சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jul 2015

நாஸா கண்டுபிடித்த புதிய பூமியில் மனிதர்கள் வசிக்க முடியுமா?

ன்னொரு பூமியைக் கண்டுபிடித்திருக்கிறோம் என்று நாஸா அறிவித்ததும் உலகம் ஆர்ப்பரித்தது. கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி, நம் பூமியைப் போன்ற சுற்றுச்சூழல் கொண்ட கோள்களை அடையாளம் கண்டும், ஆராய்ந்தும் வருகிறது. இந்த தொலைநோக்கி கண்டுபிடித்த உலகம்தான் கெப்ளர் 452b  (Kepler 452b).


இதுபோன்று ஏற்கெனவே பல கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், சூரியனைப் போன்ற நட்சத்திரத்தில் கச்சிதமான தூரத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தக் கோளில் நீர் திரவ நிலையில் இருக்கமுடியும். அப்படி இருந்தால்தான் உயிரினங்கள் வசிக்கமுடியும்.
மேலே கூறப்பட்டுள்ள கோட்பாடுகளில் நன்றாகப் பொருந்திப்போகும் கோளாக முதலில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த கெப்ளர் 452b-தான். இது நம் புவியைவிட 60 மடங்கு பெரியது. இங்கிருந்து 1,400 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. இந்தக் கோளின் சூரியன், நம்முடைய கதிரவனைவிட 10 சதவிகிதம் பிரகாசமானதாகவும், 4 சதவிகிதம் பெரியதாகவும் இருக்கிறதாம்.
 
நம் பூமி                                      Vs                             கெப்ளர் 452b
 ஒருமுறை தன்னுடைய சூரியனைச் சுற்றிவர 385 நாட்களை எடுத்துக்கொள்ளும் நம்முடைய ‘ப்ரோ’ கெப்ளர் 452b, அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டது. இந்தக் கோளில் பாறைகள் நிறைந்திருக்கும் எனவும், நீர் திரவ நிலையில் நிச்சயம் இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

6 பில்லியன் வருடங்களாக தன்னுடைய சூரியனைச் சுற்றி வருகிறதாம் கெப்ளர் 452b. எனவே, அங்கு சாத்தியக்கூறுகள் இருந்தால், நிச்சயம் அங்கே உயிரினங்கள் செழிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்கிறார் நாஸாவின் விஞ்ஞானி ஜான் ஜென்கின்ஸ்.

முக்கியமாக, கெப்ளர் 452b-ன் சூரியன் நம் சூரியனைவிட 1.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. எனவே, அதன் மண்டலத்தை ஆராய்ந்தால், நம்முடைய சோலார் சிஸ்டத்தின் எதிர்காலத்தையும் கணிக்க முடியும் என்று ரிவர்ஸ் கியர் போடுகிறது நாஸா.

எனவே, நம் பூமியின் ‘ப்ரோ’ இந்த கெப்ளர் 452b இல்லை. ஆனால், இதைக் கண்டுபிடித்தன் மூலம் நம் ‘ப்ரோ’வைக் கண்டுபிடிப்பது இன்னும் எளிய வேலையாக இருக்கும் என்கிறது நாஸா.

அப்படியே, நாம் கெப்ளர் 452b கோளுக்கு ட்ரிப் அடிக்க வேண்டும் என்றாலும், நியூ ஹாரிசான்ஸ் (ப்ளூட்டோ) விண்கலத்தின் வேகமான மணிக்கு 58,536 கிமீ வேகத்தில் பறக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்போதும், கெப்ளர் 452b கோளை சென்றடைய 25.8 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

ஏற்கெனவே "runaway greenhouse effect" எனும் சூழலுக்கு இந்தக் கோள் வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள். இந்தச் சூழல் சூரியனுக்கு வயதாகிவிட்டால்தான் வரும். அப்போது கோளில் உள்ள திரவ நிலை நீரெல்லாம் ஆவியாக ஆரம்பிக்கும்.

நாம் அங்கு வாழமுடியுமா என்பது வேறு விஷயம். அங்கு ஏற்கெனவே வாழ்ந்து முடித்திருப்பார்கள் போல் இருக்கிறது! 



No comments:

Post a Comment