சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jul 2015

லார்ட்ஸ் மைதானத்தில் 77 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை சதமடித்து ஸ்டீவன் ஸ்மித் சாதனை!

ரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் 77 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை  ஸ்டீவன் ஸ்மித் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 566 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 215 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இந்த இரட்டை சதத்தில் 25 பவுண்டரிகளும்  ஒரு சிக்சரும் அடங்கும். 

இதற்கு முன் கடந்த கடந்த 1938ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் பில் பிரவுன் 206 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதற்கு பின் இப்போதுதான் லார்ட்ஸ் மைதானத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.  13 ஆண்டுகளுக்கு பிறகு ஆஷஸ் தொடரில் அடிக்கப்பட்ட இரட்டை சதமிது.  கடந்த 2006ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரும் இரட்டை சதமடித்தது இல்லை.



No comments:

Post a Comment