சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jul 2015

சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.40 லட்சம் பரிசு !

இளம் பெண்ணை பலிகொண்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் தொடர்புடைய 4 ‘சிமி‘ தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்போருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி குண்டு வெடித்தது. பெங்களூரில் இருந்து அஸாம் மாநிலம் கௌஹாத்திக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், அன்றைய தினம் காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தது. அடுத்த சில நிமிடங்களில், படுக்கை வசதி கொண்ட இரண்டு பெட்டிகளில் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. 

இந்தக் குண்டு வெடிப்புகளில், 22 வயதான இளம்பெண் பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர். பலியான இளம்பெண்ணின் பெயர் சுவாதி என்றும், எம்.டெக் படித்த அவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பெங்களூரூவில்  பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. தனது பெற்றோரைச் சந்திக்க ஆந்திராவுக்கு ரயிலில் சென்றபோது, இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.


 
மேலும், அந்த ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்திருந்தது. அது சரியான நேரத்துக்கு வந்திருந்தால், குண்டு வெடிப்பு நடந்த நேரத்தில், ஆந்திராவுக்குள் நுழைந்திருக்கும். அதே நாளில், ஆந்திர மாநிலம் நெல்லூரில், பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அந்த பொதுக் கூட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் குண்டுகள் வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ‘சிமி‘ தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அம்ஜத்கான், ஜாகிர், சாதிக், ஷேக் மெக்பூப் ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இவர்கள் மத்தியபிரதேச மாநிலம் கன்ட்வா பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இவர்களை கைது செய்யும் வகையில், இவர்களின் இருப்பிடம் பற்றி நம்பகமான தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம், மொத்தம் ரூ.40 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அறிவித்துள்ளது.

தகவல் கொடுப்பவர்களைப் பற்றிய விவரம், ரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.



No comments:

Post a Comment