சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Jul 2015

முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி!

முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இரு போட்டிகள் கொண்ட முதல் 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடந்தது. இதில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்திருந்தது.

இதில், உத்தப்பா 39, முரளி விஜய் 34, ரஹானே 33 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த கிரிஸ் போஃபு 3, கிரீமர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்த தோல்வியடைந்தது. இதில், இந்திய அணியைச் சேர்ந்த அக்சர் படேல் 3, ஹர்பஜன் சிங் 2, மொஹித் சர்மா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து, 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, இரு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


No comments:

Post a Comment