ள இன்சமாம் உல் ஹக் 8 ஆயிரத்து 830 ரன்களும் அடித்துள்ளார். மியான்தத்தின் சாதனையை முறியடிக்க யூனிஸ் கானுக்கு இன்னும் 19 ரன்களே தேவைப்படுகிறது.



No comments:

Post a Comment