சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Jul 2015

ஆஸி. கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முதல் இந்தியர்... அதுவும் தமிழர்!

ஸ்திரேலிய பயிற்சியாளர்கள்தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர். கிரேக் சேப்பல், வாட்மோர், ஜோ டேவ்ஸ் இந்திய அணி மற்றும் ஐ.பி.எல். அணிகளுக்கு பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

இதுவரை ஒரு இந்தியர் கூட ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றது இல்லை. தற்போது முதல் முறையாக ஒரு இந்தியர் அதுவும் தமிழர் ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீராம்தான் ஆஸ்திரேலிய பேட்டிங் கன்சல்டிங்காக நியமிக்கப்பட்டுள்ளார்.  கடந்த 2000ஆம் ஆண்டில் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக முதன் முறையாக ஸ்ரீராம் களமிறங்கினார். இந்திய அணிக்காக 8 சர்வேதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 

சென்னையை சேர்ந்த ஸ்ரீராமுக்கு இந்திய சூழலில் எப்படி வீரர்களை வழிநடத்த வேண்டுமென்பது கை வந்த கலை. அதனால்தான் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஸ்ரீராமை ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து நேற்று முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்ரீராம் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஆஸ்திரேலிய 'ஏ' அணியின் கேப்டன் உஷ்மான் கவாஜா,துணை கேப்டன் மேத்யூ வேட் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், வீரர்களுக்கு பயிற்சியும் அளித்தார். 

இந்திய 'ஏ 'ஆஸ்திரேலிய' ஏ 'அணிக்கிடையேயயான 4 நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.


No comments:

Post a Comment