சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jul 2015

கலாம் மறைவு: ராமேஸ்வரம் மக்கள் சோகம்!

மறைந்த கலாமின் உடலை ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய  மக்கள் வேண்டுகோள்

ராமேஸ்வரம்: நாட்டின் 11 வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி தான் பிறந்த ராமேஸ்வரத்தை முன்னேற்றுவதில் பெரும் பங்கு வகித்தார். அவரது திடீர் மரண செய்தி ராமேஸ்வரத்தில் காட்டு தீ போல் பரவியது. கலாமின் மரணம் பற்றிய செய்தி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது அண்ணன் முகம்மது முத்து மீரா லெப்பை மரக்காயர் இல்லத்திற்கு இரவு 7 மணியளவில் வந்தது. இதனை உறுதி படுத்தி கொள்ளும் முன்பே அவரது வீட்டின் முன்பு பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் பதட்டத்துடன் கூடினர்.



கலாமின் மூத்த சகோதரரின் பேரன் சலீம், கலாம் இறந்த செய்தியை பொதுமக்கள் முன் சொல்ல முடியாத சோகத்துடன் கண்ணீர் சிந்தியபடியே தெரிவித்தார். இதனை கேட்ட பொதுமக்கள் அனைவரும் கண்கலங்கியபடி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி கொண்டிருந்தனர். இந்நிலையில் 92 வயதுடைய முகம்மது முத்து மீரா மரைக்காயரிடம் தனது தம்பி கலாம் காலமான செய்தியை உறவினர்கள் எடுத்து சொல்ல அவரது கண்களில் இருந்து கண்ணீர் அவரை அறியாமலே வடிய தொடங்கியது.

ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் - முகம்மது ஆசியா அம்மாள் தம்பதியரின் 5 பிள்ளைகளில் மூததவர் முத்து முகம்மது மீரா. கடைக்குட்டி டாக்டர் அப்துல்கலாம். திருமணம் செய்து கொள்ளாமல் காலம் முழுக்க நாட்டுக்காகவே உழைத்த கலாமின் உறவு ராமேஸ்வரம் தீவு மட்டுமே.  கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக கலாம் ராமேஸ்வரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வருகை தந்திருந்தார். இறப்புக்கு முதல் நாள் மாலை தனது சகோதரர் மற்றும் பேரன் சலீம் ஆகியோரிடம் பேசியுள்ளார். அப்போது தனது பெயரில் இயங்கும் அருங்காட்சியத்தினை பற்றியும். அங்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். மேலும் அருங்காட்சியக்கத்தில் விற்பனையாகி வரும் புத்தகங்கள் குறித்தும் ஆர்வமுடன் விசாரித்துள்ளார். விரைவில் ராமேஸ்வரம் வர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  அதற்கும் இந்த சோகம் நிகழ்ந்து விட்டது.
படத்தில் இருப்பது மறைந்த கலாமின் மூத்த சகோதரர்


அப்துல்கலாமின் தாய் தந்தை மற்றும் சகோதர சகோதரிகளின் உடல்கள் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்ஹா அடக்க ஸ்தலங்களில் அடககம் செய்யப்பட்டுள்ளது. அதே போல அப்துல்கலாமின் உடலையும் ராமேஸ்வரத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பது கலாமின் சகோதரர் மற்றும் உறவினர்கள், உள்ளூர் மக்களின் விருப்பமாக உள்ளது . இதனை அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்பதை வேண்டுகோளாக தெரிவிப்பதாக கலாமின் பேரனும், கலாம் அருங்காட்சியகத்தை நிர்வகித்து வருபவருமான சலீம் தெரிவித்தார்.



No comments:

Post a Comment