சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Jul 2015

ஹெல்மெட் போடமாட்டோம்: மல்லுக்கட்டும் மெய்வழிச்சபையினர்!

தமிழ்நாடே தலைக்கவசத்தை தலைப்போகும் பிரச்னையாக கருதிக்கொண்டிருக்கும் வேளையில்," ஹெல்மெட் அணிவதற்கு எங்களுக்கு விதிவிலக்கு உள்ளது. ஆகையால்,  நாங்கள் ஹெல்மெட் அணிய மாட்டோம்!" என்று சொல்லி மெய்வழிச் சங்கத்தினர் தலைப்பாகை அணிந்தபடி டூ வீலரில்  கலெக்டரிடம் மனு கொடுக்க வந்து சேலத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள்.

வருவாய்த்துறையின் குறை தீர்ப்பு நாளான இன்று மதியம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைப்பாகை அணிந்தபடி பத்து டூவீலர்களில் வந்தது ஒரு குழு. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு வந்த அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்தோம்.  

நாங்கள்  மெய்வழிச் சங்கத்தினர் என்று அறிமுகம் செய்து கொண்ட அவர்களில் சாலை மனோகரன் என்பவர், “அகில மனுக்குலம் அனைத்தும் மரணமில்லாப் பெருவாழ்வு அடையும் பொருட்டு கடந்த 115 ஆண்டுகளுக்கு முன்பு மெய்மதம் ஸ்ரீலஸ்ரீ பிரம்மப்பிரகாச மெய்வழிச்சபை ஆண்டவரால் அடையாளம் தோற்றுவிக்கப்பட்டு பின்னர் அது உலகம் முழுவதும் பரப்பபட்டு இன்றுவரை நடைமுறைச் செயலாக்கத்தில் இருந்துவருகிறது. தமிழகத்தில் மட்டும் 20 கிளைச்சபைகள் மாவட்டம்தோறும் இயங்கிவருகிறது. சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் பகுதியிலும் இந்த சபை இருக்கிறது.
நாங்கள் காலங்காலமாக தலைப்பாகை அணிந்து வருகிறோம். அதுதான் எங்கள் வழக்கம்; எங்கள் கோட்பாடு. ஹெல்மெட் அணியவேண்டும் என்ற சட்டத்தை இப்போதுதான் கொண்டு வந்திருக்கிறார்கள். நாங்கள்தான் ஏற்கனவே ஹெல்மெட் அணிந்திருக்கோமே அப்புறம் எங்களுக்கு எதற்கு ஹெல்மெட்? எங்கள் சபையைச் சேர்ந்தவர்கள் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை என விதிவிலக்கு அளித்த அரசாணையே இருக்கிறது. இருந்தும் எங்களை காவல்துறை அனுமதிக்க மறுக்கிறார்கள். கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று  சொல்கிறார்கள். 

எங்களிடம்  அரசாணை இருக்கிறது என்று சொன்னால் கூட ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக அரசாணை வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று சொல்லுகிறார்கள். எங்கள் வழக்கத்தை மாற்றி நாங்கள் ஹெல்மெட் போட மாட்டோம். அதற்கு ஆவண செய்யுமாறு கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறோம்" என்றார்.

தினம்தோறும் ஒரு ஹெல்மெட் சர்ச்சை!



No comments:

Post a Comment