மாநில பிரிவின் போது திருப்பதி பெருமாள் கோயில், ஆந்திர எல்லைப் பகுதிக்குள் வந்த விட்டது. லட்டுக்கும் துட்டுக்கும் பேர் பெற்றது ஏழுமலையான் கோயில். மேலும் ஆந்திராவின் அடையாளமாகவே இருக்கிறது திருப்பதி. அப்படிப்பட்ட ஒரு அடையாளம் தெலுங்கானாவுக்கு தேவைபட்டது. உடனடியாக அவர்கள் பார்வை, யாதகிரிகட்டா மலைக் கோயில் மீது திரும்பியது.
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில், ஹைதராபாத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய மலைக் கோயிலாக அமைந்துள்ளது ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். பிரசித்தி பெற்ற இத்திருத்தலத்துக்கு ஏராளமான பகதர்கள் வருவது வழக்கம். யாதர் என்ற ரிஷி இம்மலைக் குகையில் தவம் புரிந்தார். அத்தவத்தின் பயனாக ஶ்ரீ நரசிம்மர் ஐந்து அவதாரங்களில் காட்சியளித்து யாதருக்கு அருள்புரிந்தார். இத்தல வரலாறு பற்றி ஸ்கந்த புராணத்திலும் ஒரு குறிப்பு இருக்கிறது. இத்தகைய தொன்மை வாய்ந்த திருத்தலத்தை பிரமாண்டமாக விரிவாக்கம் செய்து, திருப்பதிக்கு இணையாக உருவாக்கப்படும் என்று அறிக்கை அளித்தது தெலங்கானா அரசு.
அறிவிப்புக்கு பின் இந்த கோயிலுக்கு பக்தர் வரவு சற்று அதிகரித்துக் காணப்பட்டதாக கோயில் நிர்வாகம் கூறுகிறது. ஆண்டுக்கு 63 கோடியாக இருந்த வருமானம் தற்போது 74 கோடி ரூபாய் வரை அதிகரித்திருக்கிறதாம். இந்த தொகை 10 நாட்களிலேயே திருப்பதி பெருமாள் கோயிலின் உண்டியலில் சேர்ந்துவிடும். திருப்பதியின் வருமானத்தோடு ஒப்பிடும்போது, இவ்விரண்டுக்குமான இடைவேளி கி.மீ. கணக்கில் இருக்கிறது. மக்கள் வரவை கணக்கிடும்போது இடைவேளி தொடர்கிறது. முக்கிய நாட்களில் பக்தர்கள் வருகை அதிகபட்சம் 25,000 மட்டுமே. ஆனால், திருப்பதி பற்றி சொல்லவா வேண்டும். இருப்பினும் திருப்பதிக்கு நிகராக யாதகிரிகட்டாவையும் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தெலங்கானா அரசு.

அதன்படி, 2000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதுப்பொலிவுடன் கோயிலை கட்ட ப்ளான் உருவாக்கப்பட்டது. அதில் தற்போது உள்ள ராஜகோபுரம், 50 கோடி ரூபாய் செலவில் 100 அடி உயரத்துக்கு தங்க கோபுரமாக உருவாக்கப்பட உள்ளது. 14 ஏக்கர் பரப்பளவில் மலைப்பகுதி சீரமைக்கப்பட்டு, மலையைச் சுற்றி பிரகாரம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளில் மேலும் 300 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட இருக்கிறது.
இதைபோலவே இக்கோயிலைச் சுற்றியுள்ள ஒன்பது சிறு மலைக் கோயில்களை கண்டறிந்து மெருகேற்ற திட்டம் தீட்டியுள்ளது தெலங்கானா அரசு. திருப்பதிக்கு ஏழு மலை என்றால் தெலங்கானாவுக்கு ஒன்பது மலையாம்.
இந்தியா போன்ற நாட்டில் குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் ஓர் அரசு, வளர்ச்சி பணிகளை செய்கிறது என்றால் அது எப்படி சமத்துவமான அரசாக இருக்க முடியும். அது சமமான வளர்ச்சியா?

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு சுற்றுலாவும், ஆன்மிக தலங்களும் முக்கிய பங்காற்றுகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆனால், அவை இயற்கையாக அமைய வேண்டும். பணம் வருகிறது என்பதற்காகவும், போட்டிக்காகவும், செயற்கையாக உருவாக்கினால், அந்த திருத்தலத்தின் புனித தன்மை மக்கள் கண்களிலிருந்து தானாக மறைந்துவிடும். கோயிலை மக்கள் நாடிவருவதே தொன்மையான இடத்தில் தங்கள் பாதம்பட்டால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான். அந்த தொன்மையை மறக்கடித்துவிட்டு, மக்களுக்கு என்ன ஆன்மிக சேவையைத் தரப்போகிறது தெலங்கானா அரசு என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment