சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jul 2015

ஏழை பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.95,000 கோடி: உ.பி.யில் நடந்த அதிசயம்!

பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தில் உள்ள ஏழைப் பெண்ணின் வங்கி கணக்கில், ரூ.95 ஆயிரம் கோடி ரூபாய் இருந்ததால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இந்த அதிசய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியில் வசித்து வரும் ஊர்மிளா என்ற ஏழைப் பெண், பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தில் இணைவதற்காக, அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  வங்கி கிளையில் ரூ.2,000 டெபாசிட் செய்து வங்கிக் கணக்கை தொடங்கியுள்ளார். 

இந்நிலையில்,  சமீபத்தில் அவரது வங்கி கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக அவரது செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதுகுறித்து அவர் குழப்பமடைந்த நிலையில், அடுத்த சில நொடிகளில் மறுபடியும் ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் 9,99,999 ரூபாய் வரவு வைக்கப்பட்டு, அதில் 9,97,000 ரூபாய் எடுக்கப்பட்டது போக மீதம் 2 ஆயிரம் ரூபாய் இருப்பதாக வந்துள்ளது.

இது உண்மைதானா என்று தெரிந்து கொள்வதற்காக வங்கிக்கு சென்ற ஊர்மிளா, பாஸ்புக் கணக்கை வரவு வைத்து கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார். இது தொடர்பாக அவருக்கு உத்தரவாதம் கையெழுத்து போட்ட ஒருவர், வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த வங்கி ஊழியர், ஊர்மிளா வங்கி கணக்கு தொடங்கும் போது 2000 ரூபாய் கட்டி தொடங்கி உள்ளார். அதனை தொடர்ந்து முழுமையாக பணத்தை எடுத்துவிட்டார். இதனால் வங்கியின் வரவு கணக்கு பார்க்கும் போது ஊர்மிளாவின் வங்கி கணக்கு காலியாக இருந்தது. அவரது வங்கி கணக்கை மூட நினைத்தனர். அவரது வரவு- செலவு தொடர்பான விபரங்களை கணக்கிடும் போது இந்தப் பிழை தவறுதலாக நேர்ந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து ஊர்மிளா கூறுகையில், "நான் கட்டிய அசல் தொகை எனக்கு வந்தால் போதும். இதனால் நான் நீதிமன்றத்திற்கு செல்ல விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.No comments:

Post a Comment