சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jul 2015

மது குடிக்கும் போராட்டம்: திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது!

மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த, திருச்சி சட்டக் கல்லுரி மாணவர்கள் மது குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
" வாங்க மதுக்குடிக்கலாம், ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்... அனைவரும் குடிப்போம், உங்களுக்கு குடல் அழுகி போனால் என்ன, உங்க குடும்ப நிம்மதியில்லாமல் தவித்தால் என்ன, அரசுக்கு தேவை வருமானம், அரசுக்கு பணம் கொடுத்து உதவ வாங்க மது குடிக்கலாம்" என இன்று காலை திருச்சி முழுவதும் போஸ்டர்கள் பளபளத்தன.
பார்ப்பவர்களுக்கு இது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியது. இதை ஒட்டியவர்கள் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் 'விடியலை தேடும் இந்தியர்கள்' என்ற கட்சியினர்.

போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பால், காலை முதலே திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் காலை 11 மணியளவில்,  திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த 20 க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள், கடையில் காசுகொடுத்து மது வாங்க முயற்சி செய்தனர். அவர்களை கடைக்குள் விடாமல்  போலீஸார் தடுத்து நிறுத்தினர். 

இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் மது குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட  சட்டக்கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து பத்திரிகையாளர்கள், 'விடியலை தேடும் இந்தியர்கள் கட்சி'யின் தலைவர் கார்த்திக் ராஜாவிடம் பேட்டி எடுக்க முற்பட்டபோது, போலீஸார் தடுத்ததால் பத்திரிNo comments:

Post a Comment