சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jul 2015

விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!

துரையில் சினிமா ஆசையால் தவித்துக்கொண்டு இருந்த விஜயகாந்தை சென்னைக்கு தைரியமாக அழைத்து வந்தவர்  இப்ராஹிம் ராவுத்தர்.  விஜயகாந்த் சினிமா வாய்ப்புத்தேடி ஆரம்ப காலத்தில் அலைந்தபோது   நிறைய சினிமா கம்பெனிகளால் அவமானப்படுத்தப்பட்டார். அப்போது எல்லாம் ஆறுதல் சொன்னதோடு நிற்காமல் திட்டியவர்களைத் தேடிப்போய் சண்டையும் போட்டு வந்திருக்கிறார் ராவுத்தர்.
விஜய்காந்த சினிமா மார்க்கெட் இழந்த நேரத்தில் அவரை  நிலைநிறுத்த வேண்டி அவருக்கென்று 'ராவுத்தர் பிலிம்ஸ்' என்று தனியாக தயாரிப்பு நிறுவனத்தை இப்ராஹிம் ராவுத்தர் ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல, ராவுத்தரின் சினிமா கம்பெனி பாண்டிபஜாரில் இருக்கும் ராஜபாதர் தெருவில் இருந்தது. அங்கே தினசரி 100 பேருக்கு மதியச்சாடு போடுவார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் பிரியாணிக்காக பெரிய கூட்டமே காத்திருக்கும். சினிமா சான்ஸ் தேடி அலையும் பல உதவி டைரக்டர்கள் பசியாறிக் கொள்ளும் இடமாக  ராவுத்தர் பிலிம்ஸ் இருந்தது.

அந்த காலத்தில் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்களுக்கு சினிமாவை இயக்கும் வாய்ப்பை யாரும் தரமாட்டார்கள்.  ராவுத்தர் தைரியமாக சான்ஸ் கொடுத்தார். ஆபாவாணன், அரவிந்தராஜ், செல்வமணி, செந்தில்நாதனை டைரக்டர்களாக அறிமுகம் செய்தார். தனது ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த 'புலன் விசாரணை' படத்தில்தான் சரத்குமாரை முதன்முதலாக அறிமுகம் செய்தார். அதுமட்டுமல்ல லிவிங்ஸ்டன், ஆனந்தராஜை அறிமுகம் செய்தார்.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை வகித்தவர். மூப்பனார் மீது மிகுந்த பிரியம் கொண்டவர் ராவுத்தார். அவர் சாகும்வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அதன்பின்  அ.தி.மு.க.வில் இணைந்தார். நண்பன் விஜயகாந்த் மீது மிகுந்த பாசம் கொண்டவர். திருமணம்  செய்து கொண்டால் தனக்கு வரும் மனைவி நட்பை பிரித்து விடுவாளோ என்று நினைத்து கல்யாணமே செய்து கொள்ளாதவர்.  விஜயகாந்த் மனைவி பிரேமலாதாவை பெண் பார்த்து அவருக்கு கட்டி வைத்தவர் ராவுத்தர்தான்.

சில வாரங்களாக  நுரையீரல் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராவுத்தாரை, சமீபத்தில்கூட விஜயகாந்த் நேரில்  பார்த்து கண்ணீர் விட்டார். அப்போது  'நீங்க முன்னாடியே அவரைப் பார்த்திருந்தா இந்தளவுக்கு ஆகியிருக்காது' என்று ராவுத்தர் உறவினர்கள் வேதனை பட்டனர்.
எப்போதும் வெள்ளுடையில் வாய் கொள்ளாச் சிரிப்போடு 'வாங்க தம்பி...' என்று அன்பாக அழைக்கும் ராவுத்தர், தற்போது எந்தச் சலனமும் இல்லாமல் கண்ணாடி பெட்டிக்குள் கண்மூடி படுத்திருக்கிறார்.



No comments:

Post a Comment