நாள், நேரம் குறித்து ஒருவனைக் கொலை செய்வதற்கு மரண தண்டனை என்று பெயர் வைத்திருக்கிறோம். மரண தண்டனை மனிதத்துக்கு எதிரான செயல் என்று உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டது.
மரண தண்டனை ஏதாவது குற்றத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கிறதா என்று பார்த்தோமானால் அதுவும் இல்லை. மரண தண்டனைக்கு அதிகமாகப் பலியாகிறவர்கள் அப்பாவி மக்கள் தான் என்பதே நிதர்சனமான உண்மை. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் நம்மையும் அறியாமல் ஆதங்கமும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையும் மனதைப் பற்றிக்கொள்கிறது. மரண தண்டனைக்கு ஆளான ஒரு அப்பாவிப் பெண்ணின் இருள் நிறைந்த வாழ்க்கையைப் பேசுகிறது டான்சர் இன் த டார்க் திரைப்படம்.
இந்தப்படத்தில் பெயர் தெரியாத ஒரு நோயினால் கொஞ்சம் கொஞ்சமாக கண்பார்வையை இழந்து கொண்டிருக்கிருக்கிறாள் ஒரு பெண் .தனது மகனிடமும் அந்த நோயின் அறிகுறி தென்படுவதை அறிந்து மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்கிறாள். கிடைத்த வேலையை செய்து மகனின் சிகிச்சைக்கான பணத்தைச் சேர்க்கிறாள்.

மகனின் சிகிச்சைக்காக பணத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கும் விசயத்தை அவள் தங்கியிருக்கும் வீட்டின் சொந்தக்காரனிடம் பேச்சுவாக்கில் சொல்லிவிடுகிறாள். அவள் வீட்டில் இல்லாத போது அவன் அந்தப்பணத்தை திருடிவிடுகிறான் . பணம் திருடு போனதை அறிந்த அவள் மகனின் சிகிச்சைக்காக பணத்தை சேமித்து வருகிறேன் தயவு செய்து திருப்பித் தந்துவிடுங்கள் என்று வீட்டின் சொந்தக்காரனிடம் சண்டைபோடுகிறாள்.
அப்போது அவள் எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் அவனைச் சுட்டுவிடுகிறாள். அவன் இறந்துபோய்விடுகிறான் காவல்துறை அவளுக்கு கொலைகாரி என்ற பட்டம் சூட்டி நாள் குறித்து நேரம் பார்த்து அவளை தூக்கில் ஏற்றுவதோடு நம் மனதையும் கனமாக்கி படம் முடிகிறது.
மரண தண்டனை எவ்வளவு மனிதத்தன்மையற்றது என்பதை ஆழமாகப் பதிவு செய்கிற இப்படத்தை இயக்கியவர் லார்ஸ் வான் ட்ரயர். கேன்ஸ் உட்பட உயரிய விருதுளைப் பெற்ற இப்படத்தை, பார்த்தவன் மரண தண்டனைக்கு ஆதரவாக இருந்தாலும் நிச்சயமாக தனது மனதை மாற்றிக்கொள்வதோடு மரண தண்டனை எவ்வளவு அபத்தமானது என்பதையும் உணர்வான்.
சம காலத்தில் மரண தண்டனையை மக்கள் எதிர்த்து வருகிறார்கள். சமீபத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இருப்பினும் இன்று யாகூப் மேமனுக்கு நாக்பூரில் சரியாக காலை 6.35மணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மரண தண்டனை குற்றத்திற்கான முழுமையான தண்டனையா என்பது வெகு மக்களின் கேள்வியாக இருக்கிறது.

No comments:
Post a Comment