சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Jul 2015

பி.சி.சி.ஐ கட்டுப்பாட்டில் சென்னை அணி வந்தால் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க வாய்ப்பு?

டை விதிக்கப்பட்ட சென்னை , ராஜஸ்தான் அணிகளை நேரடியாக பி.சி.சி.ஐ.யின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்து ஐ.பி.எல். தொடரில் விளையாட வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றன.
சூதாட்ட விவகாரம் காரணமாக சென்னை,ராஜஸ்தான் அணிகள் 2 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பி.சி.சி.ஐ அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த இரு அணிகளையும் ஐ.பி.எல். தொடரில் விளையாட வைப்பதற்கான  வழிமுறைகள் குறித்து பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

சென்னை, ராஜஸ்தான் அணிகளை நேரடியாக பி.சி.சி.ஐ யின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, முழு கண்காணிப்புடன் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். அப்படி அவ்விரு அணிகளும் பி.சி.சி.ஐ கட்டுப்பாட்டுக்குள் வரும்பட்சத்தில், வீரர்களுக்கு பி.சி.சி.ஐ-யே நேரடியாக சம்பளத்தை வழங்கி விடும்.

இது குறித்து பி.சி.சி.ஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த இரு அணிகளும் பி.சி.சி.ஐ கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்து விட்டால், பி.சி.சி.ஐக்கு  franchise கட்டணம் செலுத்த வேண்டியது  இல்லை. அணிக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பி.சி.சி.ஐ செய்து தரும்" என்றார். 

வரும் 19 ஆம் தேதி இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக, ஐ.பி.எல். ஆட்சி மன்றக்குழு மும்பையில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். லின் சட்ட ஆலோசகர் உஷா நாத் பனார்ஜியுடன், சட்டரீதியான சிக்கல்கள் விவாதிக்கப்படவுள்ளது. அதற்கு பின்னரே  சட்டரீதியாக சில தெளிவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

அதே வேளையில் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு பி.சி.சி.ஐ ரூ. 550 கோடி இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை கொச்சி டஸ்கர்ஸ் அணி வரும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க விரும்பினால் சென்னை அல்லது ராஜஸ்தான் ஏதாவது ஒரு அணியை பி.சி.சி.ஐ,  தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்க வாய்ப்பிருக்கிறது. 



No comments:

Post a Comment